சுதந்திரக் கட்சி வேட்பாளர் தெரிவு நேர்முகப்பரீட்சை இன்றும் நாளையும்
ஐ.ம.சு.மு. கூட்டுக் கட்சிகள் வெற்றிலை சின்னத்தில் களமிறங்க முடிவு
ஐ.ம.சு.மு. கூட்டுக் கட்சிகள் வெற்றிலை சின்னத்தில் களமிறங்க முடிவு
பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியில் உள்ள சகல கட்சிகளும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ள தாகவும் கூட்டுக்கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் கள் கிடைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து சகல கூட்டுக் கட்சிகளுடனும் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக மூன்று வேட்பு மனுக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்றும் (8) நாளையும் (9) கொழும்பு மகாவலி நிலையத்தில் இடம்பெற உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இந்த வாரத்தில் பூர்த்தி செய்யப்படும் எனவும் வேட்பாளர் தெரிவில் ஏதும் அநீதி இடம்பெற்றிருந்தால் பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள வேட்பு மனு மேன்முறையீட்டு குழுவிற்கு மேன்முறையீடு செய்யலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வடமேல், வட மத்திய மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான வேட்பாளர் குழு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு முன்னிலையில் வேட்பாளர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று நடைபெறும் என மேற்படி வேட்பு மனுக் குழு உறுப்பினர் மேல் மாகாண சபை ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார்.
மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணத்தில் இருந்து வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. செனவிரத்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவும் இன்று கூடி வேட்பாளர்களை தெரிவு செய்ய உள்ளது.
தென், சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான வேட்பு மனுக்குழு முன்னிலையில் நாளை (9) இடம் பெறவுள்ளது. பிரதமர் தலைமையிலான வேட்புமனு மேன்முறையீட்டு குழுவில் அமைச்சர்களான தி. மு. ஜயரத்ன, மைத்திரிபால சிரிசேன, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ எம்.பி., சட்டத்தரணி டபிள்யூ. கருணாஜீவ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் கூட்டுக்கட்சி வேட்பாளர்களின் பட்டியல்கள் இந்த வாரம் கிடைக்கும் எனவும் அதன்படி 15 ஆம் திகதியளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் வேட்பாளர் பட்டியல் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் இந்த வாரத்தில் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கட்சி முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தேர்தலில் பல புதுமுகங்கள் போட்டியிட உள்ளதாகவும் சட்டத்தரணிகள், கலைஞர்கள் ஊடகவியலாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோர் இதில் அடங்குவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை கூட்டுக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் வேட்பாளர்களின் தொகை குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் தெரிவித்தார். இம்முறை தேர்தலில் பலம்வாய்ந்த வேட்பாளர் குழுவொன்றை நிறுத்த உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறின.
ஐ. தே. முன்னணி யானை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ள அதேவேளை ஜே. வி. பி. அடங்கலான சில கட்சிகள் அன்னச் சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
சரத் பொன்சேகாவுக்கு கட்சி பிரதித் தலைவர் பதவி வழங்கி அவரை ஐ. தே. மு. பட்டியலில் போட்டியிட வைக்க ஐ. தே.க. முயன்று வருகிற போதும் மேற்படி பதவியை ஏற்க சரத் பொன்சேகா மறுத்துள்ளதாக அறிய வருகிறது. இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் மு. கா. தனித்தா இணைந்தா போட்டியிடும் என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அறிய வருகிறது.
வடக்கு அரச நிறுவனங்களில் மும்மொழி பெயர்ப் பலகை
ரூ. 75 இலட்சம் அமைச்சு ஒதுக்கீடு
வடக்கிலுள்ள சகல அரசாங்க நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்க விடுவதற்காக நிதி ஒதுக்கியுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் நேற்று தெரிவித்தது.
இதன்படி வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சு செயலாளர் திருமதி எம். எஸ். விக்ரமசிங்க தெரிவித்தார்.
மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்த 75 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சகல அரச நிறுவனங்களிலும் மும் மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை பொருத்துவதில் வட மாகாணத்திலுள்ள மாவட்ட செயலாளர்கள் மிகவும் கரிசனை யாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வட மாகாணத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் மொழியை கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக செயலாளர் தெரிவித்தார். நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.
வவுனியா வடக்கு மீள்குடியேற்றம்
15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்
மீள்குடியேறுவோருக்கு 8900 வீடுகள் நிர்மாணம்
வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் படுவோர்க்கென 8 ஆயிரத்து 900 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கமைய ஐரோப்பிய ஆணைக்குழு 3 ஆயிரத்து 900 வீடுகளையும் உலக வங்கி 5 ஆயிரம் வீடுகளையும் கட்டிக் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்ப தாகவும் அவர் தெரிவித்தார்.
வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 75 ஆயிரம் பேரும் நண்ப ர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையிலுமே மீளக் குடியமர்த்தப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நிலக்கண்ணிவெடி அகற்றலில் ஏற்பட்ட தாமதத்தினால் சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீள்குடியேற்றப் பணிகள் கடந்த 02 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டு ள்ளன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 02 ஆம் திகதி பூநகரிக்கு ஆயிரம் பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேவேளை இன்று (08) கிளிநொச்சி மாவட்டம் கரச்சி பிரதேசத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கும் 300 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப் படவிருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் படுவோர்க்கென 8 ஆயிரத்து 900 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கமைய ஐரோப்பிய ஆணைக்குழு 3 ஆயிரத்து 900 வீடுகளையும் உலக வங்கி 5 ஆயிரம் வீடுகளையும் கட்டிக் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்ப தாகவும் அவர் தெரிவித்தார்.
வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 75 ஆயிரம் பேரும் நண்ப ர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையிலுமே மீளக் குடியமர்த்தப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நிலக்கண்ணிவெடி அகற்றலில் ஏற்பட்ட தாமதத்தினால் சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீள்குடியேற்றப் பணிகள் கடந்த 02 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டு ள்ளன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 02 ஆம் திகதி பூநகரிக்கு ஆயிரம் பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேவேளை இன்று (08) கிளிநொச்சி மாவட்டம் கரச்சி பிரதேசத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கும் 300 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப் படவிருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
இலங்கைரஷ்யாவில் கெளரவ டொக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட விழாவில் ஜனாதிபதி
ஜனாதிபதி மஹிந்தவுக்கு டொக்டர் பட்டம்; ரஷ்ய பல்கலைக்கழகம் கெளரவம்
உலக சமாதானத்துக்கு ஆற்றிய சீரிய பங்களிப்பு, பயங்கரவாதத்தை முறியடித்தமை மற்றும் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கல்வி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்தமைக்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மொஸ்கோ நட்புறவு (பட்ரிக் லுமும்பா) பல்கலைக்கழகம் விசேட கெளரவ டொக்டர் பட்டமொன்றை வழங்கி கெளரவித்துள்ளது.
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் கிரெம்ளின் மண்டபத்தில் வைத்து நட்புறவு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிலிபோவ் இந்த கெளரவ டொக்டர் பட்டத்தை நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு வழங் கினார். மொஸ்கோவின் பிபட்ரிக் லுமும்பாபீ பல்கலைக்கழகம் பின்னர் நட்புறவு பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது.
1995 முதல் உலகில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளும் சேவைகள் தொடர்பில் அரச தலைவர்களுக்கு இந்த டொக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
இந்த வகையில் மேற்படி டொக்டர் பட்டத்தை பெறும் 6 ஆவது அரச தலைவர் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.
இதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (07) ரஷ்ய தலைநகரில் ரஷ்ய புரட்சிக்கு முன்னரும் பின்னரும் அரச நிகழ்வுகள் இடம்பெற்ற கிரெம்ளின் மண்டபத்தை பார்வையிட்டார்.
அத்துடன் ரஷ்ய புரட்சியின் பின்னர் தொழிலாளர்களின் வெற்றியின் ஞாபகார்த்தமாக விளங்கும் செஞ் சதுக்கத்தையும் ஜனாதிபதி பார்வையிட் டார்.
கிரெம்ளின் நூதனசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார் மன்னர்கள் காலத்தில் உபயோகித்த உடைகள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை பார்த்தார்.
அதன்பின் 17ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயமொன்றுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார்.
உலக நாடுகளின் முதலீடுகளை கவரும் பிரபல கேந்திர சந்தையாக
வியாபார உலகில் நாம் இப்போது கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையானது உயர்ந்த மட்டத்தில் உள்ளது. சக்தி, மனித வளம், வங்கி நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான எதிர்கால திட்டங்கள் ஏற்கனவே பூரணப்படுத்தப்பட்டு ள்ளன. இந் நிலையில் வறுமை பிரச்சினையும் குறைந்து வருகிறது.
அது மட்டுமன்றி சர்வதேச ரீதியில் நாம் வளர்ந்து வரும் நடுத்தர வருமானத்தை பெறும் சந்தையை கொண்டுள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்த காரணங்களால் உலக நாடுகளின் பல்வேறு முதலீடுகளில் இலங்கை பிரபல சந்தை கேந்திரமாக மாறி வருகிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் நட்புறவு பல்கலைக்கழகம் ஜனாதிபதிக்கு கெளரவ டொக்டர் பட்டம் வழங்கி கெளரவித்ததையடுத்து உரையாற்றியபோது தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:-
ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம் எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி அல்ல. அது இலங்கை மக்கள் அனைவ ருக்கும் கிடைத்த பொதுவான வெற்றியாகும்.
இந்தப் பட்டம் வழங்கப்படுவதற்கு உலக சமாதானத்துக்கு நாம் ஆற்றிய பங்களிப்பே காரணம் என்று பட்டம் வழங்கல் தொடர்பான குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முழு உலகிலும் கொடூரமான புலிகள் பயங்கரவாத சவால் மக்களின் அமைதி, செளபாக்கியம் மட்டுமன்றி உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது.
பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க நாம் மேற்கொண்ட முயற்சிகள் பயங்கர வாதிகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்தே நாம் யுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பணயக் கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்திருந்த பொது மக்களை பாதுகாக்க நாம் மனிதாபிமான நடவடிக்கையில் இறங்கினோம்.
இதனையடுத்து நான் உங்கள் முன் மக்கள் ஆணையை மீண்டும் கேட்டேன். நியாயமான அமைதியான தேர்தல் மூலம் சில தினங்களுக்கு முன் உங்களால் தெரிவாகிய நான் இன்று இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக உங்கள் முன் தோன்றுகிறேன்.
அந்த தேர்தலில் எதிர்க்கட்சியினால் மேற்கொண்ட வன்முறைகளுக்கு மத்தியில் சமாதானம், ஜனநாயகம் மற்றும் முன்னேற்றம் கருதி மக்கள் 58 சதவீத அதிக வாக்குகளால் என்னை மீண்டும் தெரிவு செய்துள்ளனர்.
கடந்த நான்கு வருடங்களில் அபிவிருத்தி என்ற ரீதியில் இது வரை இருந்ததற்கு மேலான இடத்துக்கு எனது நாட்டை கொண்டு செல்ல எனக்கு முடிந்திருக் கிறது.
உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எமது பொருளாதார நிலை கடந்த நான்கு வருடங்களில் மேலும் வலுவடைந்துள்ளது.
அத்துடன் மக்களின் சமூக கலாசாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் எமது நிலையில் முன்னேற்றத்தை காண முடிகிறது.
இலங்கை மக்கள் என் மீது வைத்துள்ள விசுவாசத்தையிட்டு நான் என்ன பிரதியுபகாரம் செய்யப் போகிறேன் என்ற எண்ணம் எனது 40 வருட கால அரசியல் வாழ்க்கை முழுவதும் இருந்து வந்துள்ளது.
நாட்டை ஐக்கியப்படுத்தியதையடுத்து நாட்டு மக்களின் மன வேதனையை தீர்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது எனது பூரண நம்பிக்கை.
எமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். நட்புறவு பல்கலைக்கழ கமானது பல்வேறு இன, வர்க்க, மற்றும் மதங்களை சேர்ந்தவர்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு நிறுவனமாகும்.
இந்த பல்கலைக்கழகத்தின் ஆரம்ப கர்த்தாவான பட்ரிக் லுமும்பாவின் உன்னத நோக்கம் ஒருவரின் அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும் அவருடன் நட்புறவை பேணுவதாகும். எதிர்காலத்தில் முகம் கொடுக்க நேரும் பாரிய சவாலின் போதும் நான் இந்த கொள்கையையே பின்பற்றப் போகிறேன்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடு களில் உள்ள ஆயிரக்கணக்கானோ ருக்கு உயர்ந்த மட்ட பல்கலைக்கழக கல்வியை மனித குலத்துக்கு வழங் கும் உன்னத சேவை பங்களிப்பினை மேற்கொள்ளும் நிறுவனமான நட் புறபு பல்கலைக்கழத்தின் 50 ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் சந்தர்ப் பத்தில் உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
அத்துடன் எனது இளைய சகோதரர் இந்த சிரேஷ்ட பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்று கூறிக் கொள்வதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.
அத்துடன் 70 ஆம் ஆண்டுகளில் இந்த உன்னத பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் பாக்கியம் எனக்கு கிடைத்திருந்ததையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும் என்று ஜனாதிபதி அங்கு கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக