10 டிசம்பர், 2010

கிளிநொச்சியில் 22,000 பேர் பாதிப்பு; 1000 ஏக்கர் வயல் நிலம் வெள்ளத்தில் நாநூறுக்கும் மேல் கால்நடைகள் உயிரிழப்பு



அடைமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 5628 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 564 பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் நேற்று தெரிவித்தார்.

இம் மழை காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் நானூறு கால் நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் அவர் குறிப் பிட்டார்.

ஜனாதிபதி செயலணியின் அங்கீ காரத்தோடு மழையால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்தும் சமைத்த உணவு, நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; அடைமழையினால் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் 2327 குடும்பங்களைச் சேர்ந்த 8010 பேரும், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் 2612 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 789 பேரும், பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் 689 குடும்பங் களைச் சேர்ந்த 2786 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 764 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாய், நுளம்பு வலைகள், சவர்க்காரம், குழந்தைகளுக்கான உடுதுணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன என்றார்.

அடைமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்கள் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக