24 அக்டோபர், 2010

உள்ளூராட்சி தேர்தல் சட்ட மூலம்: அடிமட்ட மக்களுக்கும் அதிகாரம் கிடைக்க வழியேற்படுகிறது

யோசனைகளை சமர்ப்பிப்பதை விடுத்து எதிர்ப்பதால் பலன் இல்லை
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத் தின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களைப் பலப்படுத்துவது அடிமட்ட மக்களுக்கும் அதிகாரம் கிடைக்க வழியேற்படுவதாக முன்னாள் அமைச்சரும் மலையகத் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய ஒருங்கிணைப் பாளருமான பீ. பீ. தேவராஜ் ‘வாரமஞ் சரி’க்குத் தெரிவித்தார்.

இந்தச் சட்டமூலத்தில் உள்ள குறைகளை நிவர்த்திப்பதற்கான திருத்த ஆலோ சனைகளைச் சமர்ப்பிப் பதைவிடுத்து எதிர்ப்பதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் வட்டார முறையும் விகிதாசார முறை யும் கலந்து வருவதில் சிறு பான்மையினருக்குப் பாதிப் பில்லை. என்னவாக இருந்தாலும் அரசாங்கம் கொண்டு வரும் யோச னையை எவ்வாறு நடைமுறைப் படுத்தப் போகின்றது என்பதைப் பார்க்க வேண்டும்.

குறைபாடுகள் இருந்தால், நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகளை நாம் முன்மொழிய வேண்டும்’ என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் தேவராஜ், உள்ளூராட்சி மன்றங்களைப் பலப்படுத்தி மத்திய அரசாங்கம் நேரடியாகக் கையாள்வதற்கான யோசனை இருப்பதால், மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வு குறைந்துவிடும் எனச் சிலர் கருதுகிறார்கள். அவர்களது கண்ணோட்டம் அதுவாக உள்ளது.

ஆனால், உள்ளூராட்சி மன்றமொன்றில் சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் கட்டாயமானது (ணிஹடூனீஹசிச்ஙுஞி) எனச் சொல்லப்பட்டுள்ளது. ஒரு சபைக்குள் சகல இனப் பிரதிநிதித்துவமும் இடம்பெறும் வகையிலேயே பட்டியல் இடப்படும். சிறு சிறு பிரதேசங்களைப் பிரிக்காமல் குறிப்பிட்ட மக்களின் செறிவினைக் கொண்டிருக்கும் சபையினை நாம் முன்மொழிய முடியும். புதிதாக சில கிராம சேவையாளர் பிரிவுகளையும், பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரேரிக்க முடியும். இதற்கு மக்கள் கூடுதல் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக