24 அக்டோபர், 2010

இலங்கையின் பொருளாதாரம்; நாணய நிதியம் திருப்தி


இலங்கையின் பொது நிதிக் கையாள்கை பலமான முன்னேற்றத்தைக் கண்டிருப்பதுடன் உள்ளூர்ப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதார திட்டங்களை முன்னெடுக்கும் விதம் தமக்குத் திருப்தியளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது நிதிக் கையாள்கை மற்றும் மூலதனச் சந்தை, வர்த்தக அபிவிருத்தி போன்றவற்றில் மேலும் முன்னேற்றம் காணப்படுவதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து நாணய நிதியம் திருப்தி தெரிவித்துள்ளது.

சமூகச் செலவீனங்களுக்குக் கூடுதலான வரிகளை அறவிட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் சிபாரிசு செய்திருப்பதாகவும், புனரமைப்பு மற்றும் உட்கட்டுமானப் பணிகளில் கூடுதல் முதலீடுகள் செய்ய வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக