24 அக்டோபர், 2010

இரண்டு தசாப்தங்களில் இலங்கை பொருளாதார அபிவிருத்தியை எட்டும் - ஜேர்மன் தூதுவர்

இரண்டு தசாப்தங்களில் இலங்கை பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடாக மாறிவிடும் என இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜென் புளெட்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே ஜேர்மன் தூதுவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையை பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றிவிடும் என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜேர்மன் தொடர்ந்து ஆதரவு வழங்கும்.

இதன் ஒரு அங்கமாகக் கிழக்கு மாகாணத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்குத் தொழில்சார் பயிற்சிகளை வழங்கவுள்ளோம். இத்திட்டத்துக்கு மூன்று மில்லியன் யூரோ செலவிடப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி மற்றும் கணனிப் பயிற்சிகள் வழங்கப் படும்.

இதற்கு மேலதிகமாக அவர்களுக்கு மேசன் தொழில், தச்சுத் தொழில் மற்றும் மின் இணைப்பு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் முடிவில் 2000 இளைஞர், யுவதிகள் சிறந்த எதிர் காலத்தைப் பெற்றிருப்பார்கள் என்று தெரிவித்தார்.

இதேவேளை கட்டமானப் பயிற்சியாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் காணப்படும் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு ஜேர்மன் உதவிகளை வழங்க முன்வந்திருப்பதாக நிர் மாண மற்றும் பொறியியற்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஈ.ஏ. ஏக்க நாயக்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக