இலங்கையிலுள்ள பிரபல்யமான ஐந்து பல்கலைக்கழகங்கள் சர்வதேச பல்கலைக் கழகமாக தரமுயர்த்தப்படவுள்ளன. இதேபோன்று பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ள வெளிவாரி மாணவர்களின் கல்வித் தரம் தொடர்பாகவும் புதிய நடைமுறைகளை கடைப்பிடிக்க வுள்ளதாக பல்கலைக்கழகங்களின் மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
வருடாந்தம் பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 21,000 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படும் போது சுமார் 50,000 மாண வர்கள் வெளிவாரியாக சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர். பட்டதாரிகளாக வெளியேறும் இவர்களுக்கு தகுந்த தொழிலை பெற்றுக் கொள்வதற்கும் திறமையானவர்களாகவும், தரமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்புதிய நடைமுறை செய்யப்படுகிறது.
இது எவ்வகையிலும் வெளிவாரி மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை அல்ல என்றார். அத்துடன் பல்கலைக்கழக கல்வி இன்று உலகத்தில் சர்வதேச தரத்தில் இருக்கும் நிலையில் இலங்கையிலும் பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும்.
கொழும்பு, பேராதனை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் மொரட்டுவ பல் கலைக்கழகங்களை முதற் கட்டமாக சர்வதேச தரத்துக்கு தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவை ஒக்ஸ்போர்ட், ஹாவர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் போன்று தரமுயர்த்தப்படும் போது வெளிநாட்டு மாணவர்களுக்கும் இங்கு வந்து கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
எமது பல்கலைக்கழகங்களின் தரம் உயர்த்தப்பட்டு பாரிய மாற்றங்களை காணும் பட்சத்தில் எமது நாட்டைவிட்டு சென்றுள்ள புத்திஜீவிகள் மீண்டும் இலங்கை வருவார்கள். எமது நாட்டிலிருந்து வெளியேறும் செலாவணி எமது நாட்டிற்குள்ளேயே தங்கிவிடும்.
வெளிவாரி மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையை தரமானதாக மாற்றும் அதேவேளை மேலே குறிப்பிடப்பட்ட மாற்றங்களை உருவாக்குவதற்காக உயர் கல்வி அமைச்சு பல்கலைக்கழக கட்டமைப்புக்களுக்கான திருத்தங்களை செய்து வருகிறது.
உள்வாரி மாணவர்களுக்கு மட்டுமன்றி வெளிவாரி மாணவர்களை சேர்த்துக்கொள் ளும் போதும் ஆங்கில அறிவு கட்டாயமாக கருதப்படுவதுடன், கணனி அறிவும் முக்கியமாக கருதப்படும். வெளிவாரி மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் விடயம் பற்றிய முழுமையான சுற்று நிருபம் சகல பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பது தொடர்பாக அரசு உறுதியான நிலைப் பாட்டில் உள்ளது.
இலங்கையிலிருந்து வருடாந்தம் 8000 முதல் 10,000 வரையிலான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். உலகில் வருடாந்தம் 2.8 மில்லியன் மாணவர்கள் வெளிநாட்டுக்கு கல்விக்காக செல்கின்றனர். இத்தொகை 8 மில்லியன் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்களின் தேவை இன்று உலகில் அதிகரித்து வருகிறது. இலங்கையிலும் தனியார் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கு முதலில் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்படுவதுடன் பல்க லைக்கழகங்களின் தரத்தை நிர்ணயிப்பதற்கான குழுவும் அமைக்கப்படும் என்றும் பேராசிரியர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக