7 ஜூலை, 2010

புதையல் தோண்டியவர்களுக்கு விளக்கமறியல்- கண்டி நீதவான் உத்தரவு

அக்குறணையில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேரை அளவத்தகொட பெலிஸார் கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி கண்டி நீதவான் தனுஜ ஜெயதுங்க உத்தரவிட்டார்.

அக்குறணை நீரெல்ல பகுதியில் புதையல் தோண்டும் பணியில் ஏழு பேர் ஈடுபட்டிருந்ததாகப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு பொலிஸார் விரைந்த போது மூவர் ஓடித் தப்பியுள்ளனர். ஏனைய நால்வரையும் பெலிஸார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து பூஜைக்குத் தேவையான கற்புரம் உற்பட இன்னும் சில பொருட்களையும் பூமிக்குக்கீழாக இஸ்கேன் செய்யும் ஸ்கேன் இயந்திரம் ஒன்றையும் மற்றும் அகழ்வு உபகரணங்கள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பாரிய மட்டத்தில் புதையல்தோண்டும் ஒரு குழுவாக இவர்கள் இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக