10 ஜூலை, 2010

ஐ.நா. பிரதிநிதியை நியுயோர்க் அழைத்தமை பான் கீ மூனின் அவசரப்பட்ட நடவடிக்கை




அரசாங்கம் கவலை; பிராந்திய அலுவலகமே மூடப்பட்டதென்கிறார் ஜீ.எல்



ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலக விவகாரத்தில் செயலாளர் நாயகம் பான் கீ-மூன் அவசரப்பட்டு விட்டதாக அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.

ஐ.நா. வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூஹ்னேயை கலந்துரையாட லுக்காக நியூயோர்க் அழைத்தமை பான் கீ மூனின் அவசரப்பட்ட நடவடிக்கையாகு மென்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எஸ்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பான் கீ மூனின் இந்த நடவடிக்கையை யிட்டு அரசாங்கம் கவலையடைவதாகவும் வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின்போது பேராசிரியர் தெரிவித்தார்.

ஐ. நா. சபையின் கொழும்பு அலுவலகப் பணிகள் இடை நிறுத்தப்பட்டு வதிவிடப் பிரதிநிதி திருப்பி அழைக்கப் பட்டதாக வெளியான செய் திகளை நிராகரித்த பேராசிரியர் பீரிஸ், நீல் பூஹ்னே கலந் துரையாடலுக்காகவே அழைக் கப்பட்டுள்ளதாகவும் அது வழமையான செயற்பாடென்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு அலுவலகத்திற்குப் பூரண பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியிருக்கிறது என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், ஐ.நா. கொழும்பு அலுவலகத்திற்கு எந்தத் தீங்கோ, ஆபத்தோ, அச்சுறுத்தலோ ஏற்படாது என்று அரசாங்கம் நியூ யோர்க்கிற்கு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“ஐ. நா. அலுவலகப் பணிகள் மீண்டும் தொடரும். இது ஓரிரண்டு மணித்தியா லத்தில் தீர்க்கக் கூடிய பிரச்சினையன்று. எவ்வாறெனினும், இந்த வார இறுதிக்குள் அரசாங்கம் முடிவொன்றை எடுக்கும்” என்று குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று எட்டப்படுமென்றும் சொன்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக