9 நவம்பர், 2009

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பி.ச. உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் பலர் அரசாங்கத்தில்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள்,ரெலோ உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உள்ளிட்ட 26 பேர் ஜனாதிபதியை சந்தித்து சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டனர். இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை 5.40 மணியளவில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஏழு பேர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில அமைப்பாளர் உள்ளிட்ட ஏனைய இரு பிரதேச சபை உறுப்பினர்களும் ரெலோ இயக்க உறுப்பினர்கள் பதினொருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அங்கம் வகித்து ஐ.தே.க வில் போட்டியிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் கட்சி விலகியோரில் அடங்குவர்.

எதிர்க் கட்சிகளில் இருந்துகொண்டு தமது மக்களுக்கு சேவை செய்ய முடியாதென்றும் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதற்காகவே தாம் சுதந்திரக் கட்சியில் இணைவதாகவும் சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருடன் இன்னும் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அரசாங்தில் இணைந்துகொண்ட ஐ.தே.க மற்றும் த.தே.கூ உறுப்பினர்கள் விபரம்:

ஐ.தே.க

சுனில் சாந்த பெரேரா – முன்னாள் அமைப்பாளர் – சேருவில சந்தன கருணாதிலக்க – பிரதேச சபை உறுப்பினர் – கந்தளாய் சரத் லொரன்சுஹேவா – முன்னாள் அமைப்பாளர் – திருகோணமலை

த.தே.கூ

வி.சுரேஷ்குமார் – உபதலைவர் – உப்புவெளி பி.ச கே.வைரவநாதன் உறுப்பினர் – உப்புவெளி பி.ச டீ.பாலசுப்பிரமணியம் உறுப்பினர் – உப்புவெளி பி.ச எஸ்.கௌரி முகுந்தன் தலைவர் – திருகோணமலை ந.ச டீ.கந்தரூபன் தலைவர் – உப்புவெளி பி.ச யு.ரவிகுமார் – உறுப்பினர் – குச்சவெளி எஸ்.சிவகுமார் – உறுப்பினர் – புளியங்குளம் உப்புவெளி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக