9 நவம்பர், 2009

இலங்கையர்கள் 78பேரையும் இலங்கைக்கு நாடு கடத்த வேண்டுமென ஆஸி. செனற்சபைத் தலைவர் தெரிவிப்பு

-

ஓசியானிக் வைகிங் என்னும் அவுஸ்திரேலியக் கப்பல்மூலம் இந்தோனேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர்கள் 78பேரும் மீளவும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய செனற்சபைத் தலைவர் பானர்ஸ் ஜோய்ஸ் தெரிவித்துள்ளார். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறிந்து அவ்விடத்திற்கே திருப்பியனுப்ப வேண்டுமென்பதுடன், இப்படியாக வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை மட்டுப்படுத்தும் நோக்கில் சட்டங்கள் மேலும் வலுவானதாக மாற்றம் செய்யப்பட வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். இந்தோனேசியக் கடற்பரப்பில் அவுஸ்திரேலியக் கடற்படையினரால் மீட்கப்பட்ட இவர்களை இந்தோனேசியாவிற்கு அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கடந்த இருவாரங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி இதுவரை கைகூடவில்லை. இந்நிலையில் தாம் அவுஸ்திரேலியா தவிர்ந்த வேறு நாடுகளுக்கு செல்ல விரும்பவில்லையென அவர்களும் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக