23 அக்டோபர், 2009

21.10.2009 தாயகக்குரல் 24

யுத்தத்தால் இடம் பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமிழ் மக்கள் இலங்கை அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருப்பது போலவே தமிழக அரசியல் அரங்கிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். இந்த மக்கள் தொடர்பான பிரச்சினைகள் மனிதாபிமான அடிப்படையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை விட இலங்கையிலோ அல்லது தமிழ் நாட்டிலோ இவர்களை அரசியல் கட்சிகள் தமது அரசியல் நலனுக்கு துரும்புச் சீட்டாக முக்கியத்துவப்படுத்துகின்றன என்பதுதான் உண்மை.
வடக்கு கிழக்கில் உள்ள நிவாரணக் கிராமங்களை பார்வையிட்டு அங்குள்ள நிலைமைகளை ஆராயவென அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு வடக்கில் இடம் பெயர்ந்த மக்களை பார்வையிட்டு சென்றனர். இவர்கள் விஜயம் குறித்து இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் உள்ள எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. இவர்கள் விஜயம் தொடர்பான சர்ச்சைகள் தமிழ் நாட்டில் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
இந்திய பாராளுமன்றக் குழுவில் இடம்பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் நிவாரணக் கிராமங்கள் பற்றி திருப்தி தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த குழுவில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பங்குபற்றிய தொல் திருமாவளவன் இங்கு அடக்கி வாசித்தவர் தமிழ் நாட்டில் சென்று நிவாரணக் கிராமங்கள் பற்றி கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். இவர் புலிகளின் ஆதரவாளன் என்பது யாவரும் அறிந்ததே.
நிவாரணக் கிராமங்கள் குறித்து தமிழகத்தில் வைக்கப்படும்; குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். முகாம்களில் பாடசாலைகள் நடக்கின்றன. மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்கிறார்கள். .பாடசாலை செல்லாத இளைஞர் யுவதிகள் தொழில் கல்வி கற்கிறார்கள். முகாம்களில் வெளியாருடன் தொடர்புகொள்ள தொலைபேசி வசதிகள், தேவையான பொருட்களை வாங்க நியாயவிலைக் கடைகள் போன்ற வசதிகள் இருந்தாலும் அங்குள்ள மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்வதையே விரும்புகிறார்கள் எனவும் அமைச்சர் அழகிரி தெரிவிததிருந்தார்.
நாடு திரும்புமுன் தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த திருமாவளவன், நிவாரணக் கிராமங்களை வதை முகாம்கள் என்றே அடிக்கடி குறிப்பிட்டிருந்தார். இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்தியாவை நம்பியிருக்காமல் தமிழ் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயக வழியில் போராடவேண்டும் எனவும் அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற குழுவின் அறிக்கை கருணாநிதியின் அனுமதியுடன் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவ்வறிக்கை தொடர்பாக ஆராய்ந்துள்ளது. தொடர்ந்து அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு முதல் அமைச்சருடன் மத்திய உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சர் ப.சிதம்பரம் தமிழக பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயம் குறித்து பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் இலங்கை அரசாங்கம் அகதிகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அந்தக் குழு பட்டியல்படுத்தியுள்ளதாகவும் இலங்கை அரசு அதன் வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்வாறு அதற்கு உதவுவது என்று ஆராய்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் நலனுக்கு 500 கோடி இந்திய ரூபா நிதியினை இந்தியா வழங்கத் தயாராக உள்ளதாகவும் இந்த நிதி தொடர்பான திட்ட அறிக்கையை இலங்கை சமர்ப்பித்த பின்னரே இந்த நிதியுதவி வழங்குவது குறித்து சிந்திக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயம் குறித்த தமிழக எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்த தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயத்தின் பின்னர் இலங்கை அரசு மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தியுள்ளதாகவும் முதல் கட்டமாக 15 நாட்களில் 58 ஆயிரம் பேர் முகாம்களில் இருந்து அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் தெரிவித்திருந்தார்.
அதேவேளை கடந்த வியாழக்கிழமையில் இருந்து நிவாரணக் கிராமங்களில் உள்ள வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 50ஆயிரம்பேரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமிழ் மக்களைப் பார்வையிட வந்த இந்திய பாராளுமன்றக் குழு எமது நாட்டின் நிலைமையைப் புரிந்து கொண்டு இலங்கைக்கான உதவிகளை மேலும் அதிகரிக்க வழிவகுத்துள்ளனர் எனவும் இந்தியா வழங்கவுள்ள 500கோடி நிதியுதவிக்குமான திட்டங்களை அறிவிக்கும்படி இந்தியா இலங்கையிடம் கேட்டுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்தியா கேட்டதன்படி இந்திய அரசாங்கம் வழங்கவுள்ள 500 கோடி இந்திய ரூபாவும் மடுவிலிருந்து தலைமன்னார், மற்றும் ஓமந்தையிலிருந்து பளைக்கிடையிலான புகையிரதப் பாதைகளை புனரமைக்கவும், புகையிரதப் பெட்டிகளை கொள்வனவு செய்யவும், துரையப்பா விளையாட்டரங்கை புனரமைக்கவும், யாழப்பாணத்தில் கலாச்சார நிலையம் அமைக்கவும் பயன்படுத்தப்படும் எனவும் இதற்கான திட்ட அறிக்கையை விரைவில் இந்தியாவுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் யாப்பா தெரிவித்துள்ளார்.
சிறைகளில் எவ்வித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 600 தமிழ் கைதிகள் தொடர்பாக துரிதவிசாரணை நடத்தவென விசேட நீதிமன்றம் ஒன்றை அமைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதே நேரம் சட்டமா திணைக்களத்தின் ஆலோசனைக்கேற்ப 10 சட்டதரணிகளை நியமித்து தமிழ் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தவுள்ளதாகவும் நீதி, சட்டமறுசீரமைப்பு பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இந்திய பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயம் எதிர்கட்சிகள் கூறுவதுபோல் பயனற்றது என கூறமுடியாது. அவர்களால் பெரிதாக சாதிக்கமுடியாவிட்டாலும் இலங்கை அரசின் செயல்பாட்டை கொஞ்சம் முடுக்கிவிட்டுள்ளது என்பதை ஏற்கத்தான் வேண்டும்.
மன்னார் மீள்குடியேற்ற நிகழ்வில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பங்கேற்பு-

சித்தார்த்தன்

புளொட் தலைவர் சித்தார்த்தன்

மன்னாரின் மாந்தைப் பகுதியில் மீள்குடியேற்றப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று முதற்கட்டமாக அங்கு 1300பேர் குடியேற்றப்பட்டுள்ளனர். இந்த இரண்டு, மூன்று தினங்களுக்குள் 12ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 41,685 மக்கள் வன்னியின் மன்னாரிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு துணுக்காய் உள்ளிட்ட பகுதிகளிலும் மீள்குடியேற்றப்படுகின்றனர். இதற்கான ஆரம்பவிழா வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ச எம்.பி தலைமையில் இன்றுமுற்பகல் மாந்தையில் இடம்பெற்றது. இதில் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சர் ஜெகதீஸ்வரன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.கிஷோர், முன்னைநாள் ரி.யூ.எல்.எவ் பாராளுமன்ற உறுப்பினர் சூசைதாசன், இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய, சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஜெகத் பாலசூரிய ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த மீள்குடியேற்ற ஆரம்ப நிகழ்வில் புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில், இந்த மக்களை மீளக்குடியேற்ற வேண்டுமென்பதை நீண்ட காலமாக நாம் வலியுறுத்தி வந்துள்ளோம். இப்போது இந்தக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது எமக்கும் இம்மக்களுக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு விடயமாகும். இம்மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருந்த நிலையில் இறுதியாக இடம்பெயர்ந்த இம்மக்கள் செட்டிகுளம் நலன்புரி நிலையங்களைச் சேர்ந்துள்ளனர். இவ்வாறு வந்துசேர்ந்த மக்கள் எப்போது மீள்குடியேற்றப்படுவார்கள் என பலரும் கேள்விக்குறிகளை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், இந்தக் குடியேற்றங்களை சிறந்தமுறையில் ஆரம்பித்திருப்பதை நாம் பெரிதும் வரவேற்கிறோம். இம்மக்களை மீண்டும் அமைதியாக தங்களுடைய சொந்தக் கால்களில் வாழவைப்பதற்கு நாங்களும் எமது முழுமையான முயற்சிகளை எடுப்பதுடன், அர்ப்பணிப்புடனான பங்களிப்பினையும் செலுத்துவோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் 2,583குடும்பங்களைச் சேர்ந்த 8,643பேர் வவுனியாவிலும், 2,644குடும்பங்களைச் சேர்ந்த 6,631பேர் மன்னாரிலும், 4,415குடும்பங்களைச் சேர்ந்த 16,394பேர் முல்லைத்தீவிலும், 2,453குடும்பங்களைச் சேர்ந்த 10,017பேர் கிளிநொச்சியிலும் இந்த இரண்டு, மூன்று தினங்களில் மீள்குடியமர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் மறுவாழ்வுக்கான நிதியை இலங்கை அரசுக்கு வழங்கக் கூடாது : திருமாவளவன்




















மறுவாழ்வுக்காக இலங்கை அரசுக்கு இந்திய அரசு நிதி உதவி வழங்கக்கூடாது. நேரடியாகத் தமிழ் மக்களுக்கு உதவுவதே நல்லது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்ஷவை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதையும், மனித உரிமை மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்காக இலங்கை அரசின் மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சென்னை மெமோரியல் அரங்கம் முன் இன்று காலை (22. 10. 09) பத்து மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பேசிய தொல். திருமாவளவன்,

"நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தும் கோரிக்கைகளே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இதற்கும் சமீபத்திய இலங்கைக்கு பயணம் செய்த இந்திய நாடாளுமன்ற குழு சமர்பித்த அறிக்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

நாடாளுமன்ற அறிக்கையில் கூறுப்பட்டது அனைத்தும் உண்மையே. நாடாளுமன்ற குழுவின் பயணத்தைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த கோரிக்கைகளை விடுதலை சிறுததைகள் கட்சி முன்வைக்கிறது.

அதே தருணத்தில் நான் இலங்கைக்குச் சென்று, எம்முடைய தொப்புள் கொடி உறவுகளைச் சந்தித்து, ஆறுதல் கூறியபோது, அங்குள்ளவர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்த கருத்து என்னவெனில், தம்மைத் தமது சொந்த இடத்திலேயே மீள குடியமர்த்தவேண்டும் என்பதே.

எங்களுடைய பயணத்தின் போது இது குறித்து ராஜபக்ஷவிடம் பேசினோம். அதன் விளைவாக இதுவரை 58,000 தமிழர்கள் தங்களின் இருப்பிடத்திற்கு மீள குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

அதே தருணத்தில் இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம். எக்காரணத்தை முன்னிட்டும், ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்கென்று கூறி, இலங்கை அரசுக்கு நிதி உதவி அளிக்கக்கூடாது.

காரணம் அவை யாவும் முறையாக ஈழத்தமிழர்களுக்குச் சென்றடைவதில்லை என்பதை கண்கூடாக நான் கண்டிருக்கிறேன். எனவே நேரடியாகத் தமிழ் மக்களுக்கு உதவுவதே நல்லது. தற்போது அறிவித்துள்ள 500 கோடி ரூபா நிதி உதவியை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கவில்லை" என்றார்.
புளொட் முக்கியஸ்தர் ஜி.ரி.லிங்கநாதன் யாழ் விஜயம்
































வடமாகாண உள்ளுராட்சி மாநாடு யாழ். மத்திய கல்லூரியிலும், யாழ். வீரசிங்கம் மண்டபத்திலும் கடந்த 18ம் மற்றும் 19ம் திகதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்கென புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா நகரபிதாவும், வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான விசுபாரதி எனும் ஜி.ரி.லிங்கநாதன், தமிழ்க்கூட்டமைப்பின் வவுனியா நகரபிதா எஸ்.என்.ஜி நாதன், புளொட் வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ்.குமாரசாமி, தமிழ்க்கூட்டமைப்பு வவுனியா நகரசபை உறுப்பினர் சுரேந்திரன், நகரசபையின் செயலர் ஜெயராஜ் உள்ளிட்ட குழுவினர் இரண்டுநாள் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றிருந்தனர். இதன்போது வடமாகாண உள்ளுராட்சி திணைக்களத்தினால் யாழ். மத்திய கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கண்காட்சி நிகழ்விலும் இவர்கள் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட் வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ்.குமாரசாமி, தமிழ்க்கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் சுரேந்திரன் ஆகியோர் வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினர். பின்னர் ஜி.ரி.லிங்கநாதன், எஸ்.குமாரசாமி ஆகியோர் அரசஅதிபர் கே.கணேஸ் அவர்களை சந்தித்தனர். மற்றும் இவர்கள் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கும், மானிப்பாய் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவர் திரு.சித்தார்த்தன் அவர்களின் தந்தையுமான தர்மலிங்கம் அவர்களின் நினைவாலயத்திற்கும் சென்றதுடன், தர்மலிங்கம் அவர்களின் துணைவியாரையும் சந்தித்துள்ளனர். அத்துடன் வணக்க ஸ்தலங்களுக்கும், யாழ்.பொது நூலகத்திற்கும் இவர்கள் விஜயம் செய்துள்ளனர்

plote-visukumar-jaffna-0531plote-visukumar-jaffna-0621plote-visukumar-jaffna-0731plote-visukumar-jaffna-0741plote-visukumar-jaffna-0871plote-visukumar-jaffna-0921

plote-visukumar-jaffna-0951plote-visukumar-jaffna-0971plote-visukumar-jaffna-1011plote-visukumar-jaffna-1041plote-visukumar-jaffna-1111plote-visukumar-jaffna-1141plote-visukumar-jaffna-1161

plote-visukumar-jaffna-1201plote-visukumar-jaffna-1221plote-visukumar-jaffna-1241plote-visukumar-jaffna-1301plote-visukumar-jaffna-1321plote-visukumar-jaffna-1581plote-visukumar-jaffna-1591plote-visukumar-jaffna-1661plote-visukumar-jaffna-1701plote-visukumar-jaffna-1711plote-visukumar-jaffna-1871plote-visukumar-jaffna-1881plote-visukumar-jaffna-1901plote-visukumar-jaffna-1921plote-visukumar-jaffna-1931plote-visukumar-jaffna-2301plote-visukumar-jaffna-2321plote-visukumar-jaffna-2471plote-visukumar-jaffna-2501plote-visukumar-jaffna-2571plote-visukumar-jaffna-2581plote-visukumar-jaffna-2621



ஜனாதிபதி இன்று காலை வியட்நாம் விஜயம்
மஹிந்த ராஜபக்ஷ
இன்று 4100.தமிழ் மக்கள் கிளிநொச்சி முல்லை தீவு மாவட்டங்களில்குடி அமர்த்தப்படவுள்ளனர் கன்னிவெடி அகற்றப்பட்ட இடங்களில் இதே போன்று
அனைத்து மக்களும் அவர்களது சொந்த இடங்களுக்கு விரைவாக அனுப்பப் பட்டு அவர்கள்கை நிம்மதியாக வாழ வைத்து ஒரு அரசியல் தீர்வையும் மேற்கொண்டால் நிச்சயம் அடுத்த ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஷதான்
இன்று காலை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ளார். அந்நாட்டு அரசின் அழைப்பை ஏற்று அவர் அங்கு விஜயம் செய்திருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லவும் ஜனாதிபதியுடன் வியட்நாம் சென்றுள்ளார்.

இரு நாட்டின் சமூக, பொருளாதார விடயங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
வவுனியாவிலிருந்து 2000இற்கும் மேற்பட்டோர் யாழ். அனுப்பி வைப்பு

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில், யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்து, இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களுக்கு, மீள் குடியேற்ற கொடுப்பனவாக ஐயாயிரம் ரூபாவை சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம்,கோப்பாய், நல்லூர் பிரதேச செயலகங்களைச் சோந்தவர்கள் இரண்டாவது நாளாகவும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதேவேளை, வவுனியாவில் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருநூற்று நாற்பத்து நாலு பேர் ஜ.ஒ.இ.எம் நிறுவனத்தின் உதவியுடன் தனியார் பஸ்களில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் வசதிகளை தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய நிர்வாகம் வழங்கியது. இவர்களுக்கான பதிவுகள் மேற்கொண்ட பின்னர் இன்று காலையில் தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் நாளை ஆரம்பம்:முதற்கட்டமாக 1000பேர் குடியமர்வு


முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன் முறையாக இன்று 22 ஆம் திகதி மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வைபவரீதியாக ஆரம்பிக்கப்படுவதாக அம்மாவட்ட அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்தார்.

சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் முதற் கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

அனிஞ்சியன்குளம் அரசினர் பாடசாலை, மல்லாவி மத்திய கல்லூரி, பாலிநகர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு படிப்படியாக அவர்களது வீடுகளில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மீளக்குடியமரும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் அங்கு செய்யப்பட்டுள்ளன. குடிநீர், மின்சார விநியோகம், வீதிப் போக்குவரத்து ஆகியன ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தமது கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்று அவற்றைத் துப்புரவு செய்து, தேவையானால் தற்காலிகத் தகரக் கொட்டில் அமைத்து படிப்படியாக மீளக்குடியமர்வார்கள்.

இம்மக்கள் பலரது வீடுகள் சேதமடையாமல் இருக்கின்றன. பல வீடுகள் கூரைகள் மாத்திரம் சேதமடைந்துள்ளன. இவற்றை அவர்கள் படிப்படியாகத் திருத்தி அமைத்துக் குடியேறுவார்கள். இந்தப்பகுதியில் மக்கள் இல்லாத காரணத்தினால் அங்கு பற்றைகள் வளர்ந்துள்ளன. அவற்றைத் துப்பரவு செய்வதில் அவர்கள் முதலில் ஈடுபடுவார்கள்.

இவர்களுக்கு ஆரம்பத்தில் சமைத்த உணவு வழங்குவதற்கும், வேண்டிய ஏனைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இன்று ஆரம்பமாகும் நடவடிக்கையின் மூலம் 4450 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள். இது ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மக்கள் படிப்படியாகக் கட்டம் கட்டமாக அந்த மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தின் 2500 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளார்கள். 30 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பூனகரி, ஜெயபுரம் ஆகிய பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக