23 அக்டோபர், 2009

அமெரிக்க வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்திற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தாக்கல்



விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள், பிரபல அமெரிக்க வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ராஜரட்னம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்து அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி மாவட்ட நீதிமன்றில் சுமார் 30 பேரைக் கொண்ட குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பித்தவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். 2001ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் ராஜ் ராஜரட்னத்தின் குடும்பத்தார் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ராஜ் ராஜரட்னம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்பையும் பேணவில்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

வர்த்தக மோசடி தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்புப் புறநகர்ப் பகுதியொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் தமது கணவர் உயிரிழந்ததாக கருணாமுனிகே கிறிசாந்தி என்பவர் நியூ ஜேர்ஸி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக