19 அக்டோபர், 2009

19.10.2009.நியூயோர்க்கிலிருந்து அமைச்சர் சமரசிங்க ஜெனிவா பயணம் -நவநீதம் பிள்ளையை சந்திப்பார்?


அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க நேற்று நியூயோர்க்கில் இருந்து ஜெனிவா பயணமாகியுள்ளார். ஜெனிவா செல்லும் அமைச்சர் அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான வசதிகள் மற்றும் மீள்குடியேற்ற வேலைத்திட்டம் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அமைச்சர் சமரசிங்கவின் ஜெனிவா விஜயத்தின்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையை சந்திப்பாரõ ? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என மனித உரிமை மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதான விசாரணை ஒன்றை நடத்தும் கோரிக்கையை இலங்கை உதாசீனம் செய்துவிட்டதாக அண்மையில் பிரஸ்ஸல்ஸில் ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை தெரிவித்திருந்தார். ஆனால் நவநீதம் பிள்ளையின் குற்றச்சாட்டு ஆதாரமற்ற மற்றும் மூன்றாம் தரப்பு தகவல்களை கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேச்சு நடத்த ஜெனிவா செல்லும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நவநீதம் பிள்ளையை சந்திப்பாரா? என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. இதேவேளை அமெரிக்காவுக்கு சென்றிருந்த அமைச்சர் சமரசிங்க ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் மனிதாபிமான விடயங்களுக்கான ஐ.நா.வின் ஆணையாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் ஆகியோரை சந்தித்து இலங்கையின் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள அகதி மக்கள் தொடர்பில் பேச்சு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் இன்று இராணுவத்தினருக்கு எதிராக திருப்பி விட்டுள்ளது-ஐ.தே.க



எதிரான யுத்தம் நிறைவடைந்திருக்கின்ற நிலையில் அரசாங்கம் அதனை இன்று இராணுவத்திற்கு எதிராக திருப்பி விட்டுள்ளது. நாட்டை மீட்டுக் கொடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்துகிறது. இன்றைய அரசாங்கத்தின் பயணமானது ஜனநாயகத்துக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் பாதகமானதாகவே அமைந்துள்ளது. அதனைப் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது

என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஐ.தே.க. எம்.பி சாகல ரத்னாயக்க மேற்கண்டவாறு அறிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம். பி.க்களோ ஊடகவியலாளர்களோ நாட்டின் தேவை கருதிய, மக்களின் நன்மை கருதிய கருத்துக்களை வெளியிட முடியாத சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தவறான செயற்பாடுகள் மற்றும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதற்கான உரிமைகள் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கின்றன. அதேபோல் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்கான கடப்பாடும் உரிமையும் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இருக்கின்றன.

இந்த உரிமைகளும் கடப்பாடுகளும் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களால் அடக்கு முறைக்குள் தள்ளப்பட்டுள்ளன. யுத்தம் நிறைவøடந்துள்ள இக்கால கட்டத்தில் மக்களின் வாழ்க்கைச்சுமை இறக்கி வைக்கப்படவில்லை. அதேபோல் நிவாரணங்கள் இல்லை. மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மறுக்கப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்கின்ற போது அடுத்த வாரமளவில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவிருக்கின்றது. சிலிண்டர் ஒன்றுக்கு குறைந்தது 100 ரூபாவேனும் அதிகரிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. இதன் பாரம் மக்களுக்கே சென்றடையவுள்ளது. தெனியாயவில் கட்டப்படுகின்ற மாளிகைக்கு என அமைக்கப்பட்டு வருகின்ற வீதி மகநெகும செயற்றிட்டத்தின் கீழ் பொதுமக்களின் பணத்தை செலவழித்தே மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த உண்மையை வெளிப்படுத்துவதற்கு முனைந்த எம்மீதும் ஊடகங்கள் மீதும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் அடியாட்களும் தாக்குதல் நடத்தினர். அன்று அவர்கள் செய்த முதல் வேலையே ஊடகவியலாளர்களின் கெமராக்களை நிலத்தில் அடித்து நொருக்கியது தான். இந்த சம்பவம் தொடர்பில் இது வரையில் எந்த விதமான விசாரணை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. எமது உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் வீடு அலுவலகம் சேதமாக்கப்பட்டது. தொடர்பிலும் இதுவரையில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

பயங்கரவாதத்துக்கு எதிராக இராணுவத்தினர் யுத்தம் புரிந்தனர். இழப்புக்களை சந்தித்தனர். ஆனால் அவர்களுக்கான நிவாரணங்களில் சம்பளத்தில் அரசாங்கம் கை வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். அது மட்டுமல்லாது நாட்டை சுதந்திரமாக்கிய சரத் பொன்சேகா இன்று அரசாங்கத்தில் இருந்து ஓரம் கட்டப்படுள்ளார். இது தான் அரசாங்கத்தினால் இராணுவத்திற்கு வழங்கப்படுகின்ற கௌரவமாக இருக்கின்றது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது உணரப்பட்டதாலேயே எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான தேவை எற்பட்டது. அது தற்போது சாதகமான பலனையும் தந்திருக்கின்றது.

பொது வேட்பாளர் குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும். அரசாங்கத்தின் அடக்கு முறைகள், அச்சுறுத்தல்கள், சனநாயக விரோத செயற்பாடுகள் யாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைப்பதே எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் நோக்கமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக