19 அக்டோபர், 2009

19.10.2009.இந்திய பெருங்கடலில் சிங்கப்பூர் கப்பல் கடத்தல்
மாந்தை மேற்கில் 22 ஆம் திகதி மீள்குடியமர்வு குறித்து இன்று ஆராய்வு




- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 22ஆம் திகதி மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காலை மன்னார் அரசாங்க அதிபர் ஏ.நிக்கொலாஸ்பிள்ளை தலைமையில் அரச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த விக்கிரமசிங்க, அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம். ஹால்தீன், இணைப்புச் செயலாளர் அலிக்கான், மாவட்ட இணைப்பாளர் என்.எம். முவ்பர் மற்றும் திணைக்களங்களின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 22ஆம் திகதி மக்கள் மீளக்குடியேற்றப்பட இருப்பதால் அவர்களுக்குக்கான நீர், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, போன்ற விடயங்களை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணித்துள்ளார்.

அதேவேளை, மீள்குடியேற்றம் இடம்பெறும் பகுதிகளில் தற்காலிகமாக மருத்துவ சேவைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளர் திருமதி யூட்ரதனியிடம் அமைச்சர் றிசாட் பதியுதீன் கேட்டுக் கொண்டுள்ளார்


இந்தியப் பெருங்கடலில், ஏடன் வளைகுடா அருகே சென்ற சிங்கப்பூர் கப்பலை, சோமாலிய கடல்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்த கப்பலில் இருந்த இரண்டு இந்தியர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.

சோமாலியா நாட்டில் நிரந்தர அரசு ஏதும் இல்லை. வன்முறையாளர்கள் ஒவ்வொரு குழுவாக செயல்பட்டு ஒவ்வொரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனர். இந்த வன்முறையாளர்களில் சிலர் கடல் கொள்ளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் சர்வதேச கப்பல்களைத் துப்பாக்கி முனையில் நிறுத்தி கடத்திச் செல்வதும், கணிசமான பிணைத் தொகையைப் பெற்றுக் கொண்டு கப்பலை விடுவிப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த ஆண்டில் மட்டும், நூற்றுக்கும் அதிகமான கப்பல்களை சோமாலிய கடல் கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதற்கிடையே, கடந்த 15ஆம் திகதி 'எம்.வி.கோட்டா வாஜர்' என்ற சிங்கப்பூர் கப்பல், செஷல்ஸ் தீவுக்கு அருகே சென்ற போது, சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.

இந்தக் கப்பலில் இரண்டு இந்தியர்களுடன் இலங்கை, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களும் இருந்தனர். கப்பலையும், கப்பலில் இருக்கும் ஊழியர்களையும் மீட்க, கப்பல் நிறுவனம் சிங்கப்பூர் அரசின் உதவியை கோரியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக