19 அக்டோபர், 2009

மீள்குடியமர்வு தொடர்பில் இலங்கை அரசுடன் நெருங்கிய உறவு : நிரூபமா ராவ்
19.10.2009
வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து 355 குடுமபங்கள் மட்டக்களப்புக்குஅனுப்பி வைப்பு
ஆஸி. பிரதமர் இந்தோனேஷியாவுக்கு இன்று அவரசர விஜயம்











சட்டவிரோதமான முறையில், ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படுவோர், குறிப்பாக சமீபத்தில் இந்தோனேஷியாவில் வழிமறிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 260 அகதிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சு நடத்த ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் இன்று இந்தோனேஷியாவுக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.

தற்போது இந்தோனேஷிய அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கும் குறித்த 260 இலங்கையர்களும் ஆஸ்திரேலியா தமக்கு அரசியல் தஞ்சம் வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் கோரிக்கை வெற்றியளிக்குமா இல்லையா என்பது ஆஸி. பிரதமரின் இந்தோனேஷிய விஜயம் முடிந்த பிறகே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேஷியக் கடற்பரப்பில் அதன் கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டமையால், இவர்கள் சம்பந்தப்பட்ட விடயம் தற்போது தமது உள்நாட்டு விவகாரம் என்றும், எனவே தாமே இவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றும் ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சி கண்டனம்

அதேநேரம், ஆஸ்திரேலியாவின் பிரதான எதிர்க்கட்சி, ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்களைத் தடுத்து நிறுத்த ஆஸ்திரேலிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறிவிட்டது என்று கடுமையாகச் சாடி வருகிறது



வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களில் ஒரு தொகுதியனர் இன்று விடுவிக்கப்பட்டு மீள் குடியேற்றத்திற்காக இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பஸ் வண்டிகளில் இராணுவத்தினரால் அழைத்து வரப்பட்ட இக் குடும்பங்கள் இன்று நண்பகலும் நேற்றிரவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சென்றடைந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 355 குடும்பங்களைக் கொண்ட 941 பேர் நேரடியாக சிங்கள மகா வித்தயாலத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு பொலிஸ் இராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளினால் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் பிரதேச செயலாளர்கள் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டு உறவனர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 80 குடும்பங்களைக் கொண்ட 250 பேர் காரைதீவு விபுலானந்தா வித்தியாலயத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டு இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.

கடந்த முறை இரண்டாவது தொகுதியில் 11.09.2009 ல் ஆழைத்து வரப்பட்ட 169 குடும்பங்களைச் சேர்ந்த 497 பேர் இரண்டு முதல் ஐந்து வாரங்கள் வரை இம் மாவட்டங்களிலுள்ள இடைத்தங்கல முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பின்னரே இருப்படங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது



மக்களின் உடனடி மீள் குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவினை பேணி பேச்சுக்கள் நடத்தப்படுவதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற குழுவின் விஜயத்தின் பின்னர், இடம்பெயர்ந்தவர்களின் குடியேற்றத்துக்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்க மத்திய அரசாங்கம் முன்வந்துள்ளமையை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிதி, மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்துக் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்தும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் விரைவான ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பொருட்டு, பரஸ்பரம் புரிந்துணர்வினை ஏற்படுத்தும் வகையிலான உறவுகளை வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக