3 அக்டோபர், 2009


இலங்கை தூதரின் அறிக்கைக்கு நெடுமாறன் கண்டனம்
தமிழக முதல்வருடன் சிதம்பரம் இன்று சந்திப்பு


தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் .சிதம்பரம் சந்தித்து பேசினார்.

சந்திப்புக்கு பிறகு .சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில்,

"தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து இருவரும் விவாதித்தோம். இதுகுறித்து பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் ஆலோசித்து விரைந்து முடிவெடுக்கப்படும். மேலும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் மீள் குடியேற்றம் குறித்தும் இருவரும் பேசினோம்" என்றார்

இலங்கைத் துணை தூதரின் கூற்றுக்கு நெடுமாறன் கண்டனம்

வடபகுதி முகாம்களிலுள்ள மக்களைப் பார்வையிட அது ஒன்றும் மிருகக்காட்சி சாலை அல்ல என கூறியிருக்கும் துணை தூதரின் கூற்றுக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 3 லட்சம் தமிழர்கள் பார்வையிட யாரையும் அனுமதிக்க முடியாது என்றும், அது மிருககாட்சி சாலை அல்ல எனவும் இலங்கை துணை தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை, இலங்கையின் வடக்கு முகாம்களைப் பார்வையிட அனுப்ப வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கும் வேளையில், அதை ஏளனம் செய்யும் வகையில் பேசியுள்ள துணைத் தூதரின் போக்கு முதல்வரை மட்டுமல்ல, தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என முதல்வர், மத்திய அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக