27 செப்டம்பர், 2009

சென்னை
ஏர் இந்தியா பைலட்டுகள் திடீர் வேலை நிறுத்தம்

http://www.indiavisitinformation.com/india-tour/india-transportation/airlines/images/air-india1.jpg
புது தில்லி, செப். 26: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பைலட்டுகளில் ஒரு பிரிவினர் வேலைக்கு வராததால் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையை ஏர் இந்தியா நிறுவனம் குறைத்ததை எதிர்த்து பைலட்டுகளில் ஒரு பிரிவினர் சனிக்கிழமை வேலைக்கு வரவில்லை. தில்லியிலிருந்து காபூலுக்குச் செல்லும் சர்வதேச விமான சேவை மற்றும் மும்பையிலிருந்து லக்னெü, ஒüரங்காபாத், புணே, சென்னை, ஸ்ரீநகர், இந்தூர், போபால் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து கொழும்பு மற்றும் ஷார்ஜாவுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது தவிர சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டது. கோல்கத்தாவிலிருந்து அய்ஸ்வால் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டது. விமான சேவையில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டபோதிலும் பெருமளவிலான விமானங்கள் இயக்கப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜிதேந்திர பார்கவா தெரிவித்தார். மொத்தம் 11 விமான சேவைகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டன. பெரும்பாலான மார்க்கங்களில் விமான சேவை பாதிப்பின்றி நடைபெற்றதாக அவர் மேலும் கூறினார். 11 பைலட்டுகள் பணிக்குத் திரும்பவில்லை என்று பார்கவா தெரிவித்தார். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக பைலட்டுகள் பணிக்குத் திரும்பவில்லை என்று கேப்டன் ஆர்.கே. பல்லா தெரிவித்தார். பணிக்குத் திரும்பாத பைலட்டுகள் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை ஏர் இந்தியா நிர்வாகத்துடன் பேச்சு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக