27 செப்டம்பர், 2009

பிறைன்டிக்ஸ் உதவித் திட்டத்தின் கீழ் மெனிக் நலன்புரி கிராமத்தில் குளியல் வசதி

இலங்கையின் முன்னணி ஆடைத் தயாரிப்பு நிறுவனமான பிறெண்டிக்ஸ், வவுனியா மெனிக் நலன்புரி கிராமத்தில் ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் குளிக்கவும் 50 குளியலறைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இவ்வருடத்தில் இந்நிறுவனம் மேற்கொண்டிருக்கும் பாரிய சமூகப் பணிகளில் ஒன்றான இக்குளியலறை அமைக்கும் திட்டத்தின் கீழ் 50 குளியல் தொகுதிகள் அமைக்கப்படுவதோடு ஒவ்வொன்றிலும் 20 குளியல் அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும்.

தண்ணீரும் சுத்திகரிப்புமே நிவாரண முகாம்களின் முக்கிய தேவைகளில் முதன்மையானவை என்ற கருத்தின்படியே பிறைண்டிக்ஸ் நிறுவனம் இத் திட்டத்தை செயல்படுத்த முன்வந்தது என்று நிறுவனத்தின் சமூக சேவைகள் பிரிவின் தலைவர் அனுஷா அலஸ் தெரிவித்துள்ளார். இத்திட்டம் செப்டம்பர் இறுதியில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 50 குளியல் மையங்களும் முகாமின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படவுள்ளதால் முகாம் வாசிகளுக்கு எளிதாக ஏதாவது ஒரு மையத்தை நாடக்கூடியதாக இருக்கும் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் ஏற்கனவே அகதிகளின் பேரில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஆடைகளை வழங்கியுள்ளதோடு மேலும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான நீர்த் தாங்கிகள், தண்ணீர் போத்தல்கள், உலர் உணவுகள் போன்றவற்றையும் வழங்கியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக