உட்கட்டமைப்பு வசதிகளை ஒக்டோபர் 15க்கு முன் பூர்த்தி செய்ய பணிப்பு
கட்டுக்கரை குளத்திலிருந்து நவம்பர் 15இல் நீர்
வன்னியில் மீள்குடியேற்றத்தை நடத்துவதற்கு ஏதுவாக கட்டட நிர்மாணப் பணிகள், உட்கட்டமைப்பு வசதிகளை ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னதாக பூர்த்தி செய்யு மாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அரச பொறியியல் கூட்டுத்தாபனம், அரச வர்த்தக கூட் டுத்தாபனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை உட்பட நிறு வனங்களுக்கு இப்பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அரசின் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என் றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் மன்னார் அரச அதிபர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது மேற்படி அறிவுறு த்தல்கள் வழங்கப்பட்டன.
வன்னியில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை, வவுனியாவில் ஏ-9 வீதிக்கு அண்மித்த பகுதியிலுள்ள சுமார் 2000 ஏக்கர் நெற் காணியில் செய் கையை ஆரம்பிக்கும் நோக்குடன் எதிர்வரும் முதலாம் திகதி ஏர்பூட்டு விழாவொன்றும் நடத்தப்படவுள்ளது.
மேலும் மன்னார் மாவட்டத்திலுள்ள மன்னார் கட்டுக் கரை குளத்தை அண்டிய பகுதியிலுள்ள சுமார் 4000 ஏக்கர் நெற் காணிகளில் செய்கையை ஆரம்பிக்கவும் முடிவு செய் யப்பட்டுள்ளது.
கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதிகளில் மிதி வெடி, கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வரும் படைத்தரப்பினர் இன்னும் இரண் டொரு தினங்களில் அனுமதியளித்ததும் செய்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
அடுத்த பெரும்போகத்தில் வடக்கில் பாரிய விளைச்சலை செய்ய வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயற்படு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மன்னார் கட்டுக்கரை குளத்திற்கு அருவியாற்றிலிருந்து நீரை சேகரிக்கும் வேலைகள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுவதுடன் நவம்பர் 15ஆம் திகதி முதல் நானாட்டான், வங்காலை பகுதியில் உள்ள 2000 ஏக்கர் நிலத்திற்கு நீர் திறந்துவிடப்படவுள்ளது. முற்றாக மிதிவெடிகள் அகற்றப்பட்ட இப்பகுதியில் பெரும் போகத் திற்கான விளைச்சல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் கே. சிவபாதசுந்தரம் தெரி வித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக