2 செப்டம்பர், 2009

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி

ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டரைக் காணவில்லை


ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர், 7 மணி நேரத்துக்கு மேலாகியும் எங்கு சென்றது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதையடுத்து, ஆந்திர முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தோ, அவரது பாதுகாப்பு குறித்தோ எந்தத் தகவலும் இல்லை.

ஆந்திராவின் கர்னூலில் இருந்து சித்தூருக்கு இன்று காலை ஹெலிகாப்டரில் சென்றார் ராஜசேகர ரெட்டி. சுமார் 9.35 மணிக்கு, அவரது ஹெலிகாப்டருனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதுவரை, முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆந்திர அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உள்பட ஏழு ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளன. அதுதவிர, ஆளில்லாத விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், மோசமான வானிலை காரணமாகவும் தேடுதல் பணி பாதிக்கப்பட்டிருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

முதல்வரைப் பற்றியும் அவரது ஹெலிகாப்டர் பற்றியும் தகவல் கிடைத்தால், கிராமப்புற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், அதை அரசுக்குத்த தெரிவிக்குமாறும் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் வனப்பகுதியில் இறங்கியதால், அவர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லபப்படிருப்பதாகவும், அங்கு நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தத் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக