2 செப்டம்பர், 2009

சிறுபான்மையினருக்கும் சென்று சேரக்கூடிய வகையில் அரசியல் இணக்கமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென ஐ.நா.செயலர் தெரிவிப்பு-

இலங்கையில் சிறுபான்மையினருக்கும் சென்று சேரக்கூடிய வகையில் அரசியல் இணக்கமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென ஐ.நா செயலர் பான்கீ மூன் தெரிவித்துள்ளார். அதேவேளை சர்வதேச சட்டங்களுக்கு மதி;ப்பளிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். நோர்வேக்கு சென்றுள்ள பான்கீ மூன் நோர்வே பிரதமர் ஜோன் ஹோல்டன் பேர்க்கை சந்தித்த பின்னர் நடத்திய ஊடக மாநாட்டிலேயே இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளபோதிலும் அங்கு தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதான ஏற்பாட்டாளர் என்ற வகையில் இலங்கையில் நோர்வேயின் பங்கு மதிக்கத்தக்கது என்றும் பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக