2 செப்டம்பர், 2009

அரசியல் கைதிகளாக தற்சமயம் 631பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு-


இலங்கையில் அரசியல் கைதிகளாக தற்சமயம் 631பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இவர்கள் தொடர்பான வழக்குகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதனை விரைவுபடுத்துவதற்கும் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மரணதண்டனை தொடர்பில் அமைச்சு தெரிவிக்கையில், இலங்கையில் தற்சமயம் 251மரணதண்டனைக் கைதிகள் இருப்பதாகவும், இவர்களது தண்டனை குறித்து இதுவரையிலும் எதுவித இறுதித் தீர்மானங்களும் ஏற்படவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளது. எனினும் சமூக மட்டத்திலிருந்து குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களை அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக