2 செப்டம்பர், 2009

02.09.2009 தாயகக்குரல். 17

நீண்டகாலமாக இலங்கையில் இனப்பிரச்சினையை தேசியப் பிரச்சினையாக எடுத்து அதற்கு அரசியல் தீர்வு காண்பது முதன்மையாக கருதப்பட்டது. ஆனால் யுத்தம் முடிந்த நிலையில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது முக்கிய மனிதாபிமானப் பிரச்சினையாகிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போது மீள்குடியேற்றம் பற்றியே பேசிவருகின்றன.

முகாம்களில் உள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதில் அரசு உதாசீனம் காட்டுவதாக குற்றம்சாட்டும்; எதிர்கட்சிகள் அதற்கு பல காரணங்களையும் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சம் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அந்த மக்களை முகாம்களிலே தங்கவைத்துள்ளதாக
குற்றம் சாட்டுகின்றன. மீள்குடியேற்றப் பிரச்சினை மனிதாபிமானப் பிரச்சினை என்பதை விட அதை அனைவரும் அரசியலாக்குவதாகவே தோன்றுகிறது.
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலை குறிவைத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி; , மக்கள் விடுதலை முன்னணி ஆகியன மக்களை முகாம்களில் வைத்துக்கொண்டு தேர்தலை நடத்துவதை விரும்பவில்லை.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புலிகள் எப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பை வன்னி வாக்குகள் மூலம் வெற்றிபெறச் செய்தார்களோ அதே போல முகாம்களில் உள்ள மக்களின் வாக்குகளை அரசாங்கம் தமக்கு சாதகமாக்கிக்கொள்ளும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் அச்சமாகும். ஐக்கிய தேசியக் கட்சியை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஓரளவேனும் காப்பாற்றியது தமிழ் வாக்குகள் என்பதால் இப்போதும் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளது தமிழ் வாக்குகளையே. தமிழ் வாக்குகள் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்குமா என்பது வேறுவிடயம்.

பொதுவாக அரசாங்கம் திட்டமிட்டு மீள்குடியேற்றத்தை தாமதப் படுத்துவதாக எதிர்கட்சிகள் தெரிவிக்கின்ற அதே வேளை மீள்குடியேற்றம் தாமதப்படுவதற்குரிய பல காரணங்களை அரசாங்கம் கூறிவருகிறது.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அரசுசார்பில் மறுத்துள்ள அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுரபிரியதர்சன யாப்பா, முகாம்களில் உள்ள மக்களின் கவனத்தை தமது பக்கம் திருப்பவே எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாகவும் இதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவதாக தெரிவித்துள்ளதுடன் , வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம் பெயர்ந்த மக்கள் மத்தியில் புலிகள் ஊடுருவியுள்ளதால் அந்த மக்கள் சுதந்திரமாக நடமாடவிடுவது குறித்து மிகவும் அவதானமாக இருக்கவேண்டியுள்ளது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடம் பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில்; மீள்குடியமரச் செய்வதற்கு முன்னர் அங்கு புலிகளால் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டும். அதற்காக மேலதிகமான கண்ணி வெடி அகற்றும் குழுவினரை அப்பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி துரிதப்படுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கம் மேலும் ஆறுமில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும் அரசு தெரிவிக்கிறது.


யுத்தம் நடைபெற்ற இடங்களில் மக்களை மீளக் குடியமர்த்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் அந்த இடங்களில் மக்கள் குடியமர்த்தப்படலாம் என யூ.என்.எச்.சி.ஆர். அனுமதியளித்த பின்னரே அங்கு மக்களை மீளக் குடியமர்த்தமுடியும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிக்கிறார்.
வன்னியில் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக மீட்கும்வரை வன்னியில் மீள்குடியேற்றம் தாமதப்படலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

வன்னிக்கு வெளியே மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களை நிரந்தர வசிப்பிடங்களாகக் கொண்டு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வவுனியா அரச அதிபர் தெரிவிக்கிறார். யாழ் குடாநாட்டைச் சேந்த மக்;கள் இவ்வாரம் தமது சொந்த இடங்களுக்கு செல்வார்கள் என யாழ் அரசாங்க அதிபர் தெரிவிக்கிறார். இப்போது முகாம்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வன்னி நிலப்பரப்பை சொந்த இடமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இடம் பெயர்ந்த மக்கள் தொடர்பில் அரசியல் ரீதியாக அணுகாமல் மனிதாபிமான ரீதியில் சிந்தித்து செயல்பட்டால் அரசு எதிர்பார்க்கும் நாட்களுக்கு முன்னதாகவே மக்களை மீளக்குடியமர்த்த முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கருஜயசூரியா தெரிவித்திருப்பது அனைவரின் கவனத்திற்கும் உரியN;த

இன்று வன்னி மக்களின் மீள்குடியேற்றம் பற்றி பேசும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்திலும் யாழ் குடாநாட்டில் இடம் பெயர்ந்த மக்கள் ஐம்பது நலன்புரி நிலையங்களில் இருந்துள்ளனர். அவர்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இவர்கள் எடுக்கவில்லை.

யாழ் குடாநாட்டில் 30 வீதமான பகுதியில் 13 இராணுவம்; உயர் பாதுகாப்பு வலையம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 1990ம் ஆண்டுடன் இப்பகுதிகளில் இருந்து மக்கள் முற்றாக இடம் பெயர்ந்தனர். இவ்விதம் 24,175 குடும்பங்கள் இடம் பெயர்ந்து சிலர் தமது உறவினர்களுடனும் ஏனையோர் நலன்புரி நிலையங்களிலும் தங்கினர். இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்லவோ அங்கு தமது தொழிலில் ஈடுபடவோ இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இங்கு 42ஆயிரம் ஏக்கர் பயிர் செய்கை நிலங்கள் பயன்படாமல் உள்ளன. செழிப்பான விவசாய நிலங்களை அதிகமாக கொண்ட வலிகாமம் வடக்கு பிரதேசம் பெரும்பாலும் உயர்பாதுகாப்பு வலையமாகவே உள்ளன.

இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியோ,ஜே.வி.பி.யோ அந்த மக்களைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. எனவேதான் எதிர்கட்சிகளைப் பொறுத்தவரை வன்னி மக்களின் மீள்குடியேற்றம் பற்றிய கரிசனை மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஏற்பட்டதல்ல. அது அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறுகிறோம்.
வவுனியா முகாம்களில் உள்ள வன்னி மக்களை அரசாங்கம் கண்ணிவெடி அகற்றும்வரை முகாம்களிலேயே வைத்திருக்காமல் அவர்களது உறவினர்களின் பொறுப்பில் வெளியேற அவர்களை அனுமதிக்கலாம்.

அரசாங்கம் முன்னர் அறிவித்தபடி நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்யலாம். இப்படி ஓரளவுக்காவது முகாம்களில் உள்ள மக்கள் தொகையை குறைப்பதன்மூலம் மீதமாக முகாம்களில் உள்ள மக்களின் அத்தியவாசிய தேவைகளை பூர்த்தி செய்வது அரசுக்கும் இலகுவாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் இடம் பெயர்ந்தவர்கள் பலர் உறவினர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் தங்கி நிவாரணம் பெற்று வாழ்வதால் இடம்பெயந்தோர் பிரச்சினை வன்னியளவுக்கு அங்கு எழவில்லை எனலாம். இது வன்னிக்கும் பொருந்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக