25 டிசம்பர், 2009

பிடிபட்ட புலிகளுக்கு இலங்கையில் உளவியல் சிகிச்சை


வவுனியா:மாஜி விடுதலைப் புலி வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான பாதிப்பை போக்குவதற்கு, அவர்களுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இலங்கை ராணுவ அதிகாரி தம்மிகா வீரசிங்கே கூறியதாவது:விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடந்த சண்டை முடிவுக்கு வந்ததை அடுத்து, ஏராளமான தமிழர்கள், தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


விடுதலைப் புலிகள் அமைப்பில் செயல்பட்டு வந்தவர்கள், பொதுமக்களுடன் முகாமில் கலந்து வசித்து வந்தனர். அவர்களை ராணுவத்தினர், அடையாளம் கண்டு, கைது செய்தனர். அதில், 12 ஆயிரம் பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பில் இருந்தது தொடர்பான மனரீதியான பாதிப்பில் இருந்து, இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. உளவியல் நிபுணர்களை கொண்டு, இவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு வீரசிங்கே கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக