25 டிசம்பர், 2009


24.12.2009.
யாருக்கு ஆதரவளிப்பது, தமிழ்க்கூட்டமைப்பின் தீர்மானம் ஜனவரி 04ம் திகதியே



யாருக்கு ஆதரவளிப்பது, தமிழ்க்கூட்டமைப்பின் தீர்மானம் ஜனவரி 04ம் திகதியே வெளியாகும் ஜனாதிபதி தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கூட்டங்களை நடத்தியுள்ள போதிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. பிரதான இரண்டு கட்சிகளினதும் வேட்பாளர்களை மீண்டுமொரு தடவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜனவரி 04ம் திகதி தமது தீர்மானம் வெளியிடப்படுமென தமிழ்க் கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாஜினும்
சுயாதீனமாக போட்டியிடும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை எனவும், தேர்தல்களை பகிஷ்கரிப்பதில்லை எனவும் தமிழ்க் கூட்டமைப்பினரால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய மராக் துறைமுகத்தில் உள்ள கப்பலிலுள்ள இலங்கையர் ஒருவர் நோயினால் மரணம்-

இந்தோனேசிய மராக் துறைமுகத்தில் தரித்துநிற்கும் சட்டவிரோத இலங்கைக் குடியேற்றவாசிகளை ஏற்றிய கப்பலில் இருந்தவர்களில் ஒருவர் நேற்றிரவு 11.30அளவில் மரணமடைந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மரணித்தவர் 29வயதுடைய ஜேக்கப் கிறிஸ்டியன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கடந்த 11 வாரங்களாக இந்தப் படகில் உள்ளவர்கள் அப்பகுதியில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நோய்வாய்ப்பட்டிருந்தவர் தொடர்பில் கப்பலில் உள்ளவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் உரிய வைத்திய சிகிச்சைகளுக்கு கொண்டு செல்வதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்தமையே இந்த மரணத்திற்கு காரணமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை சிறுபான்மையினர் ஜீவமரணப் போராட்டமாக கருத வேண்டும்-ரவூப் ஹக்கீம்-

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை சிறுபான்மையின மக்கள் ஜீவமரணப் போராட்டமாக கருதிச் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்தியகுழு உறுப்பினர்களுடனும் ஆதரவாளர்களுடனும் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மை மக்கள் மாத்திரமன்றி நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களும் ஆட்சிமாற்றம் தேவையென்பதை உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த தீர்மானம் தேர்தலுக்கு ரெண்டே நாளைக்கு முன் எடுக்கப்படும்-தமிழ்க் கூட்டமைப்பு-

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த இறுதித்தீர்மானம் எதிர்வரும் ஜனவரி 24ம் திகதி எடுக்கப்படும் என தமிழ்க் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கூட்டங்களை நடத்தியுள்ள போதிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. பிரதான இரண்டு கட்சிகளினதும் வேட்பாளர்களை மீண்டுமொரு தடவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். எவ்வாவெறினும், சுயாதீனமாக போட்டியிடும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை எனவும், தேர்தல்களை பகிஷ்கரிப்பதில்லை எனவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்-

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பிரதான வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு எதிராக இன்றுபிற்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இவ்ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான பலர்; கலந்து கொண்டதுடன், பேரணியாகவும் சென்று ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு எதிராக கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டதில் மேல்மாகாண ஆளுனரும், சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான அலவி மௌலான மற்றும் மேல் மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பதுளையிலும் இன்று ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.


நீண்டகால, குறுகியகால சிறைத்தண்டனை கைதிகளை வேறுபடுத்த தீர்மானம்-

நீண்டகால மற்றும் குறுகியகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளை வேறுபடுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. நீண்டகால தண்டனையை அனுபவித்துவரும் கைதிகளை வெலிக்கடை சிறைச்சாலைக்கும், குறுகியகால சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர்ஜெனரல் டீ..ஆர்.சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய இக்கைதிகளை அநுராதபுரம், வடரெக, பல்லேகல, கல்தென்ன ஆகிய திறந்தவெளி சிறைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெலிக்கடை சிறைச்சாலையில் நிலவும் இடநெருக்கடியை ஓரளவேனும் குறைக்க முடியும். நாட்டின் சகல சிறைகளிலும் தண்டனை அனுபவித்து வருகிற மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுமார் 28ஆயிரம்பேர் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு நாளொன்றுக்கான உணவுக்கு சுமார் 240ரூபா செலவிடப்படுகிறது. இதேவேளை யாழ்ப்பாணத்திலும் சிறைச்சாலையொன்றை நிறுவ வேண்டியதன் அவசியமேற்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இரு வீடுகளிடையே சிறைக்கூடமொன்று நடத்தப்பட்டு வருகின்றது என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக