25 டிசம்பர், 2009

மலையகப் பெருந்தோட்டங்களில்
முகவர் தபால் நிலையங்கள்
உப தபாலகங்களாக மாற்றம்

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் முகவர் தபால்; நிலையங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களை அரசாங்கத்தின் உப தபாலகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய, இது தொடர்பில் விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகத் தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம்.எஸ். செல்லச்சாமி தெரிவித்தார்.

மலையகத் தோட்டங்களில் முகவர் தபால் நிலையங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 126 கட்டடங்கள் பல வருடங்களாகத் திறக்கப்படாமல் உள்ளன. எனவே, இவற்றை உப தபாலகங்களாக மாற்றியமைத்துத் திறந்து வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாகப் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே மலையகத் தோட்டப்புறங்களில் 150 வருடகாலத்திற்குப் பின்னர் நேரடித் தபால் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய பிரதி அமைச்சர் செல்லச்சாமி, தபால் துறையில் புதிய பரிமாணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் மேலும் 100 தபால் ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.
தகவல் ஈழமைந்தன்


இரு தசாப்தங்களின்பின் மீண்டும் இயங்கும்
கிளிநொச்சி மாவட்டச் செயலகம்


கிளிநொச்சி மாவட்டச் செயலகம் (கச்சேரி) கடந்த இரண்டு தசாப்த காலத்திற்குப் பின்னர் முழுமையாக அரசாங்க சிவில் நிர்வாகத்தின் கீழ் தொழிற்படத் தொடங்கியுள்ளது.

யுத்தத்தின்போது சிதைவடைந்த கிளிநொச்சி மாவட்டச் செயலகம் புனரமைக்கப்பட்டு கடந்த புதன்கிழமை முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி அரச அதிபர் உட்பட கச்சேரியில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் இதுவரை வவுனியாவிலிருந்தே கடமைக்குச் சென்றுவந்தனர். தற்போது 50 உத்தியோகத்தர்களுடன் மாவட்டச் செயலகம் இயங்குவதாக அரச அதிபர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் கீழ் ப+நகரி, கரைச்சி, பச்சிளைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலகங்கள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் அந்தப் பகுதிகளில் சிவில் நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தகவல் ஈழமைந்தன்

வடக்கில் கைவிடப்பட்ட ஒரு இலட்சத்து 83 ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கைக்கு நடவடிக்கை

வட பகுதியில் கைவிடப்பட்ட 1,83,074 ஏக்கர் காணியில் மீண்டும் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 64,894 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு வருவதோடு 2009ஃ2010 பெரும்போகத்தின்போது 18,689 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட உள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்ரசிறி தெரிவித்தார்.

பெரும்போகத்தில் நெல் பயிரிடுவதற்காக ஏற்கெனவே 39 ஆயிரம் புசல் விதை நெல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர விவசாயம் செய்வதற்குத் தேவையான பசளை, நிவாரண விலையில் வழங்கப்பட்டுள்ளதாகவம் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு மீண்டும் வழமைபோல விவசாயம் செய்வதற்காக டிரக்டர்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 550 நீர் இறைக்கும் இயந்திரங்கள், 105 டிரக்டர்கள், 210 சைக்கிள்கள், 30 மோட்டார் சைக்கிள்கள், 08 சிறியரக டிரக்டர்கள் என்பனவும் 260 கனரக இயந்திரங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்பொழுது யாழ் மாவட்டத்தில் 24,028 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 23,480 எக்கரிலும் மன்னார் மாவட்டத்தில் 17,389 ஏக்கரிலும் பயிரிடப்பட்டு வருகிறது. மோதல் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தவு மாவட்டங்களில் நெற்செய்கை முழுமையாகச் சேதமடைந்தது.

எதிர்வரும் தினங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கைவிடப்பட்ட 41,340 ஏக்கர் வலயத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 63,262 ஏக்கரிலும் நெல் பயிரிடப்பட உள்ளது. இதுதவிர யாழ் மாவட்டத்தில் 8,727 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 29,422 ஏக்கரிலும் புதிதாக பயிரிட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

பெரும்போகத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,100 ஏக்கரிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 750 ஏக்கரிலும் பயிரிட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல யாழ் மாவட்டத்தில் 2,669 ஏக்கரிலும் மன்னார் மாவட்டத்தில் 7,610 ஏக்கரிலும் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சொந்த இடங்களில் குடியேற்றப்படும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்து.
தகவல் ஈழமைந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக