25 டிசம்பர், 2009

இலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிக்க 20 ஆயிரம் தமிழ் அகதிகள் மனு



கொழும்பு,​​ டிச.22: இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் வாக்களிக்க 20 ஆயிரம் தமிழ் அகதிகள் மனு செய்துள்ளனர்.

​ ​ ​ இலங்கையில் அதிபர் தேர்தல் ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ளது.​ இதில் தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபட்சவும் அவரை எதிர்த்து ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர்.

​ ​ ​ விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் நடத்தப்படும் முதலாவது தேர்தல் இதுவாகும்.​ இதனால் இந்தத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.​ ​

​ ​ ​ ​ இங்குள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக 15 லட்சம் தாற்காலிக அடையாள அட்டைகளை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.​

அதிபர் தேர்தலில் வாக்களிக்க உதவும் இந்த அடையாள அட்டை கோரி 20 ஆயிரம் தமிழ் அகதிகளும் விண்ணப்பித்துள்ளனர்.​ இவர்கள் அனைவரும் உள்நாட்டுப் போரின்போது புலம்பெயர்ந்தவர்களாவர்.​ ​ ​

​ ​ ​ புலம்பெயர்ந்த மக்கள் அனைவரும் வியாழக்கிழமைக்குள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.​

அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

​ ​ ​ புலம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் விண்ணப்பங்கள் அளிப்பதோடு,​​ அவற்றை நிரப்பித் தர உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கிராம நல மையங்களில் இதற்கு விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கான நல்வாழ்வு சேவை அமைச்சர் ரிஸôத் பத்தியுதீன் தெரிவித்தார்.​

முகாம்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் அடுத்த மாதம் 31-ம் தேதிக்குள் குடியமர்த்தப்படுவர் என்றும் அவர் உறுதி அளித்தார்.

​ ​ ​ இதுவரை அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக 25 ஆயிரம் முஸ்லிம்கள் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.​ ஏற்கெனவே கிராமசேவை மையங்கள் மூலம் அடையாள அட்டை விநியோகிக்கும் பணியை அடுத்தவாரம் தொடங்க உள்ளதாக அவர் கூறினார்.​

15 லட்சம் பேருக்கு தாற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே தேர்தலுக்கு முன்பாக 1.5 லட்சம் பேருக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக