8 நவம்பர், 2009

கூட்டொப்பந்தத்திற்கெதிராக கையெழுத்துப்போராட்டம் : இ.தொ.ஐ. முன்னணி ஆரம்பம்






(பட இணைப்பு)


தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக தோட்ட முதலாளிமார்



சும்மேளனத்துக்கும் தோட்டத்தொழிற்சங்கங்கள் சிலவற்றுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தில் குறிப்ப்ணீட்டுள்ள 405 ரூபா சம்பளத்தினை நாட்சம்பளமாக வழங்க வேண்டுமெனக்கோரியும் சம்பளத்தினைப் பகுதி பகுதியாக வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தொழிலாளர்களிடமிருந்து கையெழுத்தத்திரட்டும் போராட்டமொன்றினை இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணி இன்று முதல் ஆரம்பித்துள்ளது.

இன்று அட்டன் வெளிஓயா தோட்டத்தில் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதி தலைவரும்; மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

போராட்டம் தொடர்பாக கணபதி கனகராஜ் கருத்துத்தெரிவிக்கையில்:

தோட்டக் கம்பனிகள் வெளியிட்டுள்ள சம்பள கொடுப்பனவு விளம்பரத்தின்படி தோட்டத் தொழிலாளியின் ஒருநாள் வேலைக்கு நிச்சயமாக கிடைக்கும் தொகை 285 ரூபா மட்டுமே.

மேலதிகமாக வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ள தொகைகள் அனைத்துமே பல்வேறு வகையான வேலைச்சுமையை ஏற்படுத்தி அதன்மூலம் அத் தொகைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத வகையில் சம்பள நிர்ணய முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

75 வீதம் வேலைக்கு சமுகமளித்தால் மட்டுமே வழங்கப்படும் என்கின்ற 90 ரூபா,குறிப்பிட்ட வேலை இலக்கை நிறைவு செய்தால் மட்டும் வழங்கப்படுமென்கின்ற புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் 30 ரூபா ஆகிய தொகைகள் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்பட்டு வாழ்க்கைச் செலவு புள்ளிக்கான கொடுப்பனவும் சேர்க்கப்பட்ட புதிய சம்பள உயர்வு முறையை அமுல்படுத்தக் கோரி இரண்டு லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கையினை இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆரம்பித்திருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக