24 அக்டோபர், 2009

இலங்கை மீது காஸா மாதிரியிலான விசாரணை நடத்தப்பட வேண்டும்-ஐக்கிய நாடுகள் சபை

இலங்கையில் நடைöற்ற 26 வருட கால யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டனவா என்பதைக் கண்டறிவதற்கு, காஸாவில் இடம்பெற்ற யுத்தம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை போன்றதொரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. யுத்தத்தின் இறுதி மாதங்களில் என்ன நடந்தது அல்லது என்ன நடக்கவில்லை என்பது குறித்து பூரண விசாரணை ஒன்று நடத்தப்படவில்லை என்று மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் றுபேர்ட் கொல்வில் தெரிவித்தார்.

இலங்கை படையினரும், விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் ஜுரர் றிச்சட் கோல்ட்ஸ்ரோன் தலைமையில் நடத்தப்பட்ட காஸா யுத்த விசாரணை போன்றதொரு விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சிவில் யுத்த முடிவில் இடம்பெற்ற அட்டூழியங்கள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விவரமாக அறிக்கை வெளியிட்ட மறுநாள் றுபேர்ட் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக