24 அக்டோபர், 2009

முல்லைத்தீவில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கென 5லட்சம் யூரோக்களை வழங்கவிருப்பதாக பிரித்தானியா தெரிவிப்பு-
வடபகுதியில் நிலக்கண்ணிகளை அகற்றும் பணிகளுக்கு வியட்னாம் ஒத்துழைப்பு-

இலங்கையின் வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வியட்னாம் முன்வந்துள்ளது. இதற்கான விசேட பயிற்சிகளையும் தொழில்நுட்ப அனுபவங்களையும் வழங்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ஒஸ்வின் நகர பொதுமக்கள் சபையின் தலைவர் லேகொவின் குவான் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வியட்னாமுக்கான மூன்றுநாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் ஒஸ்வின் நகருக்கு நேற்றுபிற்பகல் விஜயம் செய்திருந்தனர். அங்கு ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கும் பொதுமக்கள் சபையின் தலைவருக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக 5லட்சம் யூரோக்களை வழங்கவிருப்பதாக பிரித்தானிய சர்வதேச அபிவிருத்தியமைச்சர் மைக்பொஸ்டர் தெரிவித்துள்ளார். இந்நிதி வடக்கில் நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள எட்டுக் குழுக்களுக்கான கண்ணிவெடிகளை அகற்றும் இயந்திரக் கொள்வனவுக்காக பயன்படுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படும்போது அவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கவென 2லட்சத்து 50ஆயிரம் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிதி 41ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தமது சொந்த இடங்களுக்கு இலகுவதாக செல்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும். இதனடிப்படையில் மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு மக்கள் அனுப்பப்படும்போது அவர்களுக்காக பேருந்து மற்றும் பாரஊர்தி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதேவேளை ஐ.நா.சபையின் ஊடாக வன்னிப் பிராந்தியத்தின் சுமார் 8500குடும்பங்களுக்கு தலா 3புசல் விதைநெல்கள் வழங்கும் பொருட்டு 2லட்சத்து 20ஆயிரம் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக