24 அக்டோபர், 2009

இடம்பெயர்ந்த மக்களுக்காக கப்பலில் வந்த பொருட்கள் அமைச்சர் அமீர் அலியால் பொறுப்பேற்பு

இடம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகிக்க கப்பலில் வந்த பொருட்களை அரசாங்கத்தின் சார்பில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அரிசி, மா, நூடில்ஸ், டின் உணவு, டின் மீன், தேயிலை, சீனி, பால் மா, குழந்தை உணவு, பழச்சாறு மற்றும் உலர் உணவுப் பொதிகள் இந்த பொருட்களில் அடங் கியிருக்கின்றன.

இந்த பொருட்களின் மாதிரிகள் பரிசோதனைகளுக்காக அனுப் பப்பட்டு தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. ஒரு கோடியே பதின்மூன்று இலட்சத்து நூற்றி இருபத்தி ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான இப்பொருட்களைச் செஞ்சிலுவைச் சங்க செயலணித் தலைவர் திஸ்ஸ அபேவிக்ரம ஒப்படைத்தார்.

இந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக தொண்டர் குழு ஒன்று தயாராக இருப்பதாக திஸ்ஸ அபேவிக்ரம தெரிவித்தார். இந்த பொருட்கள் வவுனியா அரச அதிபரூடாக விநியோகிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக