1 செப்டம்பர், 2009

உறவினர்களை பார்வையிட செல்வோரை தமிழக முகாம்களில் அகதிகளாக பதிவு செய்வதால் பல்வேறு சிரமங்கள்-

தமிழக முகாம்களில் வாழும் உறவினர்களைப் பார்வையிடுவதற்காக மூன்று மாதகால விசாவில் செல்லும் இலங்கைத் தமிழர்களையும் அகதிகளாகப் பதிவு செய்வதால், அவர்கள் தாயகம் திரும்ப முற்படும்போது, புதிய சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழக முகாம்களிலுள்ள அகதிகளைப் பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்கள் மூன்று மாதகால விசாவில் செல்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில், அவ்வாறு செல்வோர் முகாமிலேயே தங்குவதால், அவர்களையும் அகதிகளாக அதிகாரிகள் பதிவு செய்கின்றனர். அவர்களுக்கும் அகதிப் பதிவெண், தனிவீடு, குடும்பஅட்டை மற்றும் அடையாளஅட்டை வழங்கப்படுகின்றன. இவர்கள் விசாகாலம் முடியும் முன்பே இலங்கை செல்ல விரும்பினால், முகாம் பொலிசார், கியூபிரிவு பொலிசார், தனித்துணை ஆட்சியர், சென்னை அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரி ஆகியோரின் சான்றிதழ்கள் பெறவேண்டும். இந்தச் சான்றிதழ்களைப் பெற குறைந்தது ஒரு மாதம் தேவைப்படும். இதனால், அவர்கள் முறையான அனுமதியின்றி படகில் இலங்கைக்குச் செல்வது அதிகரித்துள்ளது. எனவே, விசாவில் வருபவர்களின் கடவுச்சீட்டு விபரங்களைத் தனியாகப் பதிவுசெய்தால், இப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என அகதிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக