26 செப்டம்பர், 2009

aniplote.gif 62.gif
அழிந்து போனவர்களால் அளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு
உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறோம்

*********************************32.gif பெயர் : திருகட்சிப் பெயர் : ரமேஸ்பிறப்பு :புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 04.09.1987விலாசம் :அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளிகுறிப்பு : மன்னார் நாணாட்டானில் புலிகளால் சுட்டுக்கொலை********************************33.gif பெயர் : திருகட்சிப் பெயர் : சேகர்பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 06.09.1987
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : மன்னாரில் புலிகளால் சுட்டுக்கொலை
*****************************
34.gifபெயர் : திரு. சாமித்தம்பி அகிலன்
கட்சிப் பெயர் : ராமு
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : மட்டக்களப்பு
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியாவில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை
******************************
35.gif பெயர் : திரு
கட்சிப் பெயர் : கம்பன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : கிளிநொச்சி
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
******************************
36.gif பெயர் : திரு
கட்சிப் பெயர் : தமிழ்செல்வன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : யாழ்ப்பாணம
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
*******************************
37.gif பெயர் : திரு. முருகானந்தம்
கட்சிப் பெயர் : கென்றி
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : திருமலை
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
********************************
38.gif பெயர் : திரு
கட்சிப் பெயர் : வேந்தன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : யாழ்பபாணம்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
*******************************
39.gifபெயர் : திரு
கட்சிப் பெயர் : காஸ்ட்ரோ
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : முல்லைத்தீவு
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
*******************************
40.gif பெயர் : திரு
கட்சிப் பெயர் : நந்தீஸ்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : முல்லைத்தீவு
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
********************************
41.gif பெயர் : திரு . ஹரிச்சந்திரன்
கட்சிப் பெயர் : டியுக்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
*******************************
42.gif பெயர் : திரு. கனகசுந்தரம்
கட்சிப் பெயர் : மனோரஞ்சன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : யாழ்ப்பாணம்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
*******************************
45.gifபெயர் : திரு. பத்மநாதன் மோகன்
கட்சிப் பெயர் : ஞானராஜ்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : திருமலை
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
******************************
52.gifபெயர் : திரு
கட்சிப் பெயர் : கரன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : மட்டக்களப்பு
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
******************************
53.gifபெயர் : திரு
கட்சிப் பெயர் : குமார்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : யாழ்ப்பாணம்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
******************************
55.gif பெயர் : திரு
கட்சிப் பெயர் : ரகுன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
*******************************
57.gif பெயர் : திரு
கட்சிப் பெயர் : ரஞ்சன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : திருமலை
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
*******************************
56.gif பெயர் : திரு
கட்சிப் பெயர் : சோதிராஜ்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : மட்டக்களப்பு
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
******************************
58.gif பெயர் : திரு
கட்சிப் பெயர் : ஜீவா
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 07.09.1987
விலாசம் : மட்டக்களப்பு
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தம்பனையில் புலிகளால் சுட்டுக்கொலை
******************************
60.gif பெயர் : திரு
கட்சிப் பெயர் : சின்னசுபாஸ்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 10.09.1987
விலாசம் : மட்டக்களப்பு
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியாவில் புலிகளால் சுட்டுக்கொலை
***************************
61.gif பெயர் : திரு. ஜூலியஸ்
கட்சிப் பெயர் : சேகர்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 10.09.1987
விலாசம் : யாழ்ப்பாணம்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியாவில் புலிகளால் சுட்டுக்கொலை
**************************
62.gif பெயர் : திரு. வீ.அசோகநாதன
கட்சிப் பெயர் : ஒஸ்வேர்ட்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 10.09.1987
விலாசம் : யாழ்ப்பாணம்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியாவில் புலிகளால் சுட்டுக்கொலை
*************************
63.gif பெயர் : திரு. எஸ்.குகதாஸ்
கட்சிப் பெயர் : குஞ்சன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 10.09.1987 ;
விலாசம் : யாழ்ப்பாணம்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியாவில் புலிகளால் சுட்டுக்கொலை
**************************
64.gif பெயர் : திரு. வீ.சிவபாலன்
கட்சிப் பெயர் :
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 10.09.1987
விலாசம் : யாழ்ப்பாணம்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியாவில் புலிகளால் சுட்டுக்கொலை
***************************
65.gif பெயர் : செல்வி. இராமையா
கட்சிப் பெயர் : பத்தியக்கா
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 10.09.1987
விலாசம் : யாழ்ப்பாணம்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியாவில் புலிகளால் சுட்டுக்கொலை 231.gif பெயர் : திரு. பூபாலப்பிள்ளை உமாகாந்தன்
கட்சிப் பெயர் : காந்தன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 13.09.1992
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா நொச்சிமோட்டையில் புலிகளால் சுட்டுக்கொலை
*************************************
24.gifபெயர் : திரு. செபமாலை இராயப்பு
கட்சிப் பெயர் : கனி
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 29.09.1991
விலாசம் : மன்னார்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா நொச்சிமோட்டையில் புலிகளால் சுட்டுக்கொலை

அழிந்து போனவர்களால் அளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு
உங்கள் த்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறோம்
டோஹா கொள்ளைச் சம்பவம் : 5 இலங்கையருக்கு சிறைத்தண்டனை
இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஐந்து இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இணையத் தளச் செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்செய்தியில்,

100,000 கட்டார் ரியால்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையிட்டதாக குறித்த ஐந்து இலங்கையர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி நள்ளிரவு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

முகாமையாளரின் அறையை வேண்டுமென்றே பூட்டாது சென்றுவிட்டு, பின்னர் திரும்பி வந்து பணத்தைக் கொள்ளையிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பணம் வைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டகத்தைத் திருடி வாகமொன்றின் மூலம் பாலைவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் குறித்த பெட்டகம் உடைத்தெறியப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டதாகவும்-

குறித்த ஐந்து பேரும் கொள்ளையிட்ட பணத்தை மறுநாள் காலை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தமையும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய டோஹா நீதிமன்றம் சந்தேக நபர்களுக்கு மூன்று ஆண்டுகால சிறைத் தண்டனையும், பின்னர் அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவினையும் பிறப்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தீப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
மனித எலும்புக் கூடுகள் மூன்று உயிலங்குளத்தில் மீட்பு- புலிகளுடையதாக இருக்கலாமென சந்தேகம்

மன்னார் மதவாச்சி பிரதான வீதியின் உயிலங்குளம் பிரதேச சதுப்பு நிலமொன்றில் புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் மூன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை எலும்புக்கூடுகள் காணப்பட்ட .இடத்திலிருந்து ஆயுதங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டன. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே இந்த எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிமல் மெதிவக்க அவை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறினார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் சந்தியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

உயிலங்குளம் விடத்தல்தீவு பிரதான வீதியின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்கள் அந்த வீதியின் இடதுபுறமாக அமைந்தள்ள சதுப்பு நிலத்தில் மனித எழும்புகளை ஒத்த எழும்புக்கூடுகள் சில காணப்படுவதை அவதானித்துள்ளனர். இது தொடர்பில் எழுந்த சந்தேகத்தையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு சென்ற பொலிஸார் அந்நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மூன்று மனித எழும்புக்கூடுகளை மீட்டனர்.

அத்துடன் அந்த எழும்புக்கூடுகளுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த ரீ56 ரக துப்பாக்கிகள் 02, மகசின்கள் 03, 40 துப்பாக்கி ரவைகள் அடங்கிய பூஷஸ்கள் 02, கா.வி.பு 00294 எனும் இலக்கத்தகடொன்று, பழுதடைந்த நிலையிலான சீருடைகள் 02, டோர்ச் லைட்டுகள் 02 என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாயுத உபகரணங்கள் மீட்கப்பட்டதை அடுத்து குறித்த எழும்புக்கூடுகளுக்குச் சொந்தமானவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மன்னால் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றத்திற்கு இராணுவத்தினரை கொண்டுசெல்ல அனுமதியோம் என்பதை பறைசாற்ற வேண்டும்

எமது நாட்டை பெரும் அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு இராணுவத்தினர் மீட்டுள்ளனர். எனவே, இராணுவத்தினரின் இந்தப் பணிக்கு தென்மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அங்கீகாரம் வழங்க வேண்டும். நாட்டை மீட்ட இராணுவ வீரர்களை யுத்தக்குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல விடமாட்டோம் என்ற செய்தியையும் உலகுக்கு தென்மாகாண மக்கள் பறைசாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று உங்களுக்கோர் கடமை உள்ளது. இந்த நாட்டை மீட்ட இராணுவ வீரர்களை யுத்த குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி மற்றும் எமது வீரர்களை காட்டிக்கொடுக்கும் சதித்திட்டங்கள் என்பவற்றுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மெதமுலனவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் மகளிர் அமைப்புக்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:

சில சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவும் பொய்யான சாட்சிகளை தேடுவதற்கு முயற்சிக்கின்றனர். இவ்வாறான நிலைமையே இன்று தோன்றியுள்ளது. அரசாங்கத்திற்கே எதிர்க்கட்சி இருக்கவேண்டும். மாறாக நாட்டுக்கு எதிர்க்கட்சி இருக்கக் கூடாது. ஆனால், இன்று நாட்டுக்கே எதிர்க்கட்சி உள்ளது. அவர்கள் தமது நாட்டுக்கே துரோகம் இழைக்கின்றனர். தாய் நாட்டுக்கு துரோகம் இழைக்க எவருக்கும் உரிமை இல்லை.

நாம் பிறந்த நாட்டுக்கு துரோகம் இழைப்பதற்கு எவருக்கும் முடியாது. இது நாம் பிறந்த நாட்டுக்கு செய்யும் துரோகமாகும். இராணுவ வீரர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இது தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். வடக்கு கிழக்கை மீட்கும் போராட்டத்திற்கு நாம் பாரிய நிதியை செலவழித்தோம். நாடு இரண்டாக பிரிவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால், அந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்பட்டது. கொழும்பை மட்டும் அபிவிருத்தி செய்ய முடியாது. கிராமத்தை முன்னேற்றும் தேவை எமக்குள்ளது. வீதிகள், பாலங்கள் என்பன புனரமைக்கப்பட வேண்டும். ஒரே நேரத்தில் ஐந்து துறைமுகங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளோம். நெல் மற்றும் தேயிலை என்பனவற்றுக்கு சிறந்த விலை கிடைக்கிறது. சமுர்த்தி, உர நிவாரணம் போன்றவற்றை வழங்குகிறோம். அத்தியாவசியப் பொருட்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம், சம்பளத்தை அதிகரித்துள்ளோம். கல்வி சுகாதாரம் என்பன இலவசமாக வழங்கப்படுகின்றன. எந்த இடத்திற்கும் சுதந்திரமாக செல்வதற்கு வீதிகள் உள்ளன. மேலும், எதிர்காலத்தில் சிறந்த சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும். பெற்றோரை மதிக்காத சமூகம் இருப்பின் அதில் அர்த்தமில்லை. எவ்வளவு வருமானத்தை இழந்தாலும் மதுவுக்கு முற்றுப்புள்ளி வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளோம். எமக்கு வருமானத்தை விட எதிர்காலத்தில் சிறந்த சமூகம் ஒன்று உருவாகுவதே முக்கியமாகும்.

இன்று உங்களுக்கோர் கடமை உள்ளது. அதாவது, இந்த நாட்டை மீட்ட இராணுவ வீரர்களை யுத்த குற்ற நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லும் முயற்சி மற்றும் எமது வீரர்களை கட்டிக்கொடுக்கும் சதித்திட்டங்கள் என்பவற்றிற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

எமது இராணுவ வீரர்கள் இந்த நாட்டை மீட்டதை நீங்கள் அனுமதிப்பதாக தேர்தல் மூலம் கூறுங்கள். இராணுவ வீரர்களை யுத்த நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்ல விடமாட்டோம் என்ற செய்தியை உலகத்திற்கு வழங்குங்கள்.

Friday, September 25, 2009

விலங்குகளைப் போல இலங்கை தமிழர்கள் : அமெரிக்க டாக்டர் டில்லியில் வேதனை

""விலங்குகளை அடைத்து வைத்துள்ளதுபோல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்கு கொட்டடியில் அடைத்துவைத்துள்ளனர். ஒரு மாதத்தில் வரப்போகும், வடகிழக்கு பருவமழையின் கடுமையான பாதிப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்,'' என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

டில்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்கள் சார்பில், இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய இஸ்லாமிய மைய அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அமெரிக்காவைச் சேர்ந்த, டாக்டர் எலின் சந்தர் உரையாற்றுவதாக இருந்தது. இவருக்கு விசா மறுக்கப்பட்டதையடுத்து, அமெரிக்காவில் இருந்தே நேரடியாக டெலிகான்பரன்சிங் மூலம் அரங்கில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: சுனாமியின்போது இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் அன்பை நேரடியாகக் கண்டேன். அப்படிப்பட்டவர்கள், இன்று உடமைகள் இழந்து தவிக்கின்றனர். முகாம்கள் என்ற பெயரில், முள்வேலிக்குள் அடைத்து வைத்துள்ள அவலம் நடந்துள்ளது. தண்ணீர் வசதி அந்த முகாமில் இல்லை. மூன்றரை லட்சம் பேருக்கு வெறும் ஐநூறு கழிவறைகள்தான் உள்ளன. முகாமைச் சுற்றிலும் மனிதக் கழிவுகள் கிடக்கின்றன. சுகாதாரமற்ற சூழ்நிலையால் சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்களுக்கு பலரும் பலியாகின்றனர். திறந்தவெளி பிரசவங்கள் நடக்கின்றன. தொண்டு நிறுவனங்கள் உதவ வந்தும் அதை அரசு தடுக்கின்றது. உணவு,மருந்து தட்டுப்பாடு உள்ளது. வெறும் 50 டாக்டர்கள்தான் உள்ளனர். உறவினர்களை பார்க்க அனுமதியில்லை. விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல இவர்களை ஒரு வனவிலங்கு கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் ஒரு மாதத்தில், வடகிழக்கு பருவமழை பெய்யும். முகாம் இருக்கும் வன்னி பகுதி மிகவும் தாழ்வான பகுதி. எனவே மழைநீர் பெரியஅளவில் தேங்கும் வாய்ப்புள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய மீடியாக்களுக்கும் அனுமதியில்லை. வடக்கு பகுதி,முல்லைத்தீவு போன்றவற்றில் கண்ணிவெடியெல்லாம் கிடையாது. போஸ்னியாவில் செர்பியர்கள் தாக்கப்பட்டபோது, சிலமணி நேரங்களில் ஐக்கியநாடுகள் சபை செயல்பட்டு அவர்களைக் காப்பாற்றியது. ஆனால் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, யாருமே கண்டுகொள்ளவில்லை. .நா., வை செயல்படவிடாமல் ஒருசில நாடுகள் செய்துவிட்டன. இவ் விஷயத்தில், இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு எலின் சந்தர் பேசினார்.

இதே கூட்டத்தில் பேசிய .தி.மு.., பொதுச்செயலர் வைகோ," இந்தியாதான் அனைத்து துயரங்களுக்கும் பொறுப்பு. மத்திய அரசு அளித்த 500 கோடி ரூபாய் மற்றும் உதவிப் பொருட்கள் என்ன ஆனது என்பதே தெரியவில்லை,' என்றார். .நடராஜன் மற்றும் பலர் உரையாற்றினர்
ஐ.நா விசேட பிரதிநிதி வோல்டர் கெலின் நலன்புரி நிலையங்களுக்கு விஜயம்-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி வோல்டர் கெலின் இன்றுபகல் வவுனியாவிலுள்ள செட்டிகுளம் கதிர்காமர் நிவாரணக் கிராமத்திற்குச் சென்றிருந்தார். அவர் அங்கு தங்கியிருக்கும் இடம்பெயர்ந்தோரின் நிலைவரங்களை பார்வையிட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டுள்ளார். இதற்கு முன்னர் முற்பகல் வவுனியா அரச அதிபரைச் சந்தித்த அவர், நலன்புரி நிலைய மக்களின் நிலைவரங்கள் மற்றும் அவர்களை மீள்குடியமர்த்துவதில் காணப்படும் தாமதங்கள் என்பன தொடர்பில் ஆராய்ந்துள்ளார். மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்கள், செலவீனங்கள், கண்ணிவெடிகளை அகற்றுதல் தொடர்பில் வவுனியா அரச அதிபர் இதன்போது வோல்டர் கெலினுக்கு எடுத்துக் கூறியுள்ளார். இதனையடுத்து கண்ணிவெடியகற்றும் பணிகளுக்கான நிதியுதவி மற்றும் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கெலின் உறுதியளித்துள்ளார்.

தேடப்படும் புலி சந்தேகநபரை கைதுசெய்ய உதவுமாறு பொதுமக்களிடம் பொலீசார் கோரிக்கை-

புலி பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பொலீசார் கோரியுள்ளனர். இந்தநபர் கொழும்பில் நடமாடுவதாக பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கிரிதரன் அல்லது கிரி என இந்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேகநபர் பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை மற்றும் கல்கிசை போன்ற பகுதிகளில் அடிக்கடி நடமாடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென பொலீஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. சுமார் 32வயது மதிக்கத்தக்க இந்தநபர் மாநிறமானவர் என்றும், இவர் தொடர்பிலான தகவல்களை பொலீஸ் தலைமையகத்திற்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது
தயாமாஸ்டர், ஜோர்ஜ்மாஸ்டர் ஆகியோரின் வழக்கு விசாரணை அக்டோபர் 30ம் திகதிக்கு ஒத்திவைப்பு-

புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் அக்டோபர் 30ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவர்களிருவரும் இன்று கொழும்பு பிரதம நீதவான் நிசாந்த ஹப்புஆராய்ச்சி முன்னிலையில் ஆஜராகியிருந்தனர். புலிகளின் வளர்ச்சிக்கு இவர்களிருவரும் உதவினார்களா இல்லையா என்பது குறித்து வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஜோர்ஜ் மாஸ்டருக்கும், தயா மாஸ்டருக்கும் எதிராக எவ்வித தகவல்களும் பெறப்படவில்லை என்று இன்று நீதிமன்றில் ஆஜரான பொலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவர்மீதான வழக்கை எதிர்வரும் 30ம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்
அரசியல் ரீதியிலான செயற்பாடுகள் இன்றி காணப்படும் கட்சிகளின் பதிவை இரத்துச்செய்யும் சட்டமூலம்-

அரசியல் ரீதியான செயற்பாடுகள் இன்றி காணப்படும் கட்சிகளின் பதிவை இரத்துச் செய்யும் வகையில் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்று கொண்டுவரப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை உயர்கல்வியமைச்சர் விஸ்வவர்ணபால நேற்றையதினம் சபையில் சமர்ப்பித்து அதன் விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். அவர் அங்கு உரையாற்றுகையில், தற்போது 60ற்கும் மேற்பட்ட அரசியல்கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் 15கட்சிகளே அரசியல் செயற்பாடுள்ள கட்சிகளாகும். இந்த திருத்தச் சட்டத்தின்மூலம் அரசியல் செயற்பாடு இல்லாத கட்சிகளின் பதிவுகள் இரத்தாகும். கட்சியொன்று பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் அக்கட்சி நான்கு வருட காலங்கள் அரசியல் ரீதியாக செயற்பட்டிருக்க வேண்டும். அக்கட்சியின் யாப்பு, கொள்கை, கணக்கறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட வேண்டும். இப்புதிய சட்டமூலத்தின் ஊடாக கட்சிகளின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

சொந்த மண்ணில் இலங்கைத் தமிழர் அகதிகளாக இருக்க, உலகத்தமிழ் மாநாடு எதற்கு? : ஜெயா கேள்வி

உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள். அத்துடன் இலங்கையில் சொந்த மண்ணில் தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந் நிலையில் உலகத்தமிழ் மாநாடு எதற்கு?"

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள். 1966ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய மலேசிய தமிழர்கள் இன்று அந்த நாட்டின் இரண்டாந்தர குடிமக்களாக துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், மலேசியத் தமிழர்கள் தெருக்களுக்கு வந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்த போது, அந்நாட்டு அரசாங்கத்தால் கொடூரமாக அடக்கப்பட்டனர். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கருணாநிதி குரல் எழுப்பவில்லை.

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய இலங்கைத் தமிழர்கள், இன்று தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் முகாம்களில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இனப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோதும் கூட கருணாநிதி குரல் கொடுக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் உலக தமிழ் மாநாடு எதற்கு? 2010 ஜனவரியில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் நடத்தப்போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இந்த 'உலகத் தமிழ் மாநாடு' கருணாநிதியை உயர்த்திக் கொள்வதற்காக அறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியே தவிர, இதனால் தமிழ் மொழிக்கோ தமிழனுக்கோ எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக