அமைச்சர் அதாவுல்லாவின் மேடைக்கு கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றநிலை தோன்றியதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கடும் இராணுவ, பொலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மேடையில் அமைச்சர் அதாவுல்லா உரைநிகழ்த்திவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவை தினமும் கடற்படையின் விசேட வைத்திய நிபுணர்கள் பரிசோதித்து வருவதாக இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல் ஆரோக்கிய நிலை நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் வைத்தியப் பரிசோதனைக்கு என விசேட மருத்துவ கவனம் செலுத்துமாறு இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம், ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
2 ஏப்ரல், 2010
புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் வேட்பாளர்களும், சர்வதேச கிளை அமைப்பாளர்களும் செல்வம், காண்டீபன்,தயா, ராஜா செட்டிகுளம் முகாமிற்கு விஜயம்
- நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், துரைசாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு), வரோனிகா (இந்திரா) மற்றும் புளொட் அமைப்பின் கனடா, லண்டன், நோர்வே கிளைகளின் அமைப்பாளர்களான செல்வம், காண்டீபன், தயா, ராஜா ஆகியோரும், திரு.தர்மலிங்கம் உள்ளிட்ட புளொட் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் இன்று வவுனியா செட்டிகுளம் சோன் 04 நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்தனர். இதன்போது அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டனர். தாம் குடிநீர், வீட்டு வசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் துன்பப்படுவதாகவும், தாம் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டால் இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து விடுபடலாமென நம்புவதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர். இதன்போது கருத்துரைத்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் வேட்பாளர்களும், புளொட் அமைப்பின் வெளிநாட்டு கிளைகளின் அமைப்பாளர்களும், இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அடிப்படைத் தேவைகள் யாவும் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதில் மிகவும் அக்கறையாகவே இருக்கிறோம். முகாம்களில் உள்ளோரின் மீள்குடியேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மீள்குடியமர்ந்துள்ள மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுகின்றது. எனவே அதற்குத் தேவையான உதவிகளை வழங்கவும், திறக்காமலிக்கும் பல பாடசாலைகளையும் திறந்து கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கச் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தி அவர்களை விடுவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தோம். கணிசமானளவு சிறுவர் போராளிகள் தற்போது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். எனினும் இன்னும் பல சிறுவர் போராளிகள் தடுத்து வைக்கபட்டுள்ளனர். அவர்களையும் விடுவித்து பெற்றோரிடம் சேர்ப்பிக்க மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றோம். இப்பணிகளைத் தொடர்வதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்குத் தேவைப்படுகிறது. எனவே பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.பிரதமரின் மகன் இலக்கத்தகடு இல்லாத வாகனத்தில் பிரசாரம்

களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் மகன் விதுர விக்ரமநாயக்க இலக்கத்தகடு இல்லாத வகனத்தில் பிரசாரம் செய்துவருவதாக லங்கா ட்ரூத் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விதுர விக்ரமநாயக்க பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரசாரத்தின் போது இலக்கத்தகடு இல்லாத வாகனத்தைப் பயன்படுத்தியதாக அந்த இணையத்தளம் ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளது

மன்னார் பேசாலையில் 17 டெங்கு நோயாளர்கள்

மன்னார் பேசாலை பகுதியில் 17 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக மன்னார் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் நோய்த் தொற்றுவதற்கு வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மன்னார் மாவட்ட சுகாதார திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக சுகாதாரக் கல்வி தொடர்பான குறும்படக் காட்சியும் காண்பிக்கப்பட்டு வருவதாக எமது மன்னார் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இலங்கை அகதிகள் 8 பேருக்கு அவுஸ்திரேலிய விசா

8 இலங்கை அகதிகள் 8 பேருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விசாவினை வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக செல்லமுற்பட்டு தடுத்து வைக்கபட்டிருந்த 41 பேருக்கு அவுஸ்திரேலியா விசாவினை வழங்கியுள்ளது.இவர்களுள் 27 ஆப்கானியர்களும், 8 இலங்கையர்களும் ஏனையோர் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என குடிவரவு திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கிறிஸ்மஸ்தீவில் உள்ள 36 பேருக்கான விசாக்கள் இன்றைய தினம் முதல் அமுலுக்கு வருகின்றன. கிறிஸ்மஸ் தீவில் இருந்த அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்படி அவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு தகுதி உடையவர்கள் என உறுதியானதன் பின்னரே அவர்களுக்கான விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று, கிறிஸ்மஸ் தீவில் இருந்து விசாரணைகளுக்காக மெல்பேர்னுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அகதிகளை கடத்தியமைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இந்தோனேசிய படகு செலுத்துனர்களும் டார்வின் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வடக்குப் பகுதி மறுவாழ்வுப் பணிகளில் இந்தியா தீவிரம்

இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் இந்தியா தீவிரமாகப் பங்காற்றி வருகிறது என, இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே. கந்தா தெரிவித்தார்.
÷இரு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் போரால் சேதமடைந்த வீடுகளைச் சீரமைப்பதற்காக இந்தியா அனுப்பியுள்ள சிமெண்ட் மூட்டைகளை இலங்கையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கொழும்பில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியத் தூதர் அசோக் கந்தா மேலும் பேசியது:
இலங்கை அரசு முன்வைக்கும் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடிப்படையில் இந்த உதவிகளை இந்தியா அளிக்கிறது.
இலங்கையின் வடக்குப் பகுதியில் மறுகட்டமைப்புப் பணிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதால், இந்தியா தனது உதவிகளை விரைவுபடுத்தி வருகிறது என்றார் அவர்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், வீடுகளைச் சீரமைக்கவும் இந்தியா மொத்தம் 4 லட்சம் சிமெண்ட் மூட்டைகளை வழங்கவிருக்கிறது. இதில் முதல் கட்டமாக 10,000 சிமெண்ட் மூட்டைகளை இலங்கையின் மறுகுடியமர்த்துதல் மற்றும் பேரழிவு நிவாரணப் பணிகள் அமைச்சகச் செயலர் யு.எல்.எம். ஹால்தீனிடம் இந்தியத் தூதர் அசோக் கந்தா ஒப்படைத்தார்.
எஞ்சியுள்ள சிமெண்ட் மூட்டைகளை அடுத்த 40-45 நாள்களில் இலங்கைக்கு தினமும் ஒரு தொகுப்பு என்ற அடிப்படையில் இந்தியா வழங்கும்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள தங்களது வீடுகளில் மீண்டும்
குடியேறியுள்ள தமிழர்களுக்கு இந்த சிமெண்ட் மூட்டைகளை அதிகாரிகள் விநியோகிப்பர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 8 சிமெண்ட் மூட்டைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கொண்டு தங்களது வீடுகளை அவர்கள் சீரமைத்துக் கொள்ளலாம்.
இலங்கையில் போரால் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தங்களது சொந்த வீடுகளைக் கட்டிக் கொள்வதற்காக, இந்தியா ஏற்கெனவே 5.30 லட்சம் தகர ஷீட்டுகளை வழங்கியுள்ளது. இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வுக்காக ரூ. 1,250 கோடி வழங்கப்படும் என இந்தியா கடந்த ஆண்டு, மே மாதம் அறிவித்தது. இந்த நிதியுதவியின் கீழ், இலங்கைக்கு மொத்தம் 4 லட்சம் சிமெண்ட் மூட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்தியா அளிக்கும் நிதியுதவியிலிருந்து இலங்கையின் வடக்குப் பகுதியில் பள்ளிகள், மருத்துவமனைகள் சீரமைக்கப்படும்.
இதுதவிர, இலங்கையின் வடக்குப் பகுதிகளை இணைக்கும் ரயில் பாதைகளைச் சீரமைக்க இந்தியா சுமார் ரூ. 1,912 கோடியை கடனுதவியாக அளிக்கிறது.
நித்யானந்தா வழக்கு விசாரணை: ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக திடீர் பரபரப்பு;

திரைப்படம் திரைப்படம்
நித்யானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் ஒன்றாக இருந்தது தொடர்பாக தமிழக, கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை சி.பி.ஐ. ஏற்று நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கார்த்திகேயன் மனு செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேரில் இன்று சென்னை ஐகோர்ட்டுக்கு வந்து ஆஜராகி சில விளக்கங்களை அளிக்கப் போவதாக திடீரென ஒரு தகவல் பரவியது. இதனால் வக்கீல்களும், நிருபர்களும் பரபரப்பு அடைந்தனர்.
ரஞ்சிதா வரப்போகிறார் என்ற தகவல் சிறிது நேரத்தில் ஐகோர்ட்டு முழுவதும் பரவி விட்டது. எல்லாரும் ரஞ்சிதா வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆங்கில தொலைக்காட்சி நிருபர்கள் காமிரா மேன்களுடன் அவசரம், அவசரமாக வந்து சேர்ந்தனர். ஒரு ஆங்கில சானல் ரஞ்சிதாவின் ஐகோர்ட்டு வருகையை நேரடி ஒளிபரப்பு செய்யவும் தயாராகி விட்டது. பிறகு தான் தெரிந்தது, அது ஏப்ரல்-1 முட்டாள்கள் தின தகவல் என்று. ச்சே... யாரப்பா... இப்படி வதந்தியை கிளப்பி விட்டது என்றபடியே ரஞ்சிதாவை எதிர்பார்த்தவர்கள் கலைந்து சென்றனர்.

வாக்குப் பெட்டிகளின் உட்புரத்திலும் ஸ்டிக்கர் ஒட்ட நடவடிக்கை

எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளின் உட்புரத்திலும் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டுவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க அனுமதிவழங்கியுள்ளார்.
அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் விடுத்த வேண்டுகோளை செவிமடுத்தே அவர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி தேர்தல் தினம் வாக்கெடுப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் வாக்குப் பெட்டியை சீல் வைப்பதற்கு முன்னர் பெட்டியை பரிசோதித்து கட்சிப் பிரதிநிதிகள் பொட்டியின் உட்பகுதியில் கட்சி ஸ்டிக்கரை ஒட்டவேண்டும்.
அதேபோன்று வாக்கெடுப்பு முடிந்த பின்னரும் வாக்குகள் எண்ணும் நிலையத்தக்கு கொண்டுசெல்வதற்கு முன்னரும் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்ட வகை செய்யப்பட்டுள்ளது.

மஹியங்கனையில் உணவு விஷமானது குறித்து விசாரணைகள் ஆரம்பம்

மாலை உணவு விஷமானதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 380 பெண்களில் தற்போது 33 பேர் மாத்திரம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் ஏனையோர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மஹியங்கனை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் 33 பேரும் தொடர்ச்சியான வாந்தி காரணமாக உடல்பலவீனமடைந்து காணப்படுவதால் சிகிச்சைபெறுவதாகத் தெரிவித்த அவர்,இன்று நண்பகலிற்குபின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கவுள்ளாதாகவும் தெரிவித்தார்.
மஹியங்கனை ஆடைத்தொழிற்சாலையில் உணவு விஷமானது தொடர்பில் புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் , கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உஉணவு மாதிரிகள்தொடர்பான அறிக்கைகள் இன்னமும் 2 நாட்களில் கிடைக்கும் எனவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 380 பெண் தொழிலாளர்கள் வாந்தி,தலைவலி போன்ற உபாதைக்களுக்கு ஆளாகியிருப்பதுடன் இரவு உணவு மீன் கறியில் காணப்பட்ட நச்சுத்தன்மை தான் விஷமானத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வழங்கப்பட்ட உணவுடன் குடி நீர் போன்றவற்றின் மாதிரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று இயேசு பாடுபட்டு மரித்ததை நினைவுகூரும் பெரிய வெள்ளிக்கிழமை

இன்று அனைத்துலக கிறிஸ்தவ, கத்தோலிக்கத் திருச்சபையானது இயேசு பாடுபட்டு மரித்ததை நினைவுகூரும் பெரிய வெள்ளிக்கிழமை தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இறை சித்தத்தை ஏற்று இயேசு தாம் பாடுபட்டு, சிலுவை சுமந்து கல்வாரியில் உயிர்விட்ட அந்தத் துயர சம்பவத்தை நாம் நினைவுகூருகின்றோம்.
இறைமகன் இயேசு மனுக்குலத்தின் மீட்க கல்வாரி மலையில் தம்மையே பலியாக்கினார்.
இயேசுவின் திருப்பாடுகளை நம் மனக்கண் முன் நிறுத்தி, நமது பாவங்களுக்காக வருந்தவும், மனந்திருந்தி வாழவும் மீட்பைப் பெறவும் அழைப்பதுதான் இன்றைய முக்கிய தேவையாக இருக்கின்றது.
கிறினதுவே இந்த உலகின் ஒளி. இதற்கு சாட்சியாகவே வாழ்ந்து தன்னையே அர்ப்பணித்தவர் இறைமகன் இயேசு.
இயேசுவின் திருப்பாடுகளித் தியானிக்கும் நாம் அவர் காட்டிய பாதையில் வாழ்கின்றோமா? இல்லையே. இன்னுமின்னும் பாவக் செய்கின்றோம். அவரது சுமையை மென்மேலும் அதிகரிக்கின்றோம்.
இன்றைய நாளிலே இயேசுவின்பாடுகளையும் மரணத்தையும் தியானிக்கும் நாம் சிலுவையின் மறை உண்மைகளாக வாழ உறுதி கொள்வோம்.
நாம் மனிதம் மிக்கப் புனிதர்களாக வாழ்ந்தால் தான் எஅம் பாவங்களுக்காக ஜீவ பலியான இயேசுவின் திட்டமும் நிறைவேறியதாக இருக்கும், இருக்க்வும் வேண்டும்.
இறைவனுக்கு உகந்த மக்களாக வாழும் வரம்வேண்டி இன்றைய வழிபாடுகளில் தூய மனதோடு இணைவோம், இறைவன் சித்தப்படி வாழ்வோம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)