27 டிசம்பர், 2009



நாளாந்த
பிரச்சினையின் முடிவுக்கும் அரசியல் தீர்வுக்கும் வழிவகுக்கும் தீர்மானமே இன்றைய தேவை



அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் பிராந்திய சபைகளை உருவாக்குவதாலேயே அதை எதிர்த்ததாக ரணில் விக்கிரமசிங்ஹ ஒரு பத்திரிகைப் பேட்டியில் பின்னர் கூறினார். அந்தத் தீர்வுத் திட்டத்தை எதிர்ப்பதற்குப் பேரினவாதிகள் கூறிய காரணமும் இது தான். இந்த விடயத்தில் ரணிலும் பேரினவாதிகளும் ஒன்றாகச் சங்கமித்தார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. முடிவொன்றை எடுப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டம் எந்த முடிவும் எடுக்காமலே கலைந்தது. கூட்டமைப்பைத் தவிர மற்றைய எல்லா அரசியல் கட்சிகளும் தத்தமது நிலைப்பாட்டுக்கு அமைவான முடிவுக்கு வந்து விட்டன. பெரும்பாலான மக்களும் முடிவுக்கு வந்து விட்டார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களால் இன்னும் ஒரு முடிவுக்கு வர இயலாதிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றித் தீர்மானிப்பதில் எவ்வித சிரமும் இருக்க வேண்டியதில்லை. தமிழ் மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அவர்கள் இன்று நாளாந்த வாழ்வில் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் உதவுவதாக இருக்க வேண்டும்.

புலிகள் ஆயுத பலத்துடன் இருந்த காலத்தில் பெரும்பாலான தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியவில்லை. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைப் புலிகளே தீர்மானித்தார்கள். தேர்தல் பகிஷ்கரிப்பையும் அவர்களே தீர்மானித்தார்கள். தீர்மானிக்கும் சுதந்திரம் மக்களுக்கு இருக்கவில்லை. இப்போது மக்கள் சுதந்திரமாகத் தீர்மானிக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் சுதந்திரமாகத் தீர்மானிக்கலாம். யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் தமிழ் மக்ளுக்குக் கிடைத்த பல சுதந்திரங்களுள் வாக்களிப்புச் சுதந்திரமும் ஒன்று.

நீண்ட காலத்துக்குப் பின் கிடைத்த சுதந்திரத்தைச் சரியான முறையில் தமிழ் மக்கள் பிரயோகிக்க வேண்டும். அளிக்கும் வாக்கு பிரயோசனமானதாக இருக்க வேண்டியது அவசியம். கட்டுப்பணத்தையே காப்பாற்ற முடியாத வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்குகள் கிணற்றில் போட்டதற்குச் சமன். அந்த வாக்குகளால் தமிழ் மக்களுக்குத் துளியளவு கூடப் பலனில்லை. பிரதான வேட்பாளர்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள தெரிவு.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சரத் பொன்சேகாவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவும் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்புக் கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றன. நீண்ட காலமாகத் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் இடதுசாரிக் கட்சிகளும் இந்த அணியில் உள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சிக் காலத்தில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது. இனப் பிரச்சினையின் தீர்வுக்கான ஆலோசனைகளைத் தயாரிப்பதற்கான இக் குழு அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கின்றது. இந்த அறிக்கையில் அடங்கியுள்ள ஆலோசனைகள் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்டனவாக உள்ளன. இதே நேரம், பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி இலங்கை மக்களுக்கு மாத்திரமன்றி இந்தியாவுக்கும் உறுதியளித்திருக்கின்றார்.

இவற்றை ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தெரிவு இனப் பிரச்சினையின் தீர்வுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக பொன்சேகா போட்டியிடுகின்றார். இந்தக் கட்சியின் பெயரும் சின்னமும் இப்போது தான் மக்களுக்குத் தெரிய வருகின்றன. நாட்டின் எந்தப் பகுதியிலாவது இக் கட்சிக்கு அலுவலகம் இருப்பதாகத் தெரியவில்லை. இனப் பிரச்சினையைப் பற்றியும் அதன் தீர்வைப் பற்றியும் இந்தக் கட்சி எப்போதேனும் அறிக்கையாவது வெளியிட்டதாக இல்லை. எனவே இனப்பிரச்சினையின் தீர்வுக்கும் பொன்சேகாவின் கட்சிக்குமிடையே வெகு தூரம்.

ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் பொன்சேகாவை ஆதரிக்கும் பிரதான கட்சிகள். எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிழலாகச் செயற்படும் ஜனநாயக மக்கள் முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸஞிம் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் மற்றைய கட்சிகள். இவ்விரு கட்சிகளும் சில வாரங்களுக்கு முன் பொன்சேகாவை இனவாதி என்று முத்திரை குத்தியவை. இப்போது பொன்சேகாவைத் தலையில் தூக்கி வைத்துப் போற்றுகின்றார்கள். இதற்குப் பெயர் தான் சந்தர்ப்பவாதம். இந்தச் சந்தர்ப்பவாதத்துக்குத் தமிழ் பேசும் மக்களைப் பகடைக் காய்களாக்குவது வேதனை தருகின்றது. சில வாரங்களுக்கு முன் இவர்களுக்கு இனவாதியாகத் தோன்றியவர் இப்போது தமிழ் மக்களின் நண்பனாக இவர்களால் சித்தரிக்கப்படுவது வியப்பை அளிக்கின்றது.

பொன்சேகாவின் பிரதான ஆதரவாளர்களான ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் எந்தக் காலத்திலும் தமிழ் பேசும் மக்களின் நலனில் அக்கறை செலுத்திய கட்சிகளல்ல. மக்கள் விடுதலை முன்னணி சிங்களப் பேரினவாதத்தின் இன்னொரு முகம். பச்சை பச்சையாக இனவாதம் பேசுபவர்கள் ஒரு முகம். மக்கள் விடுதலை முன்னணியினர் இடதுசாரி வேஷம் போட்டு இனவாதம் பேசும் முகம். பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதற்கே இவர்கள் எதிரானவர்கள். அத் தீர்வுக்கு மேலான தீர்வுக்குப் பொன்சேகாவுடன் ஒத்துழைப்பார்களா?

சிறுபான்மையினரின் நண்பன் போல வேஷம் போட்டுக் கொண்டு கருவறுக்கும் கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி. தமிழ் மக்களின் நலனுக்கு முரணாகச் செயற்படும் வரலாற்றை இக் கட்சி கொண்டிருக்கின்றது.

பண்டா - செல்வா ஒப்பந்தம் நடைமுறைக்கு வர விடாமல் தடுத்ததில் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பிரதான பங்கு உண்டு. அந்த ஒப்பந்தம் கைவிடப்படும் நிலையை உருவாக்கிய சூத்திரதாரி ஐக்கிய தேசியக் கட்சியே.

மாவட்ட சபை தருவதாக 1965 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது ஐக்கிய தேசியக் கட்சி. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் மாவட்ட சபையைக் கொடுக்கவில்லை. அரசாங்கத்தின் இறுதிக் காலத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர்களை அழைத்து, மாவட்ட சபை தருவது சாத்தியமில்லை என்று டட்லி சேனநாயக கூறினார்.

பொது சன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது. அத் தீர்வுத் திட்டம் தமிழ் பேசும் மக்களுக்குக் கூடுதலான அதிகாரங்களை வழங்குவதால் பகிரங்கமாக எதிர்க்க அக் கட்சி விரும்பவில்லை. தமிழ் மக்களின் நண்பனாகக் காட்டிக் கொண்டு தமிழ் மக்களின் நலன்களுக்குத் தடையாகச் செயற்படுவது ஐக்கிய தேசியக் கட்சியின் வழமையான பாணி. அதற்கமைய அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்கு எதிராக எங்கும் பேசவில்லை. பாராளுமன்றத்திலும் பேசவில்லை. ஆனால் பாராளுமன்றத்தில் குப்பாடித்தனமாக நடந்து அத் தீர்வுத் திட்டம் வாக்கெடுப்புக்கு வருவதைத் தடுத்தார்கள்.

அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் பிராந்திய சபைகளை உருவாக்குவதாலேயே அதை எதிர்த்ததாக ரணில் விக்கிரமசிங்ஹ ஒரு பத்திரிகைப் பேட்டியில் பின்னர் கூறினார். அந்தத் தீர்வுத் திட்டத்தை எதிர்ப்பதற்குப் பேரினவாதிகள் கூறிய காரணமும் இது தான். இந்த விடயத்தில் ரணிலும் பேரினவாதிகளும் ஒன்றாகச் சங்கமித்தார்கள். தமிழ் மக்களுக்குக் கூடுதலான அதிகாரங்களை வழங்கக் கூடாதென்பது இவ்விரு சாராரினதும் நிலைப்பாடு.

ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் இன்று வரை இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தது கிடையாது. அதற்காக முயற்சித்ததும் கிடையாது. அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்தவொரு வெளிநாட்டினதும் நிர்ப்பந்தம் இல்லாமல் தீர்வுகளை முன்வைத்திருக்கின்றது.

பிரதான வேட்பாளர்கள் இருவரில் இனப் பிரச்சினைக்கான தீர்வு நடைமுறையை ஆக்கபூர்வமாக முன்னெடுத்துச் செல்லக் கூடியவர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் கூட்டமைப்புக்குத் தடுமாற்றம் இருக்குமேயானால் இவர்கள் யதார்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

சரத் பொன்சேகாவின் கட்சிக்கு (அன் னக் கட்சி) இனப் பிரச்சினை பற்றிய சிந்தனை இல்லை. அவரை ஆதரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடு தலை முன்னணியும் அரசியல் தீர்வுக்குத் தடையாகச் செயற்பட்ட வரலாற்றைக் கொண்டவை. பதின்மூன்றாவது திருத்தமே வேண்டாம் என்கிறது மக்கள் விடுதலை முன்னணி. இந்த நிலையில் பதின் மூன்றாவது திருத்தத்திலும் கூடுதலான தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாகப் பொன்சேகா கூறுவதைப் போன்ற வேடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்த வகையில் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கின்றார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை இந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றது. இந்தியாவுக்கு அவர் அளித்திருக்கும் வாக்குறுதி இந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றது. சொல்பவற்றைச் செய்து காட்டிய வரலாறு இந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றது.

இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் தாமதிக்காமல் சரியான முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவு பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய ஒரு தீர்வை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கும் அதை அடிப்படையாகக் கொண்டு படிப்படியாக முழுமையான தீர்வை அடைவதற்கும் வழிவகுப்பதாக அமைய வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவு.

முழுமையான அரசியல் தீர்வை ஒரே நேரத்தில் அடைய வேண்டும் என்ற நிலைப்பாடு யதார்த்தபூர்வமானதல்ல. சாத்தியமானதுமல்ல. ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ்த் தலைமை விட்ட தவறுகளின் விளைவாக இந்த நிலை உருவாகியிருக்கின்றது. முழுமையான தீர்வு இல்லாமல் வேறு எதையும் ஏற்பதில்லை என்று தமிழ்த் தலைவர்கள் பிடிவாதம் பிடிப்பார்களேயானால் தீர்வு தள்ளிப் போவது மாத்திரமன்றித் தமிழ் மக்கள் முகங் கொடுக்கும் நாளாந்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலை உருவாகுவதையும் தவிர்க்க முடியாது.

யுத்தம் நடத்திய அரசாங்கம் என்று குற்றச்சாட்டுச் சுமத்துவது அர்த்தமற்றது. முப்பது வருட காலத்தில் வெவ்வேறு அரசாங்கங்கள் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியிருக்கின்றன. ஒவ்வொரு அரசாங்கமும் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் புலிகளால் குழப்பப்பட்ட நிலையிலேயே யுத்தம் அவசியமாகியது. இன்றைய அரசாங்கத்தின் சமாதான முயற்சியையும் புலிகள் சீர்குலைத்தனர். பேச்சுவார்த்தையில் பங்குபற்றப் புலிகள் மறுத்தனர். அப்போதும் அரசாங்கம் யுத்தத்தை நாடவில்லை. பேச்சுவார்த்தைக்கு முயற்சித்தது. ஆனால் மாவிலாறுப் பிரச்சினையைத் தோற்றுவித்துப் புலிகளே யுத்தத்துக்கு வழிவகுத்தனர்.

இன்று யுத்தம் முடிந்துவிட்டது. புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை தமிழ் மக்களுக்கும் நன்மை பயப்பதாகவே உள்ளது. புலிகளின் கட்டுப்பாடுகளாலும் தான் தோன்றித்தனமான செயற்பாடுகளாலும் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் இப்போது நீங்கிவிட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்போது சுதந்திரமாகச் செயற்பட முடியும். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் சுதந்திரமாகத் தனது கருத்தை வெளியிடுவதாலேயே தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி இன்னும் அவர்களால் தீர்மானத்துக்கு வர இயலவில்லை. இது யுத்தத்தின் விளைவாக இவர்களுக்குக் கிடைத்த சுதந்திரம். புலிகளின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த காலத்தில் அவர்கள் கூறுவதையே இவர்கள் முடிவாக எடுக்க வேண்டியிருந்தது.

யுத்தத்தின் முடிவு தமிழ் மக்களுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. இந்த நிலை அரசியல் தீர்வுக்கும் சாதகமானது. தமிழ் மக்களும் தலைவர்களும் இச் சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்





வெற்று வாக்குறுதிகளால் தீர்வு சாத்தியமாகாது









ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இழுபறி நிலை நிலவுவது இன்று இரகசியமல்ல.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கா கத் தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோஷத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்தவர்கள் இன்று மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்பது இதுவரை காலமும் அவர்களுக்கிடையே கொள்கை உடன்பாடு இருக்கவில்லை என்பதையும் வெளிச் சக் தியொன்றின் அழுத்தம் காரணமாகவே ஒன்றாகச் செயற்பட்டார் கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றது.

எவ்வாறாயினும், கடந்த காலத்தைப் பற்றி இப்போது அசைபோட் டுக் கொண்டிருப்பதால் ஆகப் போவது எதுவுமில்லை. தமிழ் மக்களின் உடனடி மற்றும் நீண்ட கால நலன்களைப் பேணு வதற்கான வழிவகைகள் பற்றிய சிந்தனையே இன்றைய தேவை.

தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியின் இன்றைய நிலையையும் கவ னத்தில் எடுத்துப் பார்க்கும் போது தமிழ்த் தலைவர்கள் ஆறு தசா ப்தங்களை வீணாக்கிவிட்டார்கள் என்ற முடிவுக்கே வர வேண்டி யுள்ளது.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியைத் தவ றான தடங்களில் முன்னெடுத்ததன் விளைவே இந்த நிலை.

பிர ச்சினையின் தீர்வு எவ்வளவு காலத்துக்குப் பின்தள்ளப்படுகின் றதோ அவ்வளவுக்குத் தமிழ் மக்களின் துன்பங்கள் தொடர்வ தாக இருக்கும். எனவே பிரச்சினையின் தீர்வுக்கான வழிமு றையை நிதானமாகச் சிந்தித்துப் பின்பற்ற வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலைவர்கள் அனைவருக்கும் உண்டு.

சிங்களத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று தமிழ்த் தலைவர் கள் அடிக்கடி கூறுவது வழக்கம். செய்துகொண்ட உடன்படிக் கையை நிறைவேற்றவில்லை என்றும் வாக்குறுதிகளை மீறினார் கள் என்றும் தமிழ்த் தலைவர்கள் கூறுகின்றார்கள்.

உடன்படிக் கைகள் தோல்வியடைந்ததற்குத் தமிழ்த் தலைவர்களே பிரதான பொறுப்பாளிகள். வாக்குறுதிகள் விடயத்திலும் தமிழ்த் தலைவர் கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது.

யாராவது வாக்குறுதி அளிக்கும் போது அதை அப்படியே ஏற்றுக் கொள்வது சரியான தலைமைத்துவக் குணாம்சமாகாது. ஆதரவை பெறுவதற்காக எந்த வாக்குறுதியையும் அளிப்பார்கள்.

அது நடை முறைச் சாத்தியமானதா என்பது பற்றியும் வாக்குறுதி அளிப்பவ ருக்குப் பக்கபலமாக உள்ள அரசியல் சக்திகளின் நிலைப்பாடு பற்றியும் நிதானமாக ஆராய்ந்த பின்னரே அதை ஏற்பதா இல் லையா என்ற முடிவுக்கு வர வேண்டும். அவசரப்பட்டு வாக் குறுதியில் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட பின்னர் ஏமாற்றப் பட்டுவிட்டோம் எனக் கூறுவதில் அர்த்தமில்லை.

நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலிலும் வேட்பாளர்கள் தாராள மாக வாக்குறுதிகளை அளிக்கலாம். அந்த வாக்குறுதியை நடை முறைப்படுத்துவதற்கான வல்லமையும் சாதக சூழ்நிலையும் அவ ருக்கு உண்டா என்பது பற்றியே முதலில் சிந்திக்க வேண்டும்.

இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் இன்றைய நிலையில் பதின்மூன்றாவது திருத்தமே யதார்த்தபூர்வமானது.

பாரா ளுமன்றத் தேர்தலின் பின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கச் சற்றுக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப் படுத்துவதும் சாத்தியமாகலாம்.

இத்தகைய தீர்விலிருந்து படிப்படியாக முன் னேறிச் செல்வதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதில் தமிழ்த் தலைவர்களுக்குக் கூடுதலான பொறுப்பு உண்டு.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள அறி க்கை பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதி காரங்களைக் கொண்டதாக இருப்பதால் அதை நடைமுறைக்குக் கொண்டு வருவது தீர்வு முயற்சியில் சிறப்பான ஆரம்பமாக இருக்கும். இதற்கேற்ற வகையில் தமிழ்த் தலைவர்கள் செயற் படுவார்களென நம்புகின்றோம்.




வடக்கு முஸ்லிம்கள் மே மாதம் முழுமையாக மீள்குடியேற்றம்
புத்தளம் - மன்னார் வீதி ஜனவரியில் திறப்பு:
அமைச்சர் ரிஷாட்டுக்கு ஜனாதிபதி புகழாரம்




வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சகல முஸ்லிம்களும் மே மாதமளவில் சொந்த இடங்களில் முற்றாக மீள்குடியேற்றப்படுவ ரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்கு வசதியாக புத்தளத்தி லிருந்து மன்னார் செல்லும் பாதை அடுத்த மாதம் திறந்து வைக்கப்படுமெனவும் ஜனாதிபதி கூறினார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வடமாகாண மாநாடு நேற்று புத்தளம் ஆலங்குடாவில் நடைபெற்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் ஐம்பதினாயிரம் பேர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி:-

முஸ்லிம் மக்களை பணயக் கைதிகளாக வைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்களை நாம் முழுமையாகப் பொறுப்பேற்கிறோம்.

முஸ்லிம்கள் எனது சகோதரர்கள். என்னை முழுமையாக நம்புங்கள். முஸ்லிம்கள் தொடர்பாக என்மீது பல்வேறு அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் எதிர்க் கட்சிகளால் சுமத்தப்பட்டன. ஐந்து வேளைத் தொழுகையை நான் நிறுத்தி விடுவேனெனக் கூறினார்கள். இப்போது உண்மை நிலையை நீங்கள் புரிந்திருப்பீர்கள். அவ்வாறான பொய்களெல்லாம் எதிர்க் கட்சிகளினாலும் அதன் தலைவர்களினாலும் பரப்பப்பட்டவை. அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள்.

நான் கடந்த தேர்தலில் கூறியவைகளை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறேன். நீங்கள் கடந்த 19 வருடங்களாக இந்தப் பகுதிகளில் அகதிகளாக வாழ்கின்ஹர்கள். நீங்கள் பட்ட கஷ்டங்களை நான் நன்கறி வேன். அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் புலிகளோடு ஒப்ப ந்தம் செய்தார். அதன் பின்பு, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விருப்பத்துடன் தான் வெளி யேறினரென்று ஹக்கீமும் அவரது சகபாடி களும் கூறினர். அதன்பின்பு உங்களைப் பற்றி அவர்கள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. இப்படிப்பட்டவர்கள்தான் இப்போது உங்கள் மத்தியில் பேச வருகிறார்கள். இவர்களை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.

ப்படியானவர்கள்தான் இரு இனங்க ளையும் பிளவுபடுத்த முயன்றனர். அது பலிக்கவில்லை. முஸ்லிம்களின் நிம்மதியைக் கெடுத்து அகதிகளாக்கியவர்களை நீங்கள் ஒருபோதும் நம்பவேண்டாம்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட உங் களது கஷ்டங்களை நான் நன்கறிவேன். அதனால்தான் ஐக்கிய நாடுகள் வரை சென்று பேசினேன். அதேநேரம், மஹிந்த சிந்தனையிலும் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப் பிட்டிருக்கிறோம்.

ஆகவே, தேர்தல் காலங்களில் வந்து பொய் கூறுபவர்களை நம்பாதீர்கள். பொய்களுக்கு என்றுமே அடிபணிந்து விடாதீர்கள். என்றுமே நான் உங்கள் நண்பன். இந்த நட்பு என்றும் தொடரும். என்னை முழுமையாக நம்புங்கள் என்றார் ஜனாதிபதி.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கு முஸ்லிம் மக்களுக்காக அயராது பாடுபடும் ஒரு செயல்வீரன் ரிஷாட். அவரது பணிக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்.

எனது ஆலோசனையின் பேரில் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங் களிலிருந்த சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை மிக கண்ணியமாக நடாத்தி அம்மக்களின் தேவைகள் அனைத்தையும் பூரணமாக நிறைவேற்றிக் கொடுத்தவர் அமைச்சர் ரிஷாட்.

இதனால் எனக்கும் எனது அரசுக்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லபிப்பிராயம் ஏற்படுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார்.

அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் அவரது மக்களின் முன்னிலையிலேயே நன்றி தெரிவிக்கிறேன்.

மிக இளவயதில் அமைச்சராக உயர்ந்து இன்று வடமாகாண முஸ்லிம்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார். எனது அரசாங்கத்தில் இவர் அமைச்சராக இருப்பது ஒரு சிறப்பான விடயமாகும் என்றும் கூறினார்.

அமைச்சர்கள் அமீர் அலி, நஜீப் ஏ. மஜீத், மில்ரோய் பெர்னாண்டோ, எஸ். எம். சந்திரசேன, சம்பிக்க ரணவக்க பிரதியமைச்சர்களான கே.ஏ.பாயிஸ், நிஜாமுதீன், மாகாண அமைச்சர் எம். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஆளுனர் அலவி, எஸ்.பி.திஸாநாயக்க, ஜனாதிபதி ஆலோசகர் அஸ்வர் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

26 டிசம்பர், 2009

புனர்வாழ்வு அழிக்கப்பட்ட புலிகளை அவர்களின் குடும்பங்களுடன் இணைந்து வாழ வழியேற்படுத்துவதே புனர்வாழ்வாகும்- தலைவர் சித்தார்த்தன்!


அரசினால் புனர்வாழ்வு வழங்கப்பட்டுவரும் புலிகளை அவர்களின்

குடும்பங்களுடன் இணைந்து வாழ அனுமதிப்பதே புனர்வாழ்வாகும் என புளொட்
இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை நம்பிக்கையின் அடிப்படையில் ஆதரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், புலிகள் இயக்கத்தில் இருந்து
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை அரசு விடுவிக்கவேண்டும் என அரசை கோரியுள்ளதாகவும் புளொட் தலைவர் தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
26.12.2009.

1815பேர் உறவினர் நண்பர் வீடுகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு துணுக்காய், மாந்தை பகுதிகளில் குடியேற்றம்


- நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்களுடன் தங்கியுள்ள சுமார் 1815பேர் இன்று முல்லைத்தீவு, துணுக்காய், மாந்தை பகுதியில் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு அரசஅதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரிவைச் சேர்ந்த 1200பேரும், மன்னார் மாந்தை கிழக்குப் பிரிவைச் சேர்ந்த 615பேரும் இன்று அழைத்துச் செல்லப்படவுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரையில் 10,000பேர் வரையில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு குடியேற்றப்பட்ட அனைவருக்கும் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வைத்தியசாலை வசதிகள், கூட்டுறவு கடைகள், பாடசாலைகள் இயங்க ஆரம்பித்து விட்டதுடன் போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்கான விருப்பத்தைத் தெரிவித்து பதிவுகளை மேற்கொண்டுள்ளவர்களில் 1815பேரே இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதேவேளை, ஒட்டுசுட்டான் கிழக்கு பகுதியில் மேலும் 328 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள கப்பல் நான்காம் கட்டப்போரின்போது புலிகளால் கொள்வனவு செய்யப்பட்டது-







இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு கொழும்புத் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட கப்பல் புலிகளின் நான்காம் கட்ட ஈழப்போரில் கொள்வனவு செய்யப்பட்டதென கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் ஆயுதக் கடத்தலுக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் புலிகளால் ஒருமுறையேனும் இக்கப்பலில் ஆயுதங்களைக் கடத்த முடியவில்லையென்றும் கடற்படையினர் கூறியுள்ளனர். பிரித்தானியா லொய்டர்ஸ் நிறுவனத்தினரிடமிருந்து இக்கப்பல் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென தெரிவித்துள்ள கடற்படையினர், இவற்றில் சிலவை ஜப்பானிய தயாரிப்புக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். புலிகள் மொத்தம் 5 கப்பல்களைக் கொள்வனவு செய்ததாகவும் எஞ்சிய 4 கப்பல்களில் ஒன்று கனடாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்து இரண்டு ராடர்கள் கைப்பற்றல்-


முல்லைத்தீவு வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து இரண்டு ராடர் இயந்திரங்களை பொலீசார் மீட்டுள்ளனர். இந்த ராடர் இயந்திரங்கள் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த ராடர் இயந்திரங்கள் ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்டவையென்றும் பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த ராடர்கள் சுமார் 80மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்தவை என்று தெரிவித்துள்ள பொலீசார், கடற்படையினரை உளவுபார்க்கவே இவை பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ராடர்கள் மீட்கப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை படையினரும், பொலீசாரும் இணைந்து மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

42இலங்கையர்கள் மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்பினர்-


மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கென சென்றிருந்த நிலையில் அங்கு பல்வேறு இன்னல்களை அனுபவித்த 42பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியா, குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் சென்றவர்களே இவ்வாறு இன்று நாடுதிரும்பியுள்ளனர். எசமானர்கள் மற்றும் எசமானிகளால் பல்வேறு இன்னல்களை அனுபவித்தவர்களையே நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இனந்தெரியாத ஆயுததாரிகளால் தம்புள்ள வர்த்தகர் படுகொலை-



மாத்தளை மாவட்டம் தம்புள்ளை நகரில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5மணியளவில் இடம்பெற்றதாக தம்புள்ளைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தகரின் வர்த்தக நிலையத்திற்கு சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள் குறித்த வர்த்தகர்மீது கூரிய ஆயுதங்களினால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலீசார் தெரிவித்துள்னர். சம்பவத்தில் உயிரிழந்தவர் 55வயதுடைய தம்புள்ளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் கடமையாற்றிய மேலுமிருவர் ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியக் கடற்படையால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களில் 99பேர் விடுதலை-






இந்தியக் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட மீனவர்களில் 99பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்களை நாட்டுக்கு திருப்பியழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கடந்தமாதம் இந்த மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களை விடுவிப்பதற்காக இந்தியத் தூதரகம் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து: எம்.பி., தகவல்






இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து துவங்க திட்டம் உள்ளது,'' என, காங்கிரஸ் எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.திருவண்ணாமலையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நடந்தது.பேரணிக்கு பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:


மத்திய அரசு இலங்கை தமிழர்களின் முழு வாழ்வாதாரத்துக்கு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அங்கு தேர்தல் நடக்க உள்ளதால் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அது பிப்ரவரி மாதம் துவங்கப்படும். அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து துவங்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.


வரும் 2010 ஆகஸ்டு 31ம் தேதிக்குள் இலங்கை முகாமில் உள்ள தமிழர்கள் அவர்களின் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்படுவார்கள். அதன் பிறகு அங்குள்ள முகாம்கள் மூடப்படும்.இலங்கை தமிழர் பகுதிகளில் விவசாயத்தை பெருக்க விதை, மருந்து, விவசாய கருவிகள் வழங்கப்படும். யாழ்ப்பாணம் மாணவர்கள் கல்வி திட்டங்களை மேம்படுத்த கோரிக்கை விடுத்தனர்.


இதற்காக இந்திராகாந்தி பல்கலைக்கழகம் நிறுவ திட்டம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது காங்கிரஸ் மனித உரிமையியல் துறை மாவட்ட செயலாளர் தேவேந்திரன், துணை தலைவர் சின்னதுரை, நகர செயலாளர் புரு�ஷாத்தமன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...
கள்ள நோட்டுகளுடன் இந்தியர் கைது


நேபாளத் தலைநகர் காத்மாண்டில் நேபாள,​​ இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாக ஜகாங்கீர் ஷேக் கைது செய்யப்பட்டார்.​ இவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.​ அவரிடமிருந்து 2,92,000 மதிப்புள்ள நேபாள ரூபாய் நோட்டுகளும் 5,000 மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.​ ​​ ஜகாங்கீர் யார் வெறும் கள்ள நோட்டு வியாபாரியா அல்லது பயங்கரவாதிகளின் ஏஜெண்டா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.​ அவருடைய சந்தேகத்துக்குரிய நடமாட்டம் குறித்து மக்கள்தான் போலீஸýக்குத் தகவல் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு சீனா ரூ.1800 கோடி உதவி!



​ இலங்கைக்கு சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி அளிக்க சீனா முன்வந்துள்ளது.​ ​ இலங்கையில் 30 ஆண்டுகால போரினால் சீர்குலைந்துள்ள உள்கட்டமைப்பை மீண்டும் சீரமைத்தல் மற்றும் அந்நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்த நிதியுதவியை அளிக்க சீனா முன்வந்துள்ளது.​ சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கை கருவூலத்துறை அமைச்சர் ஜெயசுந்தரேவிடம் இந்த நிதி உதவி குறித்து சீனா உறுதி அளித்துள்ளது.​ இதுதொடர்பாக இலங்கைக்கும்,​​ சீனாவுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.​ சீனா சென்றுள்ள ஜெயசுந்தரே,​​ சீனாவின் வர்த்தக இணை அமைச்சர் சென் ஜியானை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.​


அப்போது, ​​ இலங்கையில் சீனாவின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்கினார்.​ தவிர, ​​ இலங்கையில் இன்னும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள்,​​ அதற்கு சீனாவிடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் உதவி ஆகியவை குறித்தும் ஜெயசுந்தரே எடுத்துக்கூறினார்.இதையடுத்து அந்நாட்டுக்கு மேலும் உதவிகளை செய்ய சீனா தயாராகவுள்ளதாக சென் ஜியான் உறுதியளித்துள்ளார்.​ இருவரின் சந்திப்புக்கு பின்னர் சீன அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ​ இந்த சந்திப்பின்போது மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு,​​ நாட்டின் உள்கட்டமைப்பை விரைந்து மேம்படுத்துவதற்கும்,​​ மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டுவருவதாக ஜெயசுந்தரே கூறியதாகவும் அந்நாட்டு அரசு தரப்பு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Friday, December 25, 2009

சுனாமி இலங்கையை தாக்கி இன்றுடன் ஐந்தாண்டு பூர்த்தி













சுனாமி
பேரலை இலங்கையைத் தாக்கி இன்றோடு ஐந்தாண்டுகள்நிறைவடைகின்றன.

இந்தப் பேரலைகள் இலங்கை யின் 11 கரையோர மாவட்டங்களில் வாழ்ந்த சுமார் 39 ஆயிரம் பேர்க ளின் உயிர்களைக் காவு கொண்ட துடன்இ கோடிக் கணக்கான ரூபாய் பெறும தியான சொத்துக்களையும் அழித்தன.

இந்தப் பேரழிவை வருடா வருடம் நினைவு கூரும் வகையில் இத்தினத்தை தேசியப் பாதுகாப்பு தினமாக அரசாங்கம் பிரகடனப் படுத்தியுள்ளது.

அந்த வகையில் இவ்வருட தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் குருநாகல் நகரில் பிரதமர்

ரத்னசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் நடைபெறுகின்றது. இதேவேளை சுனாமி அனர்த்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் உட்பட சுனாமி பேரலை அனர்த்தத்திற்கு முகம் கொடுத்த சகல மாவட்டங்களிலும் இன்று மத வழிபாடுகளும்இ ஆராதனைகளும் விசேட துஆ பிரார்த்தனைகளும் நடை பெறுகின்றன. அன்னதானங்களும் வழங் கப்பட ஏற்பாடாகியுள்ளன.

இதேநேரம் சுனாமி பேரலை அனர்த்தம் உட்பட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 9.25 மணி முதல் காலை 9.27 வரையும் மெளனமாக இருக்குமாறு அரசாங்கம் நாட்டு மக்களைக் கேட்டுள்ளது
முல்லைத்தீவில் மீள்குடியேறிய மாணவர்களுக்கு சைக்கிள்கள் கையளிப்பு














முல்லைத்தீவு
கரச்சி மற்றும் மல்லாவி பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி மாணவர்களுக்கு 150 சைக்கிள்களையும்இ முல்லைத்தீவு வலய கல்வி அலுவலக அலுவலர்களுக்கு 5 மோட்டார் சைக்கிள்களையும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி வழங்கினார்.

முல்லைத்தீவு கரச்சி பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது மாணவ மாணவிகளுக்கு 75 சைக்கிள்களையும் மூன்று மோட்டார் சைக்கிள்களையும் வழங்கினார். முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மற்றுமொரு நிகழ்வின்போது அங்குள்ள மாணவஇ மாணவிகளுக்கு 75 சைக்கிள்களையும்இ 2 மோட்டார் சைக்கிள்களையும் ஆளுநர் வழங்கினார்.

“புதியபாதை சுந்தரம்” 28வது நினைவு தினம்


புதியபாதை
ஆசிரியர்
சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்)
யாழ்-சுழிபுரம்


புதியபாதை ஆசிரியரும் விடுதலையின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது பத்திரிகையாளருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி அவர்களின் 28வது நினைவு தினம் எதிர்வரும் ஜனவரி 2ம் திகதியாகும் இதனை முன்னிட்டு, ஜனவரி 16ம் திகதி கனடா ரொறன்ரோ நகரில் தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக “ஊடகங்;களின் தவறான செய்திகள், ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளது” என்ற கருப்பொருளில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


“புதியபாதை சுந்தரம் 28வது நினைவு தினம்”
இடம்: 2401 டெனிசன் வீதி, மார்க்கம், ஒன்ராறியோ, கனடா
காலம்: ஜனவரி 16ம் திகதி சனிக்கிழமை 2010ஆண்டு
நேரம்: மாலை 4:00 மணி

ஊடகத்துறையை காப்போம்! உண்மையை
எடுத்து கூறுவோம்!

-புதியபாதை ஏற்பாட்டுகுழு

மேலதிக தொடர்புகட்கு: 416-613 2771


ஈழத் தமிழ் பெண்மையை இழிவு படுத்தும் தமிழ் வாணிக்கு மனநலம் பாதிப்பா ?


ஈழத் தமிழ் பெண்மையை இழிவு படுத்தும் தமிழ் வாணிக்கு மனநலம் பதிப்பா பிரித்தானியாவில் தனது சகோதருடன் வாழ்த்து வந்த தமிழ் வாணிபிரித்தானியாவில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் மனநலம் பேணுவதற்காகசிறிலங்காவின் வன்னிக்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குசென்றதாகவும் பிரித்தானிய குடியுரிமைகொண்ட, தமிழ்வாணி ஞானகுமார் பி.பி.சி. தமிழோசைக்கு தெரிவித்து இறுத்தார் [பிரித்தானியாவில் மனம் சரிஇல்லை என்பதற்காக வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குசென்ற முதல் பெண் இவர்தான்]


சிறிலங்கா அரசு மேற்கொண்ட பாரிய இறுதியுத்தத்தில் சிக்கி, வன்னிமக்களுடன் இடம்பெயர்ந்த வேளை, இடைத்தங்கல்முகாம்களில் தடுத்துவைக்கப்ப்பட்டிருந்தார். பிரித்தானிய அரசின் கடும்அழுத்தத்திற்கு
மத்தியில் கடந்த செப். மாதம் 8 ஆம் திகதி, அங்கிருந்துவிடுவிக்கப்பட்டு,பிரித்தானியா செல்ல அனுமதிக்கட்டார்.சிறிலங்காவின்இறுதி யுத்த நடவடிக்கைகளின் போது மக்களோடு மக்களாக இருந்தஅவரின்
அனுபவங்களை கண்டிறியவும், இடைத்தங்கல் முகாம்களின் உண்மையானநிலைமை பற்றிதெளிவுறவும் தமிழ் மக்கள் சார்பில் தற்போதுள்ள ஒரே ஒருஆதாரபூர்வமானநபரகாக இவர் இருப்பதால் அவரை பல இணைய தளங்கள் முண்டியடித்து அவரதுசெவ்வியை வெளியிட்டன இவரது செவ்வி ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாகவேஇருந்தது புலிகளின் கட்டுப் பாட்டு பகுதியில் தான் இருத்த வேலை இவர்புலிகளை அங்கு காணவில்லை என்றும்


புலிகள் தன்னை வந்து சந்திக்க வில்லைஎன்றும் புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுததவில்லை என்றும்பிரித்தானியா காடியன் ஆங்கிலப் பத்திரிகைக்கும் பி பி சி தமிழோசைக்கும்முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணி நேர்காணல் ஒன்றை வழங்கிஇருந்தார் உலகமே அறிந்த உண்மையை உலகுக்கு மறைத்த[ இப்படி முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கிறாயே இது நியாயமா? ...]இவர் அன்று

வெளியிடாத ஒரு அப்பட்டமான பொய்யை இன்று [ தடுப்புமுகாமில் பெண்கள்பணத்துக்காகவும் உணவுக்காகவும் படையினரால்உடலுறவுக்குள்ளாக்கப்படுகிறார்கள்: தமிழ்வாணி }வேடிக்கையான ஒரு விஷயம்இன்று கவனத்துக்கு வருகிறது. தமிழ் பெண்மையை இழிவு படுத்தமுனைந்திருப்பது எதனால்? இன்று தமிழ் மக்கள் முகாங்களைவிட்டு வெளியில் வந்து நடமாடுவதை சகிக்க முடியாமல் விடுதலைப்புலிகளின்ஆதரவு இணைய தளங்களில் தமிழ் பெண்களை இழிவு படுத்துவதன் நோக்கம் என்ன ?இவரின் இந்த செயல் ஒட்டு மொத்த போராட்டத்தையும் இழிவு படுத்து செயல்என்பதை ஏன் புலிகளின் இனைய தளங்களாக இருந்தாலும் சரிv புலிகளைஎதிர்க்கும் அமைப்புக்களாக இருந்தாலும் இதைக் கண்டிக்க வில்லை தமிழீழவிடுதலைக்கான போராட்டம்,

மண் விடுதலைக்கானe போராட்டம் மட்டும்தான்! என்றுஎம்மில் பலர் இன்னமும் எண்ணியும் எழுதியும் வருகின்றார்கள். தமிழீழவிடுதலைப் போராட்டம் என்பது, தமிழ் மண்ணை மட்டும் மீட்பதற்கான போராட்டம்அன்று! பெண்ணிய அடிமைத்தனம், சாதி ஒடுக்குமுறை, வர்க்க பேதம் போன்ற பலசமூகக் குறைபாடுகளைக் களைவதற்கான போராட்டங்களையும், தமிழ் மொழி மீட்பு,மண்மீட்பு, நெறி மீட்பு, போன்றவற்றிற்கான போராட்டங்களையும், ஒருங்கு
சேர,அமைந்த போரரட்டத்தை போராட்டத்தின் வயது எல்லைக்குள் [௨௫] பிறந்த ஒருபிரித்தானிய குடியுரிமை பெற்று வாழும் இவர் எப்படி எங்கள் ஈழத்துபெண்மையை இழிவு படுத்த முடியும் இவர் இவரின் விடுதலைக்காக அன்று இவரின்பெண்மையை அடவு வைத்து விடுதலை அடத்தாரா ? அல்லது எமது மக்கள் நிம்மதியாகவாழ்ந்தால் புலிகளின் போராட்டம் மழுங்கடிக்கப்படும் என்ற புலிகளின்m கபடநாடகமா ?ஒரு நாட்டு மண்ணின் விடுதலைக்காக-

மொழியின் விடுதலைக்காக -இனத்தின் விடுதலைக்காக - பிற வெளிச் சக்திகளால் மழுங்கடிக்கப்பட்டுள்ளதமிழ்ப்பண்பாட்டின் விடுதலைக்காக - வெளிச் சக்திகளுடன் போராடி வருகின்றஅதே வேளையில், தனது சொந்த இனத்திலேயே புரையோடிப் போயிருக்கும். சமுதாயக்கொடுமைகளையும் களைந்து எறிய புறப்பட்ட எங்கள் ஈழத்தின் கண்மணிகளை இழிவுபடுத்த நினைத்த ஈனப் பிறவியே நீயும் ஒரு பெண்தானே ?தெரிந்தோ, தெரியாமலோ,பெண்ணினமும் துணை போயிருக்கின்றது என்பதுதான் வேதனையான உண்மை! ஒரு சிலவிசமிகள் தாங்கள் பிரபல்யம் ஆக வேண்டும் தமது இணைய தளங்கள் பிரபல்யம் ஆகவேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே செயல்படுகின்றன இது கண்டிக்கப்படவேண்டும் பெண்களின் உரிமை பேசும் அமைப்புக்களின் மவுனம் தமிழ்வாணிஞானகுமாரின் கருத்துக்கு உடன்பாடா ?தயவு செய்து எமது பெண்களை இழிவுபடுத்தாமல் எமது மக்களுக்கு இனி வரும் காலங்களில்


என்ன நன்மை செய்யாலாம் என்பதை கருத்தில் எடுக்குமாறு சிரம் தாழ்த்தி
கேட்ட்கிறேன் இனி வரும் காலங்களில் காணப்பட வேண்டிய மாற்றங்களையும் ...
எமது மக்களின் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்டுங்கள் பின் குறிப்பு;தமிழ் வாணிக்கு ஒரு சகோதரர் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது தயவுசெய்து அவருக்கு பணிவுடன் ஒரு அன்பான வேண்டுகோள் உங்கள் தங்கையை ஒரு நல்லமனநல மருத்துவரிடம் காண்பிக்கவும் இவர் போன்ற சிறு பில்லைத்தனமானசெயல்தான் இன்றைய தமிழ் மக்களின் அவலம் என்பதையும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்த இடம் கொடுக்காமல் நல்லமருத்துவரிடம் காண்பிக்கவும் வயிற்றுப்பிழைப்புக்காக ஊடகம் நடத்தலாம்,தியாகங்களைக் கொச்சைப்படுத்த முயல்வது துரோகமாகும்.


இது தமிழ் இணையதளத்தின் கருத்தல்ல : அழகியா ஜெயகுமாரின்கருத்து


நன்றி தமிழ்
மேலும் இங்கே தொடர்க...

25 டிசம்பர், 2009

25.12.2009.

முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே-


பேரியல் அஸ்ரப்- முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே கிடைக்கும் அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோமென அமைச்சர்கள் பௌஸி, பேரியல் அஷ்ரப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சிறுசிறு கட்சிகள் மற்றும் சுயாதீனமான வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது பெறுமதியான வாக்குகளை குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்கு விரும்பமாட்டார்கள் எனவும் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார். இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக வாக்குகளில் பாதிப்புகள் ஏற்படுமா என வினவியபோதே அமைச்சர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அஸாத் சாலியும் எம்மோடு இணைந்துள்ளார். எவ்வித சந்தேகமுமின்றி 70வீத வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவது உறுதியெனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தவர்களிடமிருந்து ஏராளமான விண்ணப்பங்கள்

- எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தவர்களிடமிருந்து ஏராளமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் விண்ணப்பங்கள் வந்தவண்ணமிருப்பதாக தேர்தல்கள் செயலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் கடந்த 23ம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இதேவேளை இடம்பெயர்ந்தவர்கள் தமது வாக்குகளை செலுத்துவதற்காக வாக்குச் சாவடிகளை ஸ்தாபிப்பது தொடர்பாக ஆராய தேர்தல்கள் செயலக அதிகாரிகள் சிலர் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள பிரதேசங்களுக்கு செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஆண்டுமுதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா இரண்டு மேம்பாலங்களை அமைக்க நடவடிக்கை-

எதிர்வரும் ஆண்டுமுதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா இரண்டு மேம்பாலங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தியமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெருக்கடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மேம்பாலங்களை அமைக்கும் திட்டத்துடன் சேர்த்து மேலும் 200 இரும்புப் பாலங்களையும் அமைக்க நடவடிக்கை எடுகக்ப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு பாலத்திற்கும் 800 லட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளது. இந்தப் பாலங்களை அமைப்பதற்காக நெதர்லாந்து மற்றும் கொரியா ஆகிய நாடுகள் உதவிகளை வழங்க முன்வந்துள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அஞ்சல்மூல வாக்களிப்புக்கென அரச சேவையாளர்கள் 4லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் அனுப்பிவைப்பு-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அஞ்சல்மூல வாக்களிப்புக்கென அரச சேவையாளர்கள் 4லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவட்ட தேர்தல் செயலகத்தின் தகவல்களின்படி அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை தகுதிகாணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கிடையில் அதிகளவிலான விண்ணப்பங்கள் குருநாகல் மாவட்டத்திலிருந்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக குருநாகல் மாவட்ட தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டத்திலிருந்து 54ஆயிரத்து 935விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜனவரி 12ம் 13ம் திகதிகளில் அரச சேவையாளர்கள் அஞ்சல்மூல வாக்குளை அளிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய விமானம் ஈரானுக்கே ஆயுதங்களை எடுத்து வந்ததாக தகவல்-


வடகொரியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்ட விமானத்திலிருந்து தாய்லாந்தில் கைது செய்யப்பட்டவர்கள் மேலும் 12நாட்களுக்கு தடுத்து வைக்கப்படவுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டே இந்தத் தடுத்து வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து பொலீசார் தெரிவித்துள்ளனர். ஆயுதங்களை ஏற்றிவந்த இந்த விமானம் தாய்லாந்தில் கைப்பற்றப்பட்டபோது அதிலுள்ள ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து அந்த விமானம் ஈரானுக்கான ஆயுதங்களையே வடகொரியாவிலிருந்து எடுத்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகளுக்கு உதவிய சிங்கப்பூர் வர்த்தகர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்-

புலிகள் இயக்கத்திற்கு சொத்து ரீதியாகவும், ஆயுதக் கடத்தலிலும் ஒத்துழைப்பு வழங்கியதாக கைதுசெய்யப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகரொருவர் அங்கிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். 49 வயதான பால்தேவ் நாயுடு என்கிற அவர் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு கடத்தப்பட்டுள்ள அவர் அமெரிக்காவில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரென்றும் தெரியவருகின்றது. புலிகளுக்கு நிதியிடல் உள்ளிட்ட சொத்து ரீதியான ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்டமை தொடர்பில் அவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார். பால்தேவ் நாயுடு சிங்கப்பூர் ரிபோம் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
மலையகப் பெருந்தோட்டங்களில்
முகவர் தபால் நிலையங்கள்
உப தபாலகங்களாக மாற்றம்

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் முகவர் தபால்; நிலையங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களை அரசாங்கத்தின் உப தபாலகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய, இது தொடர்பில் விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகத் தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம்.எஸ். செல்லச்சாமி தெரிவித்தார்.

மலையகத் தோட்டங்களில் முகவர் தபால் நிலையங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 126 கட்டடங்கள் பல வருடங்களாகத் திறக்கப்படாமல் உள்ளன. எனவே, இவற்றை உப தபாலகங்களாக மாற்றியமைத்துத் திறந்து வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாகப் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே மலையகத் தோட்டப்புறங்களில் 150 வருடகாலத்திற்குப் பின்னர் நேரடித் தபால் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய பிரதி அமைச்சர் செல்லச்சாமி, தபால் துறையில் புதிய பரிமாணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் மேலும் 100 தபால் ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.
தகவல் ஈழமைந்தன்


இரு தசாப்தங்களின்பின் மீண்டும் இயங்கும்
கிளிநொச்சி மாவட்டச் செயலகம்


கிளிநொச்சி மாவட்டச் செயலகம் (கச்சேரி) கடந்த இரண்டு தசாப்த காலத்திற்குப் பின்னர் முழுமையாக அரசாங்க சிவில் நிர்வாகத்தின் கீழ் தொழிற்படத் தொடங்கியுள்ளது.

யுத்தத்தின்போது சிதைவடைந்த கிளிநொச்சி மாவட்டச் செயலகம் புனரமைக்கப்பட்டு கடந்த புதன்கிழமை முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி அரச அதிபர் உட்பட கச்சேரியில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் இதுவரை வவுனியாவிலிருந்தே கடமைக்குச் சென்றுவந்தனர். தற்போது 50 உத்தியோகத்தர்களுடன் மாவட்டச் செயலகம் இயங்குவதாக அரச அதிபர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் கீழ் ப+நகரி, கரைச்சி, பச்சிளைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலகங்கள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் அந்தப் பகுதிகளில் சிவில் நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தகவல் ஈழமைந்தன்

வடக்கில் கைவிடப்பட்ட ஒரு இலட்சத்து 83 ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கைக்கு நடவடிக்கை

வட பகுதியில் கைவிடப்பட்ட 1,83,074 ஏக்கர் காணியில் மீண்டும் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 64,894 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு வருவதோடு 2009ஃ2010 பெரும்போகத்தின்போது 18,689 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட உள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்ரசிறி தெரிவித்தார்.

பெரும்போகத்தில் நெல் பயிரிடுவதற்காக ஏற்கெனவே 39 ஆயிரம் புசல் விதை நெல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர விவசாயம் செய்வதற்குத் தேவையான பசளை, நிவாரண விலையில் வழங்கப்பட்டுள்ளதாகவம் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு மீண்டும் வழமைபோல விவசாயம் செய்வதற்காக டிரக்டர்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 550 நீர் இறைக்கும் இயந்திரங்கள், 105 டிரக்டர்கள், 210 சைக்கிள்கள், 30 மோட்டார் சைக்கிள்கள், 08 சிறியரக டிரக்டர்கள் என்பனவும் 260 கனரக இயந்திரங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்பொழுது யாழ் மாவட்டத்தில் 24,028 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 23,480 எக்கரிலும் மன்னார் மாவட்டத்தில் 17,389 ஏக்கரிலும் பயிரிடப்பட்டு வருகிறது. மோதல் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தவு மாவட்டங்களில் நெற்செய்கை முழுமையாகச் சேதமடைந்தது.

எதிர்வரும் தினங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கைவிடப்பட்ட 41,340 ஏக்கர் வலயத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 63,262 ஏக்கரிலும் நெல் பயிரிடப்பட உள்ளது. இதுதவிர யாழ் மாவட்டத்தில் 8,727 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 29,422 ஏக்கரிலும் புதிதாக பயிரிட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

பெரும்போகத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,100 ஏக்கரிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 750 ஏக்கரிலும் பயிரிட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல யாழ் மாவட்டத்தில் 2,669 ஏக்கரிலும் மன்னார் மாவட்டத்தில் 7,610 ஏக்கரிலும் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சொந்த இடங்களில் குடியேற்றப்படும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்து.
தகவல் ஈழமைந்தன்

மேலும் இங்கே தொடர்க...

விண்ணுலகில் நின்று தேவன் இறங்கி வருகிறார்

http://d.mobilehomepages.de/c/d/B0DF13/857869/ssc5/home/091/marijean.mobilehomepages.de/albums/jesuskind.gif


விண்ணுலகில் நின்று தேவன் இறங்கி வருகிறார்நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறான் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் புதிய பாதை இனைய குழுவினரின் எல்லோரும் எல்லா வளமும் பெற்று தன்னை போல் பிறரையும் நேசித்து தாய் தந்தை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து எமக்காக இன்னொர்வர் விட்டு தரவேண்டும் என்று எண்ணாமல் அவருக்காக நாம் விட்டு கொடுத்து வாழவேண்டி எமது நத்தார் வாழ்த்துகள்
புதியபாதை
மேலும் இங்கே தொடர்க...