27 டிசம்பர், 2009



நாளாந்த
பிரச்சினையின் முடிவுக்கும் அரசியல் தீர்வுக்கும் வழிவகுக்கும் தீர்மானமே இன்றைய தேவை



அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் பிராந்திய சபைகளை உருவாக்குவதாலேயே அதை எதிர்த்ததாக ரணில் விக்கிரமசிங்ஹ ஒரு பத்திரிகைப் பேட்டியில் பின்னர் கூறினார். அந்தத் தீர்வுத் திட்டத்தை எதிர்ப்பதற்குப் பேரினவாதிகள் கூறிய காரணமும் இது தான். இந்த விடயத்தில் ரணிலும் பேரினவாதிகளும் ஒன்றாகச் சங்கமித்தார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. முடிவொன்றை எடுப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டம் எந்த முடிவும் எடுக்காமலே கலைந்தது. கூட்டமைப்பைத் தவிர மற்றைய எல்லா அரசியல் கட்சிகளும் தத்தமது நிலைப்பாட்டுக்கு அமைவான முடிவுக்கு வந்து விட்டன. பெரும்பாலான மக்களும் முடிவுக்கு வந்து விட்டார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களால் இன்னும் ஒரு முடிவுக்கு வர இயலாதிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றித் தீர்மானிப்பதில் எவ்வித சிரமும் இருக்க வேண்டியதில்லை. தமிழ் மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அவர்கள் இன்று நாளாந்த வாழ்வில் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் உதவுவதாக இருக்க வேண்டும்.

புலிகள் ஆயுத பலத்துடன் இருந்த காலத்தில் பெரும்பாலான தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியவில்லை. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைப் புலிகளே தீர்மானித்தார்கள். தேர்தல் பகிஷ்கரிப்பையும் அவர்களே தீர்மானித்தார்கள். தீர்மானிக்கும் சுதந்திரம் மக்களுக்கு இருக்கவில்லை. இப்போது மக்கள் சுதந்திரமாகத் தீர்மானிக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் சுதந்திரமாகத் தீர்மானிக்கலாம். யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் தமிழ் மக்ளுக்குக் கிடைத்த பல சுதந்திரங்களுள் வாக்களிப்புச் சுதந்திரமும் ஒன்று.

நீண்ட காலத்துக்குப் பின் கிடைத்த சுதந்திரத்தைச் சரியான முறையில் தமிழ் மக்கள் பிரயோகிக்க வேண்டும். அளிக்கும் வாக்கு பிரயோசனமானதாக இருக்க வேண்டியது அவசியம். கட்டுப்பணத்தையே காப்பாற்ற முடியாத வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்குகள் கிணற்றில் போட்டதற்குச் சமன். அந்த வாக்குகளால் தமிழ் மக்களுக்குத் துளியளவு கூடப் பலனில்லை. பிரதான வேட்பாளர்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள தெரிவு.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சரத் பொன்சேகாவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவும் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்புக் கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றன. நீண்ட காலமாகத் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் இடதுசாரிக் கட்சிகளும் இந்த அணியில் உள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சிக் காலத்தில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது. இனப் பிரச்சினையின் தீர்வுக்கான ஆலோசனைகளைத் தயாரிப்பதற்கான இக் குழு அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கின்றது. இந்த அறிக்கையில் அடங்கியுள்ள ஆலோசனைகள் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்டனவாக உள்ளன. இதே நேரம், பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி இலங்கை மக்களுக்கு மாத்திரமன்றி இந்தியாவுக்கும் உறுதியளித்திருக்கின்றார்.

இவற்றை ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தெரிவு இனப் பிரச்சினையின் தீர்வுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக பொன்சேகா போட்டியிடுகின்றார். இந்தக் கட்சியின் பெயரும் சின்னமும் இப்போது தான் மக்களுக்குத் தெரிய வருகின்றன. நாட்டின் எந்தப் பகுதியிலாவது இக் கட்சிக்கு அலுவலகம் இருப்பதாகத் தெரியவில்லை. இனப் பிரச்சினையைப் பற்றியும் அதன் தீர்வைப் பற்றியும் இந்தக் கட்சி எப்போதேனும் அறிக்கையாவது வெளியிட்டதாக இல்லை. எனவே இனப்பிரச்சினையின் தீர்வுக்கும் பொன்சேகாவின் கட்சிக்குமிடையே வெகு தூரம்.

ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் பொன்சேகாவை ஆதரிக்கும் பிரதான கட்சிகள். எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிழலாகச் செயற்படும் ஜனநாயக மக்கள் முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸஞிம் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் மற்றைய கட்சிகள். இவ்விரு கட்சிகளும் சில வாரங்களுக்கு முன் பொன்சேகாவை இனவாதி என்று முத்திரை குத்தியவை. இப்போது பொன்சேகாவைத் தலையில் தூக்கி வைத்துப் போற்றுகின்றார்கள். இதற்குப் பெயர் தான் சந்தர்ப்பவாதம். இந்தச் சந்தர்ப்பவாதத்துக்குத் தமிழ் பேசும் மக்களைப் பகடைக் காய்களாக்குவது வேதனை தருகின்றது. சில வாரங்களுக்கு முன் இவர்களுக்கு இனவாதியாகத் தோன்றியவர் இப்போது தமிழ் மக்களின் நண்பனாக இவர்களால் சித்தரிக்கப்படுவது வியப்பை அளிக்கின்றது.

பொன்சேகாவின் பிரதான ஆதரவாளர்களான ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் எந்தக் காலத்திலும் தமிழ் பேசும் மக்களின் நலனில் அக்கறை செலுத்திய கட்சிகளல்ல. மக்கள் விடுதலை முன்னணி சிங்களப் பேரினவாதத்தின் இன்னொரு முகம். பச்சை பச்சையாக இனவாதம் பேசுபவர்கள் ஒரு முகம். மக்கள் விடுதலை முன்னணியினர் இடதுசாரி வேஷம் போட்டு இனவாதம் பேசும் முகம். பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதற்கே இவர்கள் எதிரானவர்கள். அத் தீர்வுக்கு மேலான தீர்வுக்குப் பொன்சேகாவுடன் ஒத்துழைப்பார்களா?

சிறுபான்மையினரின் நண்பன் போல வேஷம் போட்டுக் கொண்டு கருவறுக்கும் கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி. தமிழ் மக்களின் நலனுக்கு முரணாகச் செயற்படும் வரலாற்றை இக் கட்சி கொண்டிருக்கின்றது.

பண்டா - செல்வா ஒப்பந்தம் நடைமுறைக்கு வர விடாமல் தடுத்ததில் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பிரதான பங்கு உண்டு. அந்த ஒப்பந்தம் கைவிடப்படும் நிலையை உருவாக்கிய சூத்திரதாரி ஐக்கிய தேசியக் கட்சியே.

மாவட்ட சபை தருவதாக 1965 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது ஐக்கிய தேசியக் கட்சி. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் மாவட்ட சபையைக் கொடுக்கவில்லை. அரசாங்கத்தின் இறுதிக் காலத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர்களை அழைத்து, மாவட்ட சபை தருவது சாத்தியமில்லை என்று டட்லி சேனநாயக கூறினார்.

பொது சன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது. அத் தீர்வுத் திட்டம் தமிழ் பேசும் மக்களுக்குக் கூடுதலான அதிகாரங்களை வழங்குவதால் பகிரங்கமாக எதிர்க்க அக் கட்சி விரும்பவில்லை. தமிழ் மக்களின் நண்பனாகக் காட்டிக் கொண்டு தமிழ் மக்களின் நலன்களுக்குத் தடையாகச் செயற்படுவது ஐக்கிய தேசியக் கட்சியின் வழமையான பாணி. அதற்கமைய அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்கு எதிராக எங்கும் பேசவில்லை. பாராளுமன்றத்திலும் பேசவில்லை. ஆனால் பாராளுமன்றத்தில் குப்பாடித்தனமாக நடந்து அத் தீர்வுத் திட்டம் வாக்கெடுப்புக்கு வருவதைத் தடுத்தார்கள்.

அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் பிராந்திய சபைகளை உருவாக்குவதாலேயே அதை எதிர்த்ததாக ரணில் விக்கிரமசிங்ஹ ஒரு பத்திரிகைப் பேட்டியில் பின்னர் கூறினார். அந்தத் தீர்வுத் திட்டத்தை எதிர்ப்பதற்குப் பேரினவாதிகள் கூறிய காரணமும் இது தான். இந்த விடயத்தில் ரணிலும் பேரினவாதிகளும் ஒன்றாகச் சங்கமித்தார்கள். தமிழ் மக்களுக்குக் கூடுதலான அதிகாரங்களை வழங்கக் கூடாதென்பது இவ்விரு சாராரினதும் நிலைப்பாடு.

ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் இன்று வரை இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தது கிடையாது. அதற்காக முயற்சித்ததும் கிடையாது. அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்தவொரு வெளிநாட்டினதும் நிர்ப்பந்தம் இல்லாமல் தீர்வுகளை முன்வைத்திருக்கின்றது.

பிரதான வேட்பாளர்கள் இருவரில் இனப் பிரச்சினைக்கான தீர்வு நடைமுறையை ஆக்கபூர்வமாக முன்னெடுத்துச் செல்லக் கூடியவர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் கூட்டமைப்புக்குத் தடுமாற்றம் இருக்குமேயானால் இவர்கள் யதார்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

சரத் பொன்சேகாவின் கட்சிக்கு (அன் னக் கட்சி) இனப் பிரச்சினை பற்றிய சிந்தனை இல்லை. அவரை ஆதரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடு தலை முன்னணியும் அரசியல் தீர்வுக்குத் தடையாகச் செயற்பட்ட வரலாற்றைக் கொண்டவை. பதின்மூன்றாவது திருத்தமே வேண்டாம் என்கிறது மக்கள் விடுதலை முன்னணி. இந்த நிலையில் பதின் மூன்றாவது திருத்தத்திலும் கூடுதலான தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாகப் பொன்சேகா கூறுவதைப் போன்ற வேடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்த வகையில் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கின்றார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை இந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றது. இந்தியாவுக்கு அவர் அளித்திருக்கும் வாக்குறுதி இந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றது. சொல்பவற்றைச் செய்து காட்டிய வரலாறு இந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றது.

இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் தாமதிக்காமல் சரியான முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவு பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய ஒரு தீர்வை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கும் அதை அடிப்படையாகக் கொண்டு படிப்படியாக முழுமையான தீர்வை அடைவதற்கும் வழிவகுப்பதாக அமைய வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவு.

முழுமையான அரசியல் தீர்வை ஒரே நேரத்தில் அடைய வேண்டும் என்ற நிலைப்பாடு யதார்த்தபூர்வமானதல்ல. சாத்தியமானதுமல்ல. ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ்த் தலைமை விட்ட தவறுகளின் விளைவாக இந்த நிலை உருவாகியிருக்கின்றது. முழுமையான தீர்வு இல்லாமல் வேறு எதையும் ஏற்பதில்லை என்று தமிழ்த் தலைவர்கள் பிடிவாதம் பிடிப்பார்களேயானால் தீர்வு தள்ளிப் போவது மாத்திரமன்றித் தமிழ் மக்கள் முகங் கொடுக்கும் நாளாந்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலை உருவாகுவதையும் தவிர்க்க முடியாது.

யுத்தம் நடத்திய அரசாங்கம் என்று குற்றச்சாட்டுச் சுமத்துவது அர்த்தமற்றது. முப்பது வருட காலத்தில் வெவ்வேறு அரசாங்கங்கள் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியிருக்கின்றன. ஒவ்வொரு அரசாங்கமும் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் புலிகளால் குழப்பப்பட்ட நிலையிலேயே யுத்தம் அவசியமாகியது. இன்றைய அரசாங்கத்தின் சமாதான முயற்சியையும் புலிகள் சீர்குலைத்தனர். பேச்சுவார்த்தையில் பங்குபற்றப் புலிகள் மறுத்தனர். அப்போதும் அரசாங்கம் யுத்தத்தை நாடவில்லை. பேச்சுவார்த்தைக்கு முயற்சித்தது. ஆனால் மாவிலாறுப் பிரச்சினையைத் தோற்றுவித்துப் புலிகளே யுத்தத்துக்கு வழிவகுத்தனர்.

இன்று யுத்தம் முடிந்துவிட்டது. புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை தமிழ் மக்களுக்கும் நன்மை பயப்பதாகவே உள்ளது. புலிகளின் கட்டுப்பாடுகளாலும் தான் தோன்றித்தனமான செயற்பாடுகளாலும் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் இப்போது நீங்கிவிட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்போது சுதந்திரமாகச் செயற்பட முடியும். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் சுதந்திரமாகத் தனது கருத்தை வெளியிடுவதாலேயே தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி இன்னும் அவர்களால் தீர்மானத்துக்கு வர இயலவில்லை. இது யுத்தத்தின் விளைவாக இவர்களுக்குக் கிடைத்த சுதந்திரம். புலிகளின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த காலத்தில் அவர்கள் கூறுவதையே இவர்கள் முடிவாக எடுக்க வேண்டியிருந்தது.

யுத்தத்தின் முடிவு தமிழ் மக்களுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. இந்த நிலை அரசியல் தீர்வுக்கும் சாதகமானது. தமிழ் மக்களும் தலைவர்களும் இச் சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்





வெற்று வாக்குறுதிகளால் தீர்வு சாத்தியமாகாது









ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இழுபறி நிலை நிலவுவது இன்று இரகசியமல்ல.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கா கத் தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோஷத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்தவர்கள் இன்று மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்பது இதுவரை காலமும் அவர்களுக்கிடையே கொள்கை உடன்பாடு இருக்கவில்லை என்பதையும் வெளிச் சக் தியொன்றின் அழுத்தம் காரணமாகவே ஒன்றாகச் செயற்பட்டார் கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றது.

எவ்வாறாயினும், கடந்த காலத்தைப் பற்றி இப்போது அசைபோட் டுக் கொண்டிருப்பதால் ஆகப் போவது எதுவுமில்லை. தமிழ் மக்களின் உடனடி மற்றும் நீண்ட கால நலன்களைப் பேணு வதற்கான வழிவகைகள் பற்றிய சிந்தனையே இன்றைய தேவை.

தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியின் இன்றைய நிலையையும் கவ னத்தில் எடுத்துப் பார்க்கும் போது தமிழ்த் தலைவர்கள் ஆறு தசா ப்தங்களை வீணாக்கிவிட்டார்கள் என்ற முடிவுக்கே வர வேண்டி யுள்ளது.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியைத் தவ றான தடங்களில் முன்னெடுத்ததன் விளைவே இந்த நிலை.

பிர ச்சினையின் தீர்வு எவ்வளவு காலத்துக்குப் பின்தள்ளப்படுகின் றதோ அவ்வளவுக்குத் தமிழ் மக்களின் துன்பங்கள் தொடர்வ தாக இருக்கும். எனவே பிரச்சினையின் தீர்வுக்கான வழிமு றையை நிதானமாகச் சிந்தித்துப் பின்பற்ற வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலைவர்கள் அனைவருக்கும் உண்டு.

சிங்களத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று தமிழ்த் தலைவர் கள் அடிக்கடி கூறுவது வழக்கம். செய்துகொண்ட உடன்படிக் கையை நிறைவேற்றவில்லை என்றும் வாக்குறுதிகளை மீறினார் கள் என்றும் தமிழ்த் தலைவர்கள் கூறுகின்றார்கள்.

உடன்படிக் கைகள் தோல்வியடைந்ததற்குத் தமிழ்த் தலைவர்களே பிரதான பொறுப்பாளிகள். வாக்குறுதிகள் விடயத்திலும் தமிழ்த் தலைவர் கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது.

யாராவது வாக்குறுதி அளிக்கும் போது அதை அப்படியே ஏற்றுக் கொள்வது சரியான தலைமைத்துவக் குணாம்சமாகாது. ஆதரவை பெறுவதற்காக எந்த வாக்குறுதியையும் அளிப்பார்கள்.

அது நடை முறைச் சாத்தியமானதா என்பது பற்றியும் வாக்குறுதி அளிப்பவ ருக்குப் பக்கபலமாக உள்ள அரசியல் சக்திகளின் நிலைப்பாடு பற்றியும் நிதானமாக ஆராய்ந்த பின்னரே அதை ஏற்பதா இல் லையா என்ற முடிவுக்கு வர வேண்டும். அவசரப்பட்டு வாக் குறுதியில் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட பின்னர் ஏமாற்றப் பட்டுவிட்டோம் எனக் கூறுவதில் அர்த்தமில்லை.

நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலிலும் வேட்பாளர்கள் தாராள மாக வாக்குறுதிகளை அளிக்கலாம். அந்த வாக்குறுதியை நடை முறைப்படுத்துவதற்கான வல்லமையும் சாதக சூழ்நிலையும் அவ ருக்கு உண்டா என்பது பற்றியே முதலில் சிந்திக்க வேண்டும்.

இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் இன்றைய நிலையில் பதின்மூன்றாவது திருத்தமே யதார்த்தபூர்வமானது.

பாரா ளுமன்றத் தேர்தலின் பின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கச் சற்றுக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப் படுத்துவதும் சாத்தியமாகலாம்.

இத்தகைய தீர்விலிருந்து படிப்படியாக முன் னேறிச் செல்வதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதில் தமிழ்த் தலைவர்களுக்குக் கூடுதலான பொறுப்பு உண்டு.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள அறி க்கை பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதி காரங்களைக் கொண்டதாக இருப்பதால் அதை நடைமுறைக்குக் கொண்டு வருவது தீர்வு முயற்சியில் சிறப்பான ஆரம்பமாக இருக்கும். இதற்கேற்ற வகையில் தமிழ்த் தலைவர்கள் செயற் படுவார்களென நம்புகின்றோம்.




வடக்கு முஸ்லிம்கள் மே மாதம் முழுமையாக மீள்குடியேற்றம்
புத்தளம் - மன்னார் வீதி ஜனவரியில் திறப்பு:
அமைச்சர் ரிஷாட்டுக்கு ஜனாதிபதி புகழாரம்




வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சகல முஸ்லிம்களும் மே மாதமளவில் சொந்த இடங்களில் முற்றாக மீள்குடியேற்றப்படுவ ரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்கு வசதியாக புத்தளத்தி லிருந்து மன்னார் செல்லும் பாதை அடுத்த மாதம் திறந்து வைக்கப்படுமெனவும் ஜனாதிபதி கூறினார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வடமாகாண மாநாடு நேற்று புத்தளம் ஆலங்குடாவில் நடைபெற்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் ஐம்பதினாயிரம் பேர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி:-

முஸ்லிம் மக்களை பணயக் கைதிகளாக வைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்களை நாம் முழுமையாகப் பொறுப்பேற்கிறோம்.

முஸ்லிம்கள் எனது சகோதரர்கள். என்னை முழுமையாக நம்புங்கள். முஸ்லிம்கள் தொடர்பாக என்மீது பல்வேறு அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் எதிர்க் கட்சிகளால் சுமத்தப்பட்டன. ஐந்து வேளைத் தொழுகையை நான் நிறுத்தி விடுவேனெனக் கூறினார்கள். இப்போது உண்மை நிலையை நீங்கள் புரிந்திருப்பீர்கள். அவ்வாறான பொய்களெல்லாம் எதிர்க் கட்சிகளினாலும் அதன் தலைவர்களினாலும் பரப்பப்பட்டவை. அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள்.

நான் கடந்த தேர்தலில் கூறியவைகளை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறேன். நீங்கள் கடந்த 19 வருடங்களாக இந்தப் பகுதிகளில் அகதிகளாக வாழ்கின்ஹர்கள். நீங்கள் பட்ட கஷ்டங்களை நான் நன்கறி வேன். அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் புலிகளோடு ஒப்ப ந்தம் செய்தார். அதன் பின்பு, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விருப்பத்துடன் தான் வெளி யேறினரென்று ஹக்கீமும் அவரது சகபாடி களும் கூறினர். அதன்பின்பு உங்களைப் பற்றி அவர்கள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. இப்படிப்பட்டவர்கள்தான் இப்போது உங்கள் மத்தியில் பேச வருகிறார்கள். இவர்களை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.

ப்படியானவர்கள்தான் இரு இனங்க ளையும் பிளவுபடுத்த முயன்றனர். அது பலிக்கவில்லை. முஸ்லிம்களின் நிம்மதியைக் கெடுத்து அகதிகளாக்கியவர்களை நீங்கள் ஒருபோதும் நம்பவேண்டாம்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட உங் களது கஷ்டங்களை நான் நன்கறிவேன். அதனால்தான் ஐக்கிய நாடுகள் வரை சென்று பேசினேன். அதேநேரம், மஹிந்த சிந்தனையிலும் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப் பிட்டிருக்கிறோம்.

ஆகவே, தேர்தல் காலங்களில் வந்து பொய் கூறுபவர்களை நம்பாதீர்கள். பொய்களுக்கு என்றுமே அடிபணிந்து விடாதீர்கள். என்றுமே நான் உங்கள் நண்பன். இந்த நட்பு என்றும் தொடரும். என்னை முழுமையாக நம்புங்கள் என்றார் ஜனாதிபதி.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கு முஸ்லிம் மக்களுக்காக அயராது பாடுபடும் ஒரு செயல்வீரன் ரிஷாட். அவரது பணிக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்.

எனது ஆலோசனையின் பேரில் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங் களிலிருந்த சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை மிக கண்ணியமாக நடாத்தி அம்மக்களின் தேவைகள் அனைத்தையும் பூரணமாக நிறைவேற்றிக் கொடுத்தவர் அமைச்சர் ரிஷாட்.

இதனால் எனக்கும் எனது அரசுக்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லபிப்பிராயம் ஏற்படுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார்.

அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் அவரது மக்களின் முன்னிலையிலேயே நன்றி தெரிவிக்கிறேன்.

மிக இளவயதில் அமைச்சராக உயர்ந்து இன்று வடமாகாண முஸ்லிம்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார். எனது அரசாங்கத்தில் இவர் அமைச்சராக இருப்பது ஒரு சிறப்பான விடயமாகும் என்றும் கூறினார்.

அமைச்சர்கள் அமீர் அலி, நஜீப் . மஜீத், மில்ரோய் பெர்னாண்டோ, எஸ். எம். சந்திரசேன, சம்பிக்க ரணவக்க பிரதியமைச்சர்களான கே..பாயிஸ், நிஜாமுதீன், மாகாண அமைச்சர் எம். எல்..எம். ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஆளுனர் அலவி, எஸ்.பி.திஸாநாயக்க, ஜனாதிபதி ஆலோசகர் அஸ்வர் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக