18 ஜூன், 2011

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களின் நாடு கடத்தலுக்கு பிரித்தானிய எம்.பி. க்கள் எதிர்ப்பு

இலங்கையில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு உயிர் பிழைக்க வந்தவர்களை பிரிட்டன் வெளியேற்ற துடிக்கிறது. இந்த வெளியேற்ற நடவடிக்கை மூலம் சித்திரவதை நடவடிக்கையில் பிரிட்டனும் தன்னை இணைத்துக் கொள்கிறது என அந்நாட்டின் தொழிற்கட்சி எம்.பி. சியோபயன் குற்றம் சாட்டினார்.

பிரிட்டனுக்கு அடைக்கலம் தேடி வந்த இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்புவதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என அவர் விமர்சித்தார்.

சனல் 4 நிகழ்ச்சியில் இலங்கையின் படுகொலை களங்கள் என்ற ஆவணப்படம் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்னர் எம்.பி சியொ பய்ன் இவ்வாறு பொதுச் சபையில் பிரிட்டன் அரச நிர்வாகத்தை கடுøமயாக விமர்சித்தார்.

தொழிலாளர் கட்சி எம்.பி. யான அவர் பொதுச் சபையில் உரையாற்றுகையில்: தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கை குறித்து பிரிட்டன் முகவராண்மை நிறுவனம் தனது ஆவணங்களை இலங்கை அரசுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுபவர்கள் இலக்கு வர்ண பூச்சுடன் பிரிட்டன் அனுப்புகிறது என்றார்.

பிரிட்டனில் தங்க அனுமதி மறுக்கப்பட்டு புகலிடம் தேடி வந்த 40 பேர் இலங்கைக்கு வியக்ஷிழக்கிழமை மாலை அனுப்பப்படுகின்றனர். அவர்கள் இலங்கையில் கைது செய்யப்படும் அச்சுறுத்தல் மட்டுமல்ல, அங்கு அவர்கள் நாடு திரும்பியதும் சித்திரவதையும் செய்யப்படுவார்கள் என பொதுச் சபையில் தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டனில் இருந்து வெளியேற வேண்டிய தமிழர்களில் ஒருவர் ஜெனா கோபிநாத் முன்னாள் தமிழ் அரசியல் தலைவர். இவர் ஏற்கனவே இலங்கை அரச நிர்வாகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் மிட்சம் அண்ட் மாடரன் எம்.பி. கூறினார்.

பிரிட்டனுக்கு புகலிடம் தேடி வந்த மற்றொரு நபர் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் அபாயத்தில் வியாழக்கிழமை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். புதன்கிழமை இரவு அவர் விமான நிலைய காவலில் வைக்கப்பட்டபோது அவர் இந்த துயர முடிவை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

பிரிட்டனில் இருந்து தமிழர்களை இலங்கைக்கு வெளியேற்றும் நடவடிக்கையை சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுவதையும் அந்த அமைப்பு அவதானித்துள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதுடன் நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகளும் நடக்கின்றன என்று எம்.பி. க்களிடம் மெக்டோனாக் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர் என்ற நிலை உள்ளது. அவர் வானளாவிய நீதி அதிகாரத்தையும் கொள்கை அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு தனது செயல்களை மேற்கொண்டு வருகிறார் என்றும் அந்த எம்.பி. தெரிவித்தார்.

கொமன்வெல்த் சபையில் முன்னோடியாக பிரிட்டிஷ் அரசு உள்ளது. அந்த அரசு கண்களை மூடிக் கொள்வதுடன் தமிழர்களை விமானத்தில் தொடர்ந்து ஏற்றி இலங்கைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

கோபிநாத் போன்றவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தகைய நபர்கள் இலங்கை திரும்பும்போது அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

இலங்கை அரசு பழிவாங்க விமானத்தில் ஏற்றி அனுப்பப்படும் தமிழர்கள் வர்ண பூச்சு இலக்குடன் அனுப்பும் நடவடிக்கையை பிரிட்டன் மேற்கொண்டு உள்ளது என்றும் மெக்டோனாக் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக