புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 600 பேர் இம்மாதம் 30ம் திகதி சமூகமயப்படுத்தப்பட உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க தெரிவித்தார்.
இது வரையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களை சமூகமயப்படுத்தும் போது அரசாங்கம் பிள்ளைகளுள்ள உறுப் பினர்களுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், இம்முறை விவாகமான உறுப் பினர்களுக்கு விசேட கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
30ம் திகதி விடுவிக்கப்பட உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும், புனர்வாழ்வளிக்கப்படும் சகல புலி உறுப்பினர்களும் இவ்வாண்டின் இறுதிக்குள் சமூகமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் திசாநாயக்க மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக