16 மார்ச், 2011

234 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நாளை


234 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நாளை (17) நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க 2009 ஜூன் மாத வாக்காளர் பட்டிய லின் பிரகாரம் 94 இலட்சத்து 44 ஆயிரத்து 455 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

23 மாவட்டங்க ளில் 324 உள்ளூ ராட்சி மன்றங்களுக்காக 3036 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 7 ஆயிரத்து 402 நிலையங்களில் இவர்கள் நாளை வாக்களிக்க வுள்ளனர். சுதந்திரமும் நியாயமுமான தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, நாளை (17) நடைபெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எவ்வித பயமும் சந்தேகமும் இன்றி வாக்காளர்கள் தமக்கு உரிய வாக்க ளிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்கு மாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடி யும்.

எனினும் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு அவர் கேட்டுள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பாதுகாப்புக்கென பொலிஸ், முப்படையினர் மற்றும் விசேட பொலிஸ் படையணி ஆகியோர் உள்ளடக்கிய 75 ஆயிரம் பேர்கொண்ட படையணி ஈடுபடுத்தப் படவுள்ளது.

அதற்கு மேலதிகமாக கலகமடக்கும் வீதித்தடை படையினர் ஆகியோரும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்தல் பணிகளுக்கென 80 ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

உதவி தெரிவத்தாட்சி அதிகாரி பிரதம வாக்கெண்ணும் அதிகாரி ஆகியோர் நேற்று (15) மாலையே தமக்கு உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் உள்ளூராட்சி மன்றத்துக்கான வாக்களிப்பை பின் போடுவதற்கு கட்சி செயலாளர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாகவும் அதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு மாத்திரமே தேர்தல் நடைபெறும். இங்கு 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையாளர் குறிப்பிட் டுள்ளார். 67 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக