16 மார்ச், 2011

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையில் இணக்கப்பாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள நடவடிக்கை





இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையி லான கடற்றொழில் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் சில இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவை இலங்கைக்கு அதிகம் சார்பானதாகவே உள்ளதாக கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதலாவது கூட்டம் 27 ஆம் திகதி புதுடில்லியில் நடக்க உள்ளதோடு இரண்டாவது கூட்டம் கொழும்பில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்த விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு மட்டங்களில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளி த்துள்ளன.

எமது பிரச்சினையை இந்திய அரசு உணர்வு பூர்வ மாகவே கவனிக்கிறது. இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் செய்மதி படங்களை இந்திய அரசுக்கு வழங்கியுள்ளோம்.

இலங்கைக் கடலில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். இதனை வரவேற்கிறோம். இந்திய தூதுவரை நான் நேரில் சந்தித்து பேசினேன். 27 ஆம் திகதி உயர் மட்ட குழுவொன்று இந்தியா செல்கிறது.

இரு நாடுகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான எமது தரப்பு நகல் வரைவு தயாரிக்கப்பட்டு விட்டது இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை முடிவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக