1 மார்ச், 2011

தாய்நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டோமென உறுதி பண்ணுவோம் !

தாய்நாட்டை ஒரு போதும் காட்டிக் கொடுக்கமாட்டோம் என்ற தீவிர மனவுறுதியுடன் சகலரும் செயலாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணி க்கப்பட்டிருக்கும் நீச்சல் தடாகத் தையும் உயர் பாதுகாப்பு செயன் முறையைப் பயிற்றுவிக்கும் பயிற்சி நிலையத்தையும் நேற்று திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சுனாமி அனர்த்தத்தைக் காரண மாகக் கொண்டு மாணவ மாணவிகளுக்கும் பிரதேச வாசிகளுக்கும் நீச்சலையும் உயிர்ப் பாதுகாப்பு செயல்முறைகளையும் கற்பிப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நீச்சல் தடாக தொகுதியின் முதற்கட்ட பணிக்காக 28 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அதில் 14 மில்லியன் ரூபா பணம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கண்காணிப்பின் கீழும் நெறிப்படுத்தலின் கீழும் தாய்வான் செஞ்சிலுவை சங்கம் வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டை, தேசத்தை நேசிக்கின்றவர்களை நாடே பாதுகாக்கின்றது. எமது சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொண்டு நாட்டை முன்னெடுத்துச் செல்கின்ற தேசத்தின் பிள்ளைகளாக எமது எதிர்கால சந்ததியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். நாடும் தேசமும் இன்றி வீரர்கள் தோன்றுவதில்லை.

ஒருபோதும் தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்ற தீவிர மனவுறுதியுடன் அனைவரும் செயலாற்ற வேண்டும். தேசிய கொடிக்கு தேசிய கீதத்திற்கு தலை வணங்கும் எதிர்கால சந்ததியொன்றை நாட்டில் கட்டியெழுப்ப வேண்டும். நாட்டை நேசிக்கின்ற எவரும் ஒருநாளும் துயரப்பட மாட்டார்கள்.

அதேநேரம் விளையாட்டு வாழ்க்கைக்கு அத்தியாவசியமான அம்சம். விளையாட்டில் ஈடுபடுவது பொழுது போக்கு மாத்திரமல்ல. எதிர்கால வாழ்வுக்குத் தேவைப்படுகின்ற வீரம், பொறுமை, தைரியம் என்பவை மாத்திரமல்ல எந்தவொரு சவாலுக்கும் முகம் கொடுக்கும் ஆற்றலும் கிட்டும்.

வீரம் என்பது இலங்கைத் தேசத்துக்கு புதியவொன்றல்ல. சவால்கள் வெற்றி கொள்ளும்போது அவற்றின் அளவையும் எண்ணிக்கையையும் பொருட்படுத்தாமல் திட்டமிட்ட முறையில் அவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டும். சரியான முறையில் திட்டமிடுவதன் மூலம் எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்ள முடியும் என்றார்.

அமைச்சர்களான பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, காமினி லொக்குகே, விமல் வீரவங்ச ஆகியோரும் துமிந்த சில்வா பா.உ உள்ளிட்ட அதிதிகளும் பாடசாலை அதிபர் கே. டீ. விமலசேன உள்ளிட்ட ஆசிரியர் குழாமும் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக