1 மார்ச், 2011

எல்லைக் கோட்டை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை

கொழும்பு நகர வீதிகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகள், லொறிகள், பஸ்கள் மற்றும் கொள்கலன் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் இடதுபுறத்திலுள்ள பாதைக் கோடு எல்லைக்குள் மாத்திரமே பயணிக்க வேண்டுமென பொலிஸ் வாகனப் போக்கு வரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிர திப் பொலிஸ்மா அதிபர் அசோக விஜய திலக தெரிவித்தார்.

இந்தக் கோட்டு எல்லைகளை மீறி நடு வீதியில் செல்லும் வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.

வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைப்பதற்கும், ஏனைய வாக னங்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் ஏதுவாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

இந்த விதிமுறைய மீறி வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து முதற் தடவை குற்றமிழைப் பவர்களுக்கு 1500 ரூபாவும், தொடர்ந்தும் அவர்கள் அதே குற்றத்தை இழைக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுமென்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

பஸ்கள் நடுவீதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் வீதிகளில் வாகன நெரிசலும், வீதி விபத்துக்களும் அதிகரித் திருப்பதால் அவற்றைத் தடுப்பதற்கும் நட வடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக