20 பிப்ரவரி, 2011

5ஆயிரம் முன்னாள் போராளிகள் 21மாதங்களாக தடுத்து வைப்பு

25 வருட கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 21 மாதங்களை கடந்தநிலையிலும் 5 ஆயிரம் முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பார்வையிடுவதற்கு ஐ.நா. அதிகாரிகளுக்கோ சர்வதேச செஞ்சிலுவை குழுவுக்கோ இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே கூறியுள்ளார்.

இவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2009 மே மாதம் முடிவடைந்த யுத்த வெற்றியை அடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 5 ஆயிரம் பேரை அரசாங்கம் ஏற்கனவே விடுதலை செய்துள்ளது. எனினும் 5 ஆயிரம் பேர் வரையானோர் தொடர்ந்தும் கடந்த 21 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படாத நிலையில் இன்னும் 18 ஆயிரம் தமிழ் மக்கள் நலன்புரி நிலையங்களில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர் என்றும் நில்பூனே தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக