30 மார்ச், 2011

இலங்கையருக்கான விசா விதிகளை தளர்த்தியுள்ள தென் கொரியா

இலங்கையர் உள்ளிட்ட தெற்காசிய வலய நாட்டவர்களுக்கான விசா விதிகளை தென் கொரியா தளர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன் மூலம் இனிவரும் காலங்களில் இலங்கையர்கள் தென் கொரியாவுக்கு விசா பெற குறைந்தபட்ச ஆவணங்களையே சமர்பிக்க வேண்டியிருக்கும். அத்துடன் குறைவான நிதி வளத்தை மட்டும் காண்பித்தாலும் போதுமாக இருக்கும்.

கடந்த காலங்களில் இலங்கையில் நிலவிய யுத்தம் காரணமாக சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே தென் கொரியா தனது விசா நடைமுறைகளைக் கடுமையாக அமுல்படுத்தியிருந்ததாக தற்போது அறிவித்துள்ளது.

தளர்த்தப்பட்டுள்ள விசா நடைமுறைகளின் மூலம் இலங்கையர்கள் தென் கொரியாவின் சுற்றுலாத் துறைக்குப் பங்களிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்நாடு குறிப்பிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக