விளக்கமறியலில் வைக்கப்பட்டிருகின்ற ரத்கம பிரதேச சபையின் புதிய தலைவர் நீதிமன்ற வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ரத்கம பிரதேச சபைக்கு போட்டியிட்டு 14 ஆயிரத்து 790 விருப்பு வாக்குகளை பெற்ற மனோஜ் மென்டிஸ் பிரதேச சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளும் கட்சியில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் வைத்து நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இவ்வாறான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மனோஜ் மென்டிஸ் பலப்பிட்டிய நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்துவரப்பட்டார்.
நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் ரத்கம பிரதேச சபையின் தலைவராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்ட மனோஜ் மென்டிஸ் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது காலி பெரலிய பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை வழக்கில் மனோஜ் மென்டிஸ் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக