22 நவம்பர், 2010

இந்திய அமைச்சர் கிருஷ்ணா 27ம் திகதி வடக்கு விஜயம் யாழ்., மன்னார் மாவட்டங்களில் பல்வேறு அபி.திட்டங்கள் அங்குரார்ப்பணம்


இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா எதிர்வரும் 27ம் திகதி சனிக் கிழமை வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்க ளுக்கு செல்லும் எஸ். எம். கிருஷ்ணா, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரம்பரிய சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வர்த்தக வாணிப த்துறை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்த் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

வட மாகாணத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் ஐம்பதாயிரம் வீடுகள் நிர்மாணிக்க, புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த வட மாகாண ஆளுநர், இவற்றில் ஆயிரம் வீடுகளை புதிதாக நிர்மாணிக்கும் பரீட்சார்த்த நடவடிக்கையை யாழ்ப்பாணத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய கவுன்ஸிலர் பிரிவையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதேவேளை மதவாச்சி முதல் தலைமன்னார் வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணிகளும் இந்திய அரசின் நிதியுதவியில் முன்னெடுக்கப்ப டவுள்ளது. இதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக