6 அக்டோபர், 2010

பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தண்டனை வழங்கியதாக பொய்ப்பிரசாரம் அரசியலமைப்பு அதிகாரத்தின் பிரகாரமே செயற்பட்டார் - பிரதியமைச்சர் விஜிதமுனி சொய்சா






சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தண்டனை வழங்கியதாக எதிர்க்கட்சிகள் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றன. ஜனாதிபதி யாரையும் தண்டிக்கவில்லை. அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரமே செயற்பட்டாரென சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி த சொய்சா கூறினார்.

மாகாண சபை (திருத்த) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :-

பொன்சேகாவை கவனிப்பது சிறை அதிகாரிகளின் பொறுப்பாகுமென ஐ. தே. க. தலைவர் ஏற்றுக்கொள்கிறார். பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித் தும் ரணில் சபையில் கருத்துக் கூறி னார்.

சிறைக் கைதிகள் மன்னிப்புக் கோருவதற்கு சில நடைமுறைகள் காணப்படுகின்றன. நன்னடத்தை காரணமாக முன்கூட்டி கைதிகள் விடுவிக்கப்படுவதுண்டு. கைதிகள் அனுமதிப்பத்திர சபைக்கு தமது விண்ணப்பத்தை முன்வைக்க வேண்டும்.

அதன் சிபார்சுகள் எமது அமைச்ச ருக்கு அனுப்பப்பட்டு அதன் பின் பொது மன்னிப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

ஐ. தே. கவும் ஜே. வி. பியும் இன்று அரசியல் எதிர்காலமின்றி தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றன. அதனால் பொன்சேகாவின் விவகாரத்தை தூக்கிப் பிடித்து அரசியல் இலாபம் பெற அவை முயல்கின்றன.

பொன்சேகாவை விடுதலை செய்யும் உண்மையான நோக்கம் இருந்தால் அதற்கு வேறு வழிவகைகள் உள்ளன. பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட போதே ஜனாதிபதிக்கு அவரை சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் பொன்சேகாவுடன் போட்டியிட்டு அவரை தோற்கடித்த பின்னரே உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியாக இருந்த போது பொன்சேகா 8000 க்கும் அதிகமான இராணுவ வீரர்களை தண்டித்து சிறைக்கு அனுப்பினார் அவற்றில் சுமார் 4000 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப் பட்டுள்ளது.

பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்பட்டிருக்கும். எதிர்க் கட்சி எம்.பி.கள் கூட கைதாகியிருப்பர்.

இன்னும் 5 வருடத்தில் ஆட்சிக்கு வர முடியும் என ஐ. தே. க. கனவு காண்கிறது. ஆனால் 15 – 20 வரு டங்கள் ஆனாலும் அதனால் ஆட்சி க்கு வரமுடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக