2 அக்டோபர், 2010

செல்லுபடியாகும் காலம் முடிவடைந்தால் மட்டுமே புதிய நடைமுறை






m' மற்றும் 'n' தொடரிலக்கம் கொண்ட கடவுச்சீட்டை வைத்திருப்போர் தமது கடவுச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த பின்னர் புதிய கடவுச்சீட்டொன்றை பெற வேண்டிய தேவை ஏற்பட்டால் மட்டுமே புதிய விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

m’ மற்றும் 'n' தொடரிலக்கம் கொண்ட கடவுச்சீட்டை வைத்திருக்கும் எல்லோரும் புதிய கடவுச் சீட்டொன்றுக்காக விண்ணப்பிக்க வேண்டும் என வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது என குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார். ’m’ மற்றும் 'n' கடவுச் சீட்டை வைத்திருப்போரின் சகல விதமாக தரவுகளும் தற்போது திணைக்களத்தின் தரவுக் களஞ்சியத்தில் சேமிக்கப்பட்ட நிலையில் உள்ளன.

மீண்டும் மீண்டும் அதே நபரிடம் அவர் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தடவையும் அதே ஆவணங்களை கேட்பது நேரத்தை காலத்தை வீணடிக்கும் வேலை என்பதுடன் விண்ணப்பதாரியும் வீண் அலைச்சல், செலவுகளுக்கும் உள்ளா கின்றார்.

இதனை தடுக்கும் நடவடிக்கையாக தனது கடவுச்சீட்டு காலாவதியான பின்னர் புதுப்பிப்பதற்கு பக்கங்கள் இல்லாதவிடத்து புதிய கடவுச்சீட்டொன்றை பெற வேண்டும்.

இதன் போது விண்ணப்பதாரி திணைக் களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் விண்ணப்பதாரியின் தற்போதைய இரண்டு புகைப்படங்களை இணைத்து கையளித்தால் மட்டும் போதுமானது.

ஆவணங்களை இணைத்தல், சமாதான நீதவானின் உறுதிப்படுத்தல் அவசியமில்லை. என்றும் பிரதான கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

சில ஊடகங்களிலும், இணையத் தளங் களிலும் தவறான செய்திகள் வெளிவந்தன என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக