31 ஜூலை, 2010

விசா வழங்க மலேசியா புதிய நடைமுறை






மலேசியா வர விரும்பும் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது மலேசியா.

விசா கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர், மலேசியா சேர்ந்தவரை கணவராகவோஅல்லது மனைவியாகவோ கொண்டவராக இருந்தால் அல்லது தொழில் துறை சார்ந்த நிபுணராகவோ இருந்தால் அல்லது 12 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தவராகவோ இருந்தால், அவர்களுக்கு சிறப்பு விசா அனுமதி வழங்க பரிசீலிக்கப்படும் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

புதிய நடைமுறையின் படி, வயது, கல்வித் தகுதி, மலேசியாவில் உள்ளவர்களுடன் உள்ள உறவு போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு மதிப்புஎண் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

65 புள்ளிகளுக்கு மேல் பெரும் விண்ணப்பதாரர்களுக்கு விசா வழங்க பரிசீலிக்கப்படும். எனினும் அனைத்து விண்ணப்பங்களையும் போலீஸக்ஷ்ர் ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இப்புதிய திட்டம் ஜூலை 15-லிருந்து அமலிலுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

1 கருத்து:

  1. மேற்கூறிய கருத்துைர செய்திக்கு நன்றி . ஜோதிடத்தை பற்றி தெரிந்து கொள்ள www.yourastrology.co.in என்ற தளத்திற்கு சென்று பார்க்கலாம். இதில் கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு என உங்கள் எதிர்கால வாழ்கையை பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும், 'ஜாமக்கோல் ஜோதிடம் சாப்ட்வேர்' இந்த தளத்தில் தான் முதன்மையாக வெளியிட பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு