வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையாளர்களுக்கு உயர் தொழில் நுட்ப அறிவை வழங்கும் திட்டமொன்றை தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆரம்பித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலக மட்டத்தில் செயற்படும் விதாதா வள நிலையங் களினூடாக கைத்தொழிலாளர்களுக்கு தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுகிறது.
யோகட் கைத்தொழில், பேக்கரி கைத்தொழில், மரக்கறி சார் உணவு உற்பத்தி என்பவற்றிற்காக உயர் தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுவதாக அமைச்சு கூறியது. இதன் காரணமாக குறித்த துறைகளில் கைத்தொழில்களை ஆரம்பிக்க கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களினூடாக கண்டுபிடிக்கப்படும் புதிய தொழில் நுட்ப அறிவை விதாதாவள நிலையங்களினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கைத்தொழில் மற்றும் வர்த்தகங்கள் ஆரம்பிப்பதற்காக வழங்கப்படுகிறது. இதற்காக பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது.
யோகட், ஜாம், கோடியல், முறுக்கு வகை, பலகாரம், ஊதுபத்தி, மரக்கறி, பழவகை, கடதாசி உற்பத்தி, அரிசி சார் பேக்கரி கைத்தொழில், ஸ்கிரீன் பிரின்ட் தொழில் நுட்பம் என்பவற்றுக்கான அறிவு, வழிகாட்டல் என்பன தற்பொழுது சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழி லாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக